எபேசு சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1205 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ளவர்களில் யாராவது ஒரு புதிய டாட்ஜ் மோட்டார் வாகனத்தை... லைசென்ஸ் நம்பர் டபுள்யு.எக்ஸ்.2129 '(W.X. 2129)'' உள்ள வண்டியை தெருவுக்கு அப்பால் நிறுத்தி வைத்துள்ளீர்களா? அவ்வண்டியில் ஹெட்லைட் உட்பட அனைத்து விளக்குகளும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. அந்த வண்டியை ஓட்டி வந்தவர்கள் யாராவது இங்கு இருப்பின், வெளியே போய் விளக்குகளை அணைத்துவிட்டு வாருங்கள். எட்டாம் தெருவில் இடது கை பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அது நியூ ஆல்பனியில் பதிவு செய்யப்பட்டலைசென்ஸ் நம்பர் என்று எண்ணுகிறேன், அது டபுள்யு.எக்ஸ்.2129 ஆகும். அது ஒரு சிவப்பு நிற டாட்ஜ் வண்டியாகும். 59ம் ஆண்டு அல்லது 60ம் ஆண்டு மாடல் வண்டியாக இருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் யாராவது எங்கிருந்தாவது அதை ஓட்டி வந்தார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. எனவே அது ஒரு நல்ல காரியம் தான். பெண்கள் இவ்வாறு மறந்துவிட்டு வந்துவிடுவார்கள் என்று நான் கூறப் போவதில்லை. நானுங்கூட இவ்வாறு செய்வதுண்டு. 2நல்லது, இன்றிரவில் மீண்டும் இவ்வாராதனைக்காக கூடி வந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் யாவரும் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொள்ளும் வேளையானது நிச்சயமாக நன்றாகவே உள்ளது. அதை நீங்கள் மகிழ்வுடன் அனுபவிக்கிறீர்களா? (சபையோர் 'ஆமென்'' என்று கூறி பதிலளிக்கின்றனர் - ஆசி). ஓ! நமக்கு ஒரு அற்புதமான, அற்புதமான வேளை உண்டாயிருக்கிறது என்றால் அது சரிதான். இப்பொழுதும், நாம் தொடர்ச்சியாக இதைக் கேட்க தேவன் நமக்கு உதவியளிப்பார் என்று நம்புகிறோம். இப்பொழுது, என்னுடைய சகோதரன் போய் ஒரு கரும்பலகையை இங்கே கொண்டு வந்திருக்கிறார், ஆனால் அது போதுமான அளவு உயரத்தில் அமைக்கப்படாமல், மிகவும் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நல்லது; எனவே நாளை, நான் சில வெவ்வேறு விஷயங்களை கரும்பலகையில் வரைந்திட விரும்புகிறேன், அதினால் நீங்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும், எனவே அதற்கேற்றவாறு நான் கரும் பலகையை சற்று உயர்த்தி அமைத்திடுவேன். 3நேற்றிரவில் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தோம். புத்திகூர்மையுள்ள எனது சிறிய மகள் சாரா என்னுடைய பிரசங்கத்திலிருந்து குறிப்புகளை அதில் எழுதி வைத்திருந்தாள். அதில் அவள் ஏசாயா மற்றும் மத்தேயு மற்றும் ஏனைய அதிகாரங்களையெல்லாம் சரியாக குறித்தே வைத்திருந்தாள். அத்தாளின் முடிவில் பாதாளத்திற்கு இனிமேல் எந்த வெற்றியும் கிடையாது, மரணத்தின் கூர் அல்லது கொடுக்கு பிடுங்கப்பட்டு விட்டது'' என்று எழுதி வைத்திருந்தாள், அவளுக்கு ஏறக்குறைய ஏழு வயதாகின்றது. அதன்பிறகு, “வெளிப்படுத்தல்'' (”Revelation“) என்று எழுதுவதற்குப் பதிலாக ”புரட்சிகளின் புத்தகம்'' (Book of Revolutions) என்று எழுதி வைத்து விட்டாள். நல்லது, இவ்வாறு அவள் எழுதியதின் மூலம், சிறுவர்களும் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயலுகிறார்கள் என்பதையே காண்பிக்கிறது. அப்படியில்லையா? சகோ.காலின்ஸ் அவர்களுடைய சிறிய மகளும் பின்னால் அங்கே உட்கார்ந்து இருக்கிறாள். அவர்கள் “புரட்சி'' (Revolution) என்றே எழுதி விட்டார்கள். சகோ.நெவில் அவர்கள், 'புரட்சிகளின் நாள்'' என்று கூறுகிறார். சாரா எழுதியவற்றோடு சகோ. நெவில் தன் ஒப்புதலைத் தெரிவிக்கிறார். நாம் யாவரும் அதையே செய்ய வேண்டும் என்று நானும் கருதுகிறேன். நல்லது, நாம் உண்மையிலேயே மகத்தான வேளையை உடையவர்களாய் இருக்கிறோம். என்னே, கர்த்தர் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வந்த பின்னர், இக்காலையில் நான் ஓர் அறைக்குள் படிப்பதற்காகச் சென்று விட்டு சற்று முன்னதாகத்தான் வெளியே வந்தேன். அற்புதமானதொரு சமயம் எனக்கு உண்டாயிருந்தது. நேற்றிர விலும் வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். 4அதிகாலையில் 2.30 மணியளவில் வடக்குப் பிரதேசத்தி லிருந்து சிலர் வந்து, என்னை எழுப்பி, மரித்துக் கொண்டிருக்கிற ஒரு சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி கேட்டார்கள். அப்பெண் நிச்சயம் நலமடைய கர்த்தர் செய்வார் என்று நான் நம்புகிறேன். அச்சிறு பெண்ணுக்கு ஜெபிக்கும்படி அவர்கள் இண்டியானா விலுள்ள பெட்ஃபோர்ட் என்ற அவ்வளவு தூரமான இடத்தி லிருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு மனிதர்கள் அவ்வளவு தூரத்தி லிருந்து நேற்றிரவு ஆராதனைக்காக வந்துவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டு, மீண்டும் வந்திருக் கிறார்கள், மறுபடியும் அவ்வளவு தொலைவான தங்கள் ஊருக்கு திரும்பிப் போயாக வேண்டும். இரவு முழுவதும் காரோட்டிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். மக்களுக்கு இத்தகைய நம்பிக்கை உண்டாயிருந்து, தேவனை அவர்கள் விசுவாசிப்பதை அறிய நன்றாக இருக்கிறது. நாம் வாழும் இந்நாள் மகத்தானதாகும். இப்பொழுது இச் சபைக்காலங்களின் செய்திகளில் மேலும் மேலும் நாம் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 5ஒவ்வொரு இரவிலும் நாம் சீக்கிரமாகவே ஆராதனையை ஆரம்பித்துவிட முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிச் செய் தால், சீக்கிரமாகவே உங்களை திரும்பி போக விட்டு விடலாம். அது நல்லது என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படிச் செய்தால், வேலைக்குப் போகிறவர்கள், சீக்கிரமாக வீடு திரும்பி, தங்கள் அலுவல்களுக்கு இடையூறின்றி போக வசதியாக இருக்கும். கடந்த இரவில், ஒன்பது மணி கடந்து 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, நாம் வெளியேறினோம், அதாவது நான் கூட்டத்தை அப்பொழுது முடித்து விட்டேன். இன்றிரவில் நம்மிடையே வெளியூர் களிலிருந்து இங்கு விஜயம் செய்யும் அனைத்து ஊழியக்காரர்களும் இருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நான் சகோ. ஜூனியர் ஜாக்சனையும், சகோ. கார்பெண்டரையும், அங்கிருக்கும் சபையிலுள்ள நம்முடைய சகோதரனையும், மற்றும் இங்கே மேடையிலும் மற்றும் கூட்டத்திலும் ஏனைய அநேகரையும் காண்கிறேன். 6என்னோடு மிஷனரி ஊழியங்களில் இருந்து வந்த என்னுடைய விலையேறப்பெற்ற சிநேகிதர் ஒருவர், அதாவது சகோதரன் ஆண்ட்ரூ , மற்றும் சகோதரி ஆண்ட்ரூ ஆகியோர் நேற்றிரவு கூட்டத்திற்கு வந்திருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் சீனா தேசத்தின் மிகவும் உட்பிரதேசத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த வருடத்தில் ஜமெய்க்கா நாட்டில் எங்களுக்கு அருமையானதொரு சமயம் உண்டாயிருந்தது. எங்களுக்கு ஒரு மகத்தான வேளை உண்டாயிருந்தது. நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இன்றிரவுக் கூட்டத்தில் சகோதரன் ஆண்ட்ரூ மற்றும் சகோதரி ஆண்ட்ரூ ஆகியோர் பிரசன்னமாயிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். இக்கட்டிடம் சரியாக அமைக்கப் படவில்லை. எனவே... ஆம் அவர்கள் அங்கே கடைசியில் அமர்ந் திருக்கிறார்கள். நீங்கள் சற்று எழுந்து நின்று உங்களைக் காண்பிக்க முடியுமா என்று அறிய விரும்புகிறேன். சகோதரன் ஆண்ட்ரூ , சகோதரி ஆண்ட்ரூ அவர்களே, ஒரு க்ஷணம் சற்று எழுந்து நில்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. ஆண்ட்ரூ , மற்றும் சகோதரி ஆண்ட்ரூ அவர்களே! உங்களிருவரையும் காண நாங்கள் மகிழ்வெய்துகிறோம். சென்ற வருடம் அவர்கள் தேசத்திற்கு நான் சென்றிருந்தபோது, இங்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். 7இப்பொழுது அவர்களுக்கு முன்பாக முகஸ்துதியாக இதை நான் கூறவில்லை, ஆனால், அவர்கள் தான் உண்மையான மிஷனரி மார்கள் என்று நான் அழைப்பதுண்டு. (இன்னும் கூடுதலாக நல்ல காரியங்களை அவர்களைப் பற்றி நான் சொல்ல விரும்பினேன், ஆனால் இப்பொழுது நான் அவற்றை அவர்களுக்கு முன்பாக சொல்ல விரும்பவில்லை). நாளை இரவு அவர்கள் இங்கிருந்தால், நாங்கள் வருவதற்கு முன்னர் அவர்கள் பேசட்டும். மிஷனரி ஊழியக்களங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்பதைக் குறித்து அவர்கள் கூற நீங்கள் கேட்க விரும்புகிறேன். சீனாவின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் தூரமான இடங்களில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இருந்திருக்கவில்லை. அநேகம் அநேகமாண்டுகளாக அவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். ஒரு மோட்டார் வாகனத்தையோ, ஒரு இரயில் வண்டியையோ, அநேகமாண்டுகளாக அங்கே அவர்கள் பார்த்திருக்கவேயில்லையாம். சகோதரி எவ்வாறு அவர்களுடைய ரொட்டியை... அவர்கள் மாவைப் பிசைந்து அடிப்பார்களாம். இவ்வளவு சிரமங்கள் மத்தியில் அவர்கள் செய்த ஊழியம் தான் உண்மையான மிஷனரி ஊழியமாகும். அங்குள்ள ஜனங்கள் காயமடைந்து இரணங்களோடு வரும் போது, அங்கே மருத்துவராகவும் விளங்கிய சகோ.ஆண்ட்ரூ அவர்கள் கையில் ஊசியையும் நூலையும் கொண்டு இரணங்களை தைத்து விட வேண்டியிருக்கும். அவ்வளவு தூரம் அடிப்படை வசதிகளின்றி இருந்திருக்கிறது. அங்கே மக்கள் பிள்ளைகளைப் பெறும்போது, சகோதரி ஆண்ட்ரூ செவிலியாகவும் பணிபுரிந்திருப்பார்கள். சகோதரர் ஆண்ட்ரூ மருத்துவராக இருந்திருக்கிறார். அம்மக்கள் இவர்களை சார்ந்து இருந்திருக்கிறார்கள். 8இங்கிலாந்து தேசத்திலுள்ள பெந்தெகொஸ்தே மிஷன் ஆஃப் இங்கிலாந்து'' என்று மிஷனரி ஊழிய நிறுவனமானது, 'களத்திற்குத் திரும்பிச் செல்ல இவர்கள் இருவரும் இயலாத அளவுக்கு வயது சென்றவர்களாகிவிட்டனர்'' என்று கூறிவிட்டது. அவர்கள் வசதியாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கவில்லை. (அவர்கள் எவ்வளவாக சிறந்த மிஷனரிகளாக விளங்கினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன்). அவர்கள் வேறு யாரையும் சாராமல் சுயமாகவே அங்கே திரும்பிச் சென்றார்கள். இப்பொழுது ஜமெய்க்காவுக்கு திரும்பிப் போய் அப்பகுதிகளில் மிஷனரி ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். சகோதரர் ஃப்ரெட் சாத்மன் அவர்களும் நானும் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்களை சந்திக்கும் சிலாக்கியம் எங்களுக்கு கிட்டியது. எத்தனை இன்பமான வேளையை அவர்கள் எங்களுக்குக் கொடுத் தார்கள் தெரியுமா? இனிமையான கிறிஸ்தவர்களாக அவர்கள் எங்களுக்கு இருந்தார்கள். அவர்கள் போன பிறகு அவர்களுக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான் சூட்டுவதைக் காட்டிலும், இங்கே அவர்கள் இருக்கையிலே அவர்களுக்கு ஒரு சிறு ரோஜா மொட்டைக் கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் உண்மை யாகவே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் என் மனைவியிடம், சகோதரி ஆண்ட்ரூ அவர்களைப் போல் ஒரு அருமையான, இனிய கிறிஸ்தவ பெண்மணியை பார்க்க முடியாது என்று கூறினேன். கிறிஸ்துவுக் குள்ளாக அச்சகோதரியின் வாழ்க்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சகோதரன் ஆண்ட்ரூ அவர்களும் அப்படித்தான். ஆகவே இப்பொழுது உங்கள் நடுவில் எழும்பி நின்ற அவர்களை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்று உறுதியுள்ளவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் செல்லும் முன்னர், இந்த முழுச்சபையும் அவர்களுடன் கைகுலுக்கி, அவர்கள் உங்களிடம் பேசுவதைக் கேட்க வேண்டுமென விரும்புகிறேன். நாளை இரவு கர்த்தருக்கு சித்தமானால், நாம் இரண்டாவது சபைக் காலத்தைக் குறித்த செய்தியைத் துவக்குவோம். இன்றி ரவில் நாம் முதலாம் சபைக் காலத்தைக் குறித்த செய்தியை ஆரம்பிக்கிறோம். கர்த்தர் நமக்கென ஒரு ஆசீர்வாதத்தை வைத்து வைத்திருக்கிறார் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். 9நான் ஏற்கனவே கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, வேதசாஸ்திரத்தைப் பொறுத்த மட்டில், அதைக் கூறுகிற வர்களோடு நாம் சில வேளைகளில் ஒத்துப் போகாமலிருக்கக் கூடும். வரலாற்று ரீதியான வருடம் மாதம் தேதிகளை, நான் அதிகாரபூர்வமான - நம்பத்தகுந்த வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுடைய குறிப்புகள் ஒருபோதும் எந்தக் கட்சியையும் ஒருதலைப் பட்சமாக எடுத்துக்கொள்ள ஆர்வம் கொள்ளாமல், அந்தந்தக் காலங்களில் சபைகள் என்ன செய்தனவோ, அது என்னவாயிருந்தாலும் சரி, நடந்தவற்றை மறைக்காமல், அவ்வுண்மைகளை அவர்கள் அப்படியே எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் எந்த அணியையும் சாராமல் உள்ளதை உள்ளபடியே எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் தெய்வீக வியாக்கியானத்தைப் பொறுத்த மட்டில், எனக்குத் தெரிந்த வரையில், அதை நான் அளிக்கிறேன். சில சமயங்களில் நான் சற்று கடுமையாக பேசுவதைப் போல் இருந்தால், அவ்வாறு பேச வேண்டுமென்று நான் விரும்பி செய்வது கிடையாது. என்னைப் பற்றி அறிந்த எவரும் நான் அவ்வாறு செய்வதில்லை என்றறிவர். நான் விரும்புவது என்ன வெனில்... ஆனால் ஒரு கருத்தைச் சரியாக விளங்க வைக்க வேண்டுமெனில், அதை ஆணித்தரமாகத் தான் எடுத்துரைக்க வேண்டும். ஒரு பலகையில் ஒரு ஆணியை வெறுமனே அமுக்கி வைத்தால், அது அதில் உறுதியாகப் பிடிப்புக் கொண்டிருக்காது. ஆனால் ஆணியைப் பலகையில் நன்கு சுத்தியால் அடித்து இறுக்கி அதை மடக்கி விட்டால் தான் அது பலகையில் உறுதியாக நிலைத்திருக்கும். அவ்விதமாகத்தான் நானும் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். எல்லாவித ஸ்தாபனங்களையும் குறித்து நான் பேசுகிறேன், எனவே நான் எல்லாவற்றிலும் முரண்பட்டே முயற்சிக்கிறேன் என்பதல்ல. 10மாட்டு மந்தைகளை இனம் பிரிப்பதைக் குறித்து நான் அடிக்கடி கூறியுள்ளேன். அநேகமாண்டுகளுக்கு முன்பாக, நான் மாட்டு மந்தையை மேய்ச்சல் கருகளுக்கு ஒட்டிக் செல்வதில் ஈடுபட்டிருந்ததுண்டு வசந்த காலத்தில் இவ்வாறு மாடுகளை அதனதன் இனமாக ஒன்று சேர்த்து மந்தையாக ஆக்குவதற்காக ஓரிடத்தில் சேர்ப்பதற்காக இவ்வாறு ட்ரிஃப்ட் எஃபன்ஸ் (Drift Fence) என்று குறிப்பிட்ட ஓரிடத்தில் ஓட்டிச் சேர்ப்பதுண்டு. ஹியர்ஃேபார்ட் அசோஸியேஷன் என்ற நிறுவனத்திற்காக நான் இந்த வேலையைச் செய்தேன். அவர்கள் தங்கள் மந்தைகளை ட்ரபிள்சம் ரிவர் வெலி (Troublesome River Valley) என்ற இடத்தில் மேய்த்தனர். நான் அப்பொழுது குதிரையின் சேணத்தின் முகப்புப் பகுதியில் என் காலை தொங்க வைத்துக் கொண்டு மாட்டு மந்தைகள் அவ்வாறு அப்பிரதேசத்திற்குள் பிரவேசிப் பதை, அம்மாட்டுப் பண்ணையின் ரேஞ்சர் கவனித்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அரசுக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் உங்கள் மாடுகளை மேய்க்க வேண்டுமானால், புல்வெளியில் மேய்ப்பதற்கு ஒரு மாட்டுக்கு ஒரு டன் (1000 கிலோ) அளவுக்கு அந்நிலத்தில் நீங்கள் புல்லை வளர்த்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் அங்கே மேய்க்க முடியும். இத்தனை மாடுகளை நீங்கள் மேய்க்க வேண்டுமானால் அதற்கேற்ற அளவுக்கு அங்கு புல்லை வளர்த்து, அறுத்து அதைக் காய வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டுப் பண்ணை நிலத்திலும் எந்த அளவுக்கு புல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சரியாகத்தான் அதினுள் மாடுகளை மேய்க்க உள்ளே கொண்டு செல்ல முடியும். 11அங்கே அம்மாடுகள் பலவிதமான சூட்டு அடையாளக் குறிகளோடு உள்ளே சென்று கொண்டிருந்தன. சிலவற்றிற்கு “பார் எக்ஸ்'' (Bar X) என்ற அடையாளக் குறி இருந்தது. எங்கள் பண்ணைக்கு அடுத்தாற்போல் இருந்த திருவாளர் க்ரீம்ஸ் என்பவருடைய மாடுகளுக்கு ”டயமண்ட் டி'' என்று குறி இருந்தது. ஒரு முனையில் 'டி' என்றும், மற்ற முனையில் 'டயமண்ட்' என்றும் இருந்தது. ட்ரபிள்சம் ரிவர் என்ற இடத்திற்கு முன்னால் “லேஸி கே'' (Lazy K) என்று பெயரிடப்பட்டவைகள் இருந்தன. எங்களுடைய மாடுகளுக்கு பெயர் 'டர்க்கி ட்ராக்'' (Turkey Track) என்பதாகும். எங்கள் மேய்ச்சல் நிலத்திற்கு கீழ்ப் பக்கத்தில் மேய்ந்தவைகளுக்கு ட்ரைபாட் (Tripod) என்ற பெயருள்ள வைகள் இருந்தன. ஆகவே இவ்வாறு பல்வேறு விதமான அடையாளப் பெயர்க்குறிகள் கொண்ட மாடுகள் உள்ளே சென்று கொண்டிருந்தன. இவ்வாறு வெளி நிலங்களில் மேய்ச்சலுக்காக பிரவேசிக்கும் மாடுகளை உற்றுக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ரேஞ்சர் (ரேஞ்சர் என்றால் மாடுகள் மேய்வதற்காக உள்ள வெளி நிலங்களில் அவைகளை கண்காணித்து ரோந்து சுற்றி மேற் பார்வை யிடும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்பவர் - மொழி பெயர்ப் பாளர்) ஒருபோதும் மாடுகளுக்கு சூடுபோட்டு இடப்பட்டுள்ள அவற்றின் அடையாளப் பெயர் குறிகளைப் பற்றி கவனம் செலுத்தவேயில்லை. சில மாடுகளுக்கு அவ்வடையாளப் பெயர் குறிகள் அவற்றின் இடது பக்கத்தில் இடம் பெற்றிருந்தன. எனவே அவரால் அது என்ன பெயர்குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனிக்க இயலாது. ஆகவே அவர் அதற்கு என்ன பெயர்குறி இடப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டிருக்கவில்லை. எந்த மாட்டிற்கும் அதன் இனத்தைக் காட்டும் அதன் இரத்தத்தின் அடையாளச் சீட்டு அதின் காதில் இருந்தாலொழிய, உள்ளே பிரவேசிக்காமல் இருக்கும்படி நிச்சயப்படுத்தினவராக இருந்தார். ஒவ்வொரு மாடும் சுத்தமான ஹியர்ஃபோர்ட் என்ற இனத்தைச் சேர்ந்தவைகளாக மட்டுமே இருக்க வேண்டும், அல்லாவிடில் அவைகள் அந்த காட்டுக்குள் மேயப் போக முடியாது. அதற்கு என்ன பெயர்கள் வேண்டுமானாலும் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனால் எந்த வேறுபாடும் ஏற்படுவதில்லை. ஆனால் அதன் காதில் கோர்த்து தொங்கவிடப்பட்டுள்ள என்ன இரத்தத்தையுடையது என்பதைக் காட்டும் அடையாளச் சீட்டே அங்கு முக்கியம். நியாயத்தீர்ப்பிலும் காரியமானது அவ்வாறே இருக்கும் என்று எண்ணுகிறேன். என்ன வித்தியாசமான பெயர்கள் நமக்கு இருக் கிறது என்பது ஒரு பொருட்டல்ல. ஆண்டவர் இரத்த அடையாளச் சீட்டு இருக்கிறதா என்பதை மட்டுமே கவனித்துப் பார்ப்பார். ''இரத்தத்தை நான் காண்கையில் நான் உங்களை கடந்து செல்லு வேன்'' (சகோ.பிரான்ஹாம் அவர்கள் மைக்ரபோனைப் பற்றி ஒரு சகோதரனிடம் பேசுகிறார் - ஆசி) 12இன்றிரவு கூடிய வரை முன்கூட்டியே முடித்துவிட நாங்கள் முயற்சி செய்கிறோம், அதனால், நாளை இரவுக் கூட்டத்திற்கு வந்து இந்த சபைக்காலங்களைப் பற்றிப் பார்க்க, நமக்கு இயலும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பொதிந்து சாலையின் தொங்கலில் கிடக்கிற சில மகத்தான காரியங்களை நான் முழுவதும் கூறாமல், தேக்கி வைக்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. யாவற்றையும் ஒரே இராத்திரியில் கொடுத்துவிட வேண்டும் என்று கூட விழை கிறேன். அதுவே என்னுடைய இயல்பு என்று அறிவீர்களாக. ஆனால் ஒவ்வொரு இரவிலும் கொடுக்கத்தக்கதாக சிலவற்றை தேக்கி வைத்திருந்து ஒவ்வொன்றாகத்தான் கொடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது, இந்த மகத்தான புத்தகத்தை நாம் திறக்கும் முன்னர், நாம் தலைகளை வணங்கி, பயபக்தியுடன் ஜெபிப்பதற்காக நாம் சற்று நேரம் எழுந்து நிற்போமாக. அப்பொழுது இயன்றவரை நமது இடங்களை மாற்றிக்கொள்வோமாக. 13எங்கள் பரம பிதாவே, நாங்கள் மீண்டும், உம்முடைய மகத்தான பரிசுத்த சிம்மாசனத்தை, விசுவாசத்தில் தள்ளாட்ட மில்லாமலும், நாங்கள் வரும்படி, அழைக்கப்பட்டபடியாலும் அணுகுகிறோம். நாங்கள் இங்கே, ஒரு குறிப்பிட்ட சபையின் பெயராலோ அல்லது ஒரு மதஸ்தாபனத்தின் பெயராலோ, அல்லது இங்கிருக்கிற இந்த சபையின் பெயரைக் கொண்டோ , அல்லது எங்களது சொந்தப் பெயரிலோ, உமது சமுகத்தில் வரு கிறோம் என்று எங்களால் சொல்ல முடியாது. அந்தப் பெயர்களைக் குறித்து நாங்கள் நிச்சமற்றிருப்பதோடு, தேவனுடைய சமுகத்தில் அவர் பேசுவதைக் கேட்க எங்களுக்கு சமுகமளிப்பீரோ என்பதும் உறுதியல்ல. ஆனால், என் நாமத்தினால் பிதாவை நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, நான் அதை செய்வேன்'' என்று இயேசு கூறியுள்ளபோது, நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே தான் உம்மிடம் வருகிறோம். எங்களுக்கு நீர் செவி கொடுக்கப் போகிறீரென விசுவாசிக்கிறோம். கடந்து போன காலங்களில் வாழ்ந்த இரத்த சாட்சிகளைக் குறித்து நாங்கள் படிக்கையில், அவர்கள் அக்காலங்களில் எவ்வாறு தங்கள் சாட்சியை தங்களுடைய சொந்த இரத்தத்தால் முத்திரை யிட்டார்கள் என்பதை அறிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களைப் பற்றி படிக்கும் பொழுது, இக்காலத்தில் வாழும் நாங்கள் அவர்களை விட மிகவும் குறைவாகவே செய்கிறோம் என்பதாக உணருகிறோம். நாங்கள் உமக்கடுத்தவைகளிலே செயல்படுகையில், எங்களில் காணப்படுகிற அசட்டையான போக்கை எங்களுக்கு மன்னித்தருள வேண்டு மென நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், கர்த்தாவே! உம்முடைய வசனத்தை நாங்கள் படிக்கையில், புதிய அபிஷேகத்தை எங்களுக்குத் தாரும், அதினால் கடந்த காலத்தில், கிரயம் கொடுத்து மீட்கப்பட்ட, ஜீவனுள்ள தேவனுடைய இந்த மகத்தான சபைக்குரிய பரிசுத்த வேத பிரமாணத்தை அதற்கு உருவாக்கிக் கொடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட துன்பங்கள் உண்டாயிருந்தன என்பதை நாங்கள் கண்ணுறும்படி எங்களுக்குச் செய்தருளும். 14பரம பிதாவே, நாங்கள் என்ன பேச வேண்டுமென்பதை அறியவில்லை. எனவே எங்கள் மூலமாக நீர் பேசியருளும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அவருடைய சபையில் நாங்கள் தேவனுடைய சமுகத்தில் இருந்து, உமக்கு காத்திருந்து இதே ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இந்த ஜனங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், இவர்களுக்குள் இருக்கும் வல்லமைகளை யெல்லாம் இன்றிரவில் ஒன்றிணைத்து, யாவருடைய இருதயங் களிலும் சுவிசேஷத்தை விதைத்து, அதினால் நாங்கள் புதியதொரு நிலையை எடுத்துக் கொள்ளவும், வரப்போகும் காலத்திற்கான ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம் இதை எங்களுக்கு அருளும், கர்த்தாவே. ஏனெனில், அத்திமரமானது துளிர்விட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிக் கொண்டிருக்கிறது; புறஜாதிகளின் நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கிறது; எங்களுடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வருகைக்காக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் மத்தியில் உலாவியருளும். நேற்றிரவில், “நீர் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறீர்'' என்று கூறப்பட்டபடி, கர்த்தாவே, இன்றிரவில் எங்கள் மத்தியில் உலாவியருளும். வரப்போகிற தீங்கைக் குறித்து எங்கள் இருதயங் களுக்கு எச்சரிக்கையருளி, உம்முடைய வசனத்தைக் குறித்து புரிந்து கொள்ளும் அறிவை எங்களுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். (நீங்கள் அமரலாம்). 15இப்பொழுது, நான் ஏற்கனவே கூறியபடி, ஒவ்வொரு நாளிலும், சம்பவங்கள் நடந்த காலத்தைக் குறித்தும், இடங்களைக் குறித்தும் மற்றும் தேவையான குறிப்புகளை, நான் குறித்து வைத்தவைகளிலிருந்து, எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ கொடுக்க முயலுவேன். ஏனெனில் நாம் படிக்கப் போகிறவைகள் வரலாற்று ரீதியாக சம்பவித்தவைகளாகும். சபைக்காலங்களில் நடந்தவைகள் இப்பொழுது வரலாறாக ஆகிவிட்டது, இப்பொழுது இக்காலத்தில் நாம் அவைகளை உற்று நோக்கி, காலத்திற்கு ஒரு மாதிரியாக ஆக்கிக் கொள்கிறோம். ஞாயிறு காலை மற்றும் ஞாயிறு மாலைக் கூட்டங்களில் நமக்கு மகிமையானதொரு வேளை உண்டாயிருந்தது. நிச்சயமாக அப்படித்தானிருந்தது. எனக்கே அவ்வாறுதான் இருந்தது. மேலும் வெளிப்படுத்தலைக் குறித்து... 16இப்பொழுது எதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பற்றியே. தேவன் அளித்த அந்த வெளிப்பாட்டில் அவர் யார் என்பதைப் பற்றி வெளிப்படுத்தினார் என்று கண்டோம்? வெளிப்படுத்துதல் களியெல்லாம் முதன்மையாக அவர் யார் என்பதைப் பற்றி நாம் கண்டதென்னவெனில், இயேசுவானவர் திரித்துவத்தின் மூன்றாம் ஆள் என்றல்ல, திரித்துவம் என்று சொல்லப்படுகிறதே, அதிலுள்ள மூன்றுமே பரிபூரணமாக அவராகத்தான் இருக்கிறது என்பதாக பார்த்தோம். அவரே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதாக உள்ளார். அப்படித்தான் நமக்கு வெளிப்படுத்துதல் உண்டாயிருந்தது. அதே அதிகாரத்தில் நான்கு இடங்களில், அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பது உரைக்கப்பட்டுள்ளது. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர். 17இந்தக் காரியங்களைப் பற்றியுள்ள முழு விஷயத்தையும் நாம் தெளிவுபடுத்த முயற்சி செய்கிறோம். ஏனெனில், மீண்டும் அதைப் பற்றி இப்பொழுது இனி கேட்கப் போகிறோம் என்பதை நான் அறியேன், “இனி காலம் செல்லாது'' எனக் கூறப்படும் காலம் வந்து, நித்தியத்திற்குள் இக்காலங்களும் வேளைகளும் அஸ்தமன மாகிவிடப் போகிற வேளை நெருங்கிக் கொண்டிருக்கிற படியால், இனிமேல் ஒருவேளை இவைகளைக் குறித்து பேசவும், கேட்கவும் இயலாதபடி ஆகிவிடக்கூடும். இங்கே நான் கூறியபடி, இதைக் குறித்து பேசவும், சரியானபடி வியாக்கியானம் கொடுக்கவும், என்னைவிட மிகச் சிறந்த அநேக சகோதரர்களும், போதகர்களும் இருக்கக்கூடும். ஆயினும், இதைச் செய்யும்படி தேவன் என் இருதயத்தில் அருளியுள்ளார். எனவே எது சரியென நான் பார்க்கிறேனோ, அதை அப்படியே சரியாக நான் கூறாமற்போனால் நான் ஒரு மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். பாருங்கள்? எனவே நான், ”நான் எதையும் மறைத்து வைக்கவில்லை....'' என்று பவுல் கூறியபடி நான் எல்லா வேளைகளிலும் தேவனுக்கு முன்பாக குற்றமின்றி இருக்கவே விரும்புகிறேன். “இரவும் பகலும் கண்ணீரோடே எச்சரித்துக் கொண்டு, அப்படியாக சபையானது நிலை நிற்கும்படியாக செய்து வந்தேன்'' என்று பவுல் கூறுகிறான். உங்களில் யாராவது இழந்து போகப்பட்டால், என்னுடைய கைகளில் அந்த இரத்தம் இல்லாது இருக்கும்படியாக, அந்த நேரத்தில் நான் எல்லா மனிதருடைய இரத்த பழிக்கும் நீங்கலா யிருக்க விரும்புகிறேன். எனவே, என்னோடு நீங்கள் முரண்படுவீர் களாயின், அருமையான சிநேக பாவத்தோடு அதைச் செய்யுங்கள். அது நன்றாக இருக்கும். யாவருக்கும் சேர்த்து உதவிகரமாக இருக்கத்தக்கதாக இப்பொழுது கர்த்தர் நமக்கு சிலவற்றை வெளிப்படுத்தக் கூடும். 18முதலாவதாக அவர் தன்னைத்தானே யார் என்பதை வெளிப் படுத்தினதாக பார்த்தோம். இப்பொழுது அவர் யார் என்பதை நாம் அறிவோம். நான் ஏற்கனவே பிரசங்கித்ததில், தெளித்தல், மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத் தைப் பற்றி குறிப்பிட்டு, அது ஒரு கத்தோலிக்க ஞானஸ்நானம் என்றும், பிராடெஸ்டெண்ட் அல்லது புதிய ஏற்பாட்டு ஞானஸ் நானம் அல்ல என்றும் எடுத்துரைத்தேன். அவ்விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விட்டேன் என்று நம்புகிறேன். கத்தோலிக்க சபை உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த நிசாயா ஆலோசனை சங்கம் கூடுகிற காலம் வரையிலும் அதற்கு முன்பாக எவராது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை எனக்கு வேதவாக்கியங் களிலிருந்து, ஒரு வேதவாக்கியத்தின் மூலம் தயவு செய்து எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அறைகூவல் விடுத்திருந்தேன். அப்படிக் காண்பித்துவிட்டால், என் முதுகில் “நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி'' என்று எனக்கு நானே முத்திரை குத்திக் கொண்டு தெருவில் கடந்து செல்லுவேன் என்றும் கூறியிருந்தேன். நான் கூறுவது சத்தியமானது என்பதைக் காண்பிக்கத்தக்கதாகத்தான் நான் அவ்வாறு கூறினேனே தவிர, கடினமாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்திலல்ல. பாருங்கள்? 19தமது மாமிசத்தில் வந்த சர்வ வல்லமையுள்ள தேவன் அவர் என்பதாக இங்கே வேதமானது அவரைப் பற்றி வெளிப்படுத்து கிறது. பாருங்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்றல்ல. அது மூன்று தேவர்களல்ல. அல்லது ஒரே தேவன் வெட்டப்பட்டு மூன்று ஸ்தானங்களில் வைக்கப்பட்டதல்ல. மூன்று உத்தியோகங் களில் அல்லது பதவிகளில் ஒரே தேவன் கிரியை செய்தார். பிதா ஸ்தானம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவி. ஏதேன் தோட்டத் திற்குப் பிறகு மீண்டும் மானிட உள்ளங்களில் திரும்பி வந்து வாழத்தக்கதாக வழியை உண்டாக்கி அதினால் மானிடர் தேவனு டைய குமாரரும், குமாரத்திகளுமாக மீண்டும் அவரோடு ஆகும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தேவன் நமக்கு மேல் இருக்கிறார், தேவன் நம்மோடு இருக்கிறார், தேவன் நமக்குள் இருக்கிறார் என்பதாக அது இருக்கிறது. அது தான் அதிலுள்ள வேறுபாடாகும். பாருங்கள்? வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் இவ் விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டு, தீர்க்கமாக உரைக்கப்பட் டுள்ளது. புதிய ஏற்பாட்டில், வேதத்தில், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் ஒன்றுதான், இயேசு தன்னுடைய சொந்த முத்திரையைப் போட்டிருக்கிற புத்தகமாக விளங்குகிறது. அதில் முதலாவதாக, “இதை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கிய வான்'' என்று அவர் கூறியுள்ளார். இப்புத்தகத்தின் முடிவாக ”இதிலிருந்து ஒருவன் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது இதனோடு எதையாகிலும் கூட்டினால், ஜீவ புத்தகத்தி லிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்'' என்று அவர் கூறியுள்ளார். எனவே இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போடுபவனுக்கு அது ஒரு சாபமாக இருக்கும். இப்புத்தகம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுவதுமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எனவே, அவரை மூன்று கூறாக்கினால், என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய பெயர் நீக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். 20ஆதிகாலத்து சபையோ, அக்காலத்தில் இருந்த எந்தவொரு பிராடெஸ்டெண்டோ , எந்த ஒருவருமே, மூன்று தேவர்கள் உண்டு என விசுவாசிக்கவில்லை. நிசாயா ஆலோசனை சங்கத்தில் தேவத் துவத்தைப் பற்றிய விஷயம் ஒரு பெரிய விவாதத்திற்குரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. அதைப் பற்றி இரு வெவ்வேறான கருத்துக்களை கொண்ட ஒரு சாராராக அவர்கள் அங்கே பிரிந்து கொண்டு, ஒருவர் வலது புறமாகவும், ஒருவர் இடது புறமாகவும் சாய்ந்து போனார்கள். திரித்துவம் உண்டு என்று நம்புகிற திரித்துவவாதிகள் இறுதியாக கத்தோலிக்க சபையை ஏற்படுத் தினார்கள். அவர்கள் முழு திரித்துவ உபதேசக்காரர்களாக ஆகி, தேவனை மூன்று நபர்கள்'' என்று ஆக்கிவிட்டார்கள். இன்னொரு சாரார், “ஒருத்துவக்காரர்கள்” என்று அழைக்கப்படும்படி, தேவனை ''ஒருத்துவம்'' எனறு ஆக்கி இப்படியாக எதிர்த்திசையில் சென்றார்கள். இரு சாராருமே தவறாகத்தான் இருக்கிறார்கள். தேவன் அவ்வாறிருக்க முடியாது. இயேசு தாமே, தனக்குத் தானே தன்னுடைய பிதாவாக இருக்க முடியாது. இயேசுவுக்கென ஒரு பிதா இருந்து, அவர்.. அப்படியாயின் மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்றாகிவிடுமே. அவ்வாறிருக்க முடியாது. அவருக்கு ஒரு பிதா உண்டு என்றால், இவரைத் தவிர வேறொருவர் இருக்கிறார் என்றாக வேண்டும்... பரிசுத்த ஆவி என்று வேறொருவர் அவ்வாறிருந்தால், அவர் முறை கேடான குழந்தை என்றாகிவிடும். வேதமானது பரிசுத்த ஆவி யானவர் இயேசுவின் பிதா என்று கூறுகிறது. நமக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறதென்றால், பரிசுத்த ஆவி என்ற பெயரில் அந்த உத்தியோகத்தில் பிதாவானவரே நமக்குள் இருக்கிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒரு மனிதனுக்குள் ஆவியாக இருந்த அதே யேகோவா தேவன் தான் மீண்டும் நமக்குள் இப்பொழுது வந்திருக்கிறார். 21மூன்று தேவர்கள் இல்லை. மூன்று தேவர்கள் உண்டு என்பது, அஞ்ஞான மற்றும் விக்கிரக வழிபாட்டுக்காரர்களுடைய கொள்கையாகும். அது அப்படியே உள்ளே புகுந்து விட்டது. இவ்வாரம் முழுவதும் இச்செய்தியை விடாமல் தொடர்ந்து கேளுங்கள். உண்மைகளை சரியாகக் கேட்டு அறியும் முன்பே அதைப் பற்றிய தப்பபிப்ராயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், கவனமாகக் கேட்டு, வரலாற்றுப் பூர்வமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் மேற்கோள் காட்டும் அதே வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறுயாருடைய வரலாற்றுக் குறிப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி, எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அனைத்து வரலாற்றாளர்களும் இவைகளையே கூறுகின்றனர். அந்த வரலாற்றாளர்கள் யாவரும், எந்த ஒரு பட்சத்திலோ அல்லது கொள்கையின்பாலோ சார்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களல்ல, ஆனால் நடந்ததென்னவோ அந்த உண்மைகளை வரலாற்றில் பொறிப்பதில்தான் ஆர்வமுள்ளவர்கள். அந்த “பிதா, குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ் நானம்' என்பதானது, எவ்வாறு லூத்தரின் காலத்திலும், பிறகு வெஸ்லியின் காலத்திலும் அப்படியே உள்ளே ஊடுருவி வந்தது என்றும், இப்பொழுது இக்கடைசி காலத்தில் எவ்வாறு அதன் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது என்பதையும் கவனியுங்கள். இக்காலங்களில் கத்தோலிக்க சபையில் எப்பொழுது அது உள்ளே நுழைந்தது என்பதையும், பிறகு லூத்தரின் காலத்தில் ஊடுருவி வெஸ்லியின் காலத்திலும் ஊடுருவியது என்பதையும், ஆனால் வெஸ்லியின் காலத்திற்கும் லவோதிக்கேயாவின் இறுதிக் கட்டத்திற்கும் இடையில் அதன் போலித்தன்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அது உண்மை . இதெல்லாம் வரலாற்றுப் பூர்வமானவைகள். வரலாற்றுப் பூர்வமானவைகள் மட்டுமல்ல, வேதப்பூர்வமானவையும் ஆகும். 22நாம் இப்பொழுது இன்றிரவில் ஏழு சபைக் காலங்களை அணுகப்போகிறோம். இப்புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் ஆசியாமைனரில் உள்ள ஏழு ஊர்களில் இவ்வேழு சபைகளும் உண்டாயிருந்தன. இச்சபைகள், எதிர்வரும் காலத்தில் வரப் போகும் ஏழு சபைக்காலங்களுக்குரிய அதே குணாதிசயத்தை கொண்டவைகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில்... அக்காலத்தில் இன்னும் அநேகமான சபைகள், கொலோசே சபை மற்றும் இன்ன பிற சபைகளும் உண்டாயிருந்த போதிலும், தேவன் இவ்வேழு ஊர்களில் இருந்த இவ்வேழு சபைகளையே அவைகளின் குணாதிசயங்களினிமித்தம் தெரிந்து கொண்டார். இப்பொழுது, அவர் ஏழு பொன்குத்து விளக்குகளின் மத்தியில் நிற்கக் காண்கிறோம். அவருடைய கரத்தில் அவர் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். இவ்வேழு நட்சத்திரங் களைப் பற்றி அவர், ''வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம் 20ம் வசனத்தில், “ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்கள்'' என்று கூறியுள்ளார். வேதத்திலுள்ள இந்த வெளிப்பாட்டை அக்காலத்திலுள்ள வர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில், இயேசு திரும்பி வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு அவர்கள் விழிப்புடன் காத்திருப்பதினால் அவர்களுக்கு என்ன நன்மை உண்டாயிருக்கும்? எனவே அது அவர்களுக்கு அருளப்பட வில்லை. 23இங்கு இருக்கிறவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகி றேன், கத்தோலிக்கரே, லூத்தரன்களே, மெதோடிஸ்டுகளே, ஏனையோரே, உங்களுக்கு நான் கூறுகிறேன்; இன்றைக்கு வேதவாக்கியத்தின் பேரில் கிடைத்துள்ள வெளிச்சமானது மார்ட்டின் லூத்தருக்கு கொடுக்கப்படவில்லை. ஜான் வெஸ்லிக்குங் கூட கொடுக்கப்படவில்லை. லூத்தர் பிரசங்கிக்காமல் விட்ட பரிசுத்தமாகுதலைப் பற்றி ஜான் வெஸ்லி பிரசங்கித்தார். ஒளியானது நமக்கு அவசியமாயிருக்கிறபடியால், ஒளிவருகிறது. தேவன் அதைக் கூறுகிறார். தேவன் அதைத் திறந்து கொடுக்கிற நாள் வரையிலும், அது நம்முடைய கண்களுக்கு மறைவாகவே இருந்து வந்துள்ளது. நாம் போன பிறகு என்ன நடக்குமோ என்று வியக்கிறேன். ஆம், நாம் இன்னும் ஒன்றுமே அறிந்து கொள்ள இயலாத இன்னும் மிகமிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். அது உண்மை . வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தின் முழுவதையும் நாம் எடுத்துக் கொண்டால்... புறம்பாக முத்திரையிடப்பட்ட ஏழு முத்திரைகள் உள்ள புத்தகம் அங்கே உள்ளது. அது இப்புத்தகத்தில் எழுதப்பட வேயில்லை. இந்தச் சபைக்காலத்தில் தான் அம்முத்திரைகள் திறக்கப்பட்டு, தேவனுடைய கடைசியான ஏழு இரகசியங்களும் தெரியப்படுத்தப்பட வேண்டும். குளிர்காலம் முழுவதிலும் அதைப் பற்றி தொடர்ந்து பிரசங்கிக்க நான் விரும்புவேன். ஆம், ஐயா! ஏழு சபைக் காலங்கள். ஏழு இடிமுழக்கங்களை தானியேல் கேட்டபொழுது, அவைகளை எழுதாதபடி அவன் தடுக்கப்பட்டான். யோவான் அச்சப்தங்களைக் கேட்டான். இந்தப் புத்தகம் முத்திரையிடப் பட்டது. புத்தகத்தின் புறம்பாகவும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. ஆனால் இந்நாட்களிலோ, இம்முத் திரைகள் திறக்கப்பட்டு ''தேவ இரகசியம் நிறைவேறும்''. வேறு விதமாகக் கூறினால், தேவன் தன்னுடைய சபைக்கு அறியப் படுவார். மூன்று நபர்களாக அல்ல, ஒரே நபராகத்தான் அறியப் படுவார். தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படும். அது முழுவதுமாக வெளிப்பட்டிருக்கும்பொழுது, ஏழு இரகசியங் களும் சபைக்கு திறந்து கொடுக்கப்படும். ஏனெனில், அப் பொழுது சபையானது பரிசுத்த ஆவியானவரின் ஊக்குவிக்கும் அசைவில் வாழ்ந்து கொண்டிருக்கும்; அவர் அப்பொழுது தாம் உயிரோடிருப்பதையும், நமக்குள் அவர் ஜீவிப்பதையும் அடையாளம் காண்பிப்பவராக உள்ளும் புறம்பும் அசைவாடிக் கொண்டிருப்பார். அப்பொழுது நாம் நமக்குள் இருக்கும் ஜீவனுள்ள கிறிஸ்துவை தொழுது கொண்டிருப்போம். 24பெரிய சபைக்களுக்காகவும், பெரிய காரியங்களுக்காகவும் எதிர்நோக்கியிருக்க வேண்டாம். இந்தப் பெந்தெகொஸ்தேயின் காலத்தைப் பற்றி நாம் படிக்கையில் அவர்கள் எங்கே வழுவிப் போனார்கள் என்பதை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். அந்த சபைக்காலத்தின் பெயராகிய லவோதிக்கேயா என்பதின் பொருள். என்னவெனில், ''ஒன்றிலும் குறைவில்லாத ஐசுவரியம் உள்ளது'' என்பதாகும். ஆயினும், அது நிர்வாணமாயும், நிர்ப்பாக்கியமுள்ள தாகவும், குருடாகவும், பரிதபிக்கப்படத்தக்க நிலையிலும் இருந்து வருகிறது; ஆயினும் அவ்விதமான நிலையிலிருப்பதை அறிய மாட்டாமல் இருக்கிறது. பார்த்தீர்களா? அவர்கள் மிகுந்த பணத்தின் பின்னாலும், பெரிய கட்டிடங்களின் பின்னாலும் சென்று விட்டார்கள். 25உண்மையான சபையோ எப்பொழுதும் இந்த உலகத்திற்கு துடைத்துப் போடப்பட்டவர்களாயிருந்தார்கள். யாவராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சந்திகளில் துரத்திவிடப் பட்டு, எங்கெல்லாம் வாழ முடியுமோ அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எபிரெயர் 11ம் அதிகாரத்தின் கடைசி 6 அல்லது 8 வசனங்களை எடுத்துப் பாருங்கள். அங்கே, 'அவர்கள் வனாந்திரங் களிலேயும், அலைந்து திரிந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் அனுபவித்தார்கள்'' நியாயத்தீர்ப்பின் நாளில் அவர்களுடைய இத்தகைய சாட்சிகளுக்கு முன்பாக நம்முடைய சாட்சி எவ்வாறு அதற்கு நிகராக நிற்கப் போகிறது? அந்நாட்களில் இருந்த ஜனங்களைப் பாருங்கள். இப்பொழுது இந்த சபைக்காலத்திலோ... நமக்கு ஏழு சபைக் காலங்கள் உண்டு. நான் அவைகளை வரைந்து உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். இங்கிருந்து நீங்கள் அவைகளை சரியாக கண்ணுற முடியாதென நினைக்கிறேன். ஒருவேளை உங்களில் சிலர் அதைக் காணக்கூடும். உங்களுக்கு பார்ப்பதற்கு இயலாதபடி உள்ளது என்றே நான் ஐயுறுகிறேன். எப்படியும் முயலுகிறேன். இங்கே உட்கார்ந்திருக்கிறவர்களால் இதை சரியாக பார்க்க முடியாதென நினைக்கிறேன். ஆகவே நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளும்படியாக என்னுடைய கையில் இந்த சபைக் காலங்களைப் பற்றிய அச்சித்திரத்தை ஏந்திக் கொள்கிறேன். 26பெந்தெகொஸ்தே நாளில்தான் சபையானது தன் துவக்கத்தையுடையதாக இருக்கிறது. அப்படியல்லவென்று யாராவது மறுக்க முடியுமா? அவ்வாறு செய்ய இயலாது, ஐயா! பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்தோடு சபையானது பெந்தெ கொஸ்தே என்னும் நாளிலிருந்து துவங்கியது. அது இயேசு கிறிஸ்துவால் அவர்களில் கிரியை செய்கிற அதே செய்தியுடனும் ஆசீர்வாதத்துடனும் கடைசி நாள் வரைக்கிலும் தொடர்ந்து செல்ல குறிக்கப்பட்டது. மாற்கு சுவிசேஷத்தில் 16ம் அதிகாரத்தில் சபைக்கு அவர் இட்ட அவரது கடைசிக்கட்டளையானது: ''உலக முழுவதிலும் நீங்கள் புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் தொடரும்'' என்பதாகும். எங்கே போய் பிரசங்கிக்க வேண்டும்? “முழு உலகத்திற்கும்.'' யாருக்கு பிரசங்கிக்க வேண்டும்? ”சர்வ சிருஷ்டிக்கும்.'' கருப்போ , பழுப்பு நிறமோ, மஞ்சள் நிறமோ, வெள்ளை நிறமோ, எப்படிப்பட்ட சிருஷ்டியாயினும் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன“ என்று கூறப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஒரு பெரிய துண்டை , நல்ல இறைச்சி போன்றிருக்கிற இச்செய்தியின் பேரிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு, இறுதியாக நாம் வாழும் நமது சபைக் காலத்துக் குரியதை எடுத்துக் கொள்வோம். இன்றிரவில் அதின் ஓரத்தில் உள்ளதை, துவக்கத்தில் உள்ளதை எடுத்துக் கொள் வோம். அதுவே அவருடைய கட்டளை என்று நாம் காண்கிறோம். 27முதலாவது சபைக் காலமானது எபேசு சபையாகும். இரண் டாவது சபைக்காலம் சிமிர்னாவாகும். மூன்றாவது சபைக்காலம் பெர்கமுவாகும். நான்காவது தீயத்தீரா சபைக்காலமாகும். ஐந்தாவது சர்தை சபைக் காலமாகும். ஆறாவது பிலதெல்பியா சபைக்காலமாகும். ஏழாவது சபைக்காலம் லவோதிக்கேயா வாகும். முதலாவது சபைக்காலமானது கி.பி.53ல் துவங்கியது; அப்பொழுது எபேசு பட்டணத்தில் பவுல் சபையை ஏற்படுத் தினான். கி.பி. 66ம் ஆண்டில் பவுல் சிரச்சேதம் செய்யப்படும் வரையிலும், சுமார் 22 ஆண்டுக்காலம் பவுல் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான். பவுல் தனது மிஷனரி யாத்திரை யின்போது, எபேசுவில் சபையை நிறுவினான். பவுலின் மரணத் திற்கு பிறகு பரிசுத்த யோவான் இந்தச் சபைக் காலத்தில் சில காலம் எபேசு சபையின் மேய்ப்பனாக இருந்து வந்தான் என்று கூறப்படுகிறது. எபேசு சபைக் காலம் கி.பி.170ம் ஆண்டு வரைக் கிலும் நீடித்தது. 28பிறகு, கி.பி.53 முதல் கி.பி. 170 முடிய உள்ள எபேசு சபைக் காலத்திற்கு பிறகு, கி.பி.170 முதல் கி.பி. 312 முடிய நீடித்திருந்த சிமிர்னா சபைக்காலமானது ஏற்பட்டது. அதன்பிறகு, பெர்கமு சபைக் காலமானது கி.பி.312 முதல் கி.பி. 606ம் ஆண்டு வரை யிலும் நீடித்திருந்தது. அதைத் தொடர்ந்து தீயத்தீரா சபைக் கால மானது வருகிறது. அதினுடைய காலம், கி.பி.606ல் துவங்கி கி.பி. 1520 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அக்காலம் தான் இருண்ட காலங்கள் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக சர்தை சபைக் காலமானது கி.பி.1520ல் துவங்கி, கி.பி.1750 வரை நீடித்தது. அது தான் லூத்தரின் காலமாகும். கி.பி.1750 முதற்கொண்டு, அடுத்த சபைக்காலமாகிய பிலதெல்பியா சபைக் காலமானது வருகிறது; அதுவே வெஸ்லியின் காலமாகும். அது 1750ல் ஆரம்பித்து, 1906ம் ஆண்டு வரைக்கிலும் நீடித்திருந்தது. 1906ம் ஆண்டில் லவோதிக் கேயா சபைக் காலமானது ஆரம்பித்து, அது எப்பொழுது முடிவுறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சபைக் காலம் 1977ம் ஆண்டில் முடிவடையும் என நான் முன்னுரைக்கிறேன். நான் முன்னுரைக்கிறேன், கர்த்தர் என்னிடம் அவ்வாறு கூறவில்லை, ஆனால் நானே, சில ஆண்டு களுக்கு முன்பாக எனக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு தரிசனத்தின் அடிப் படையில் இவ்வாறு முன்னுரைக்கிறேன். அந்த ஏழு தரிசனங்களில் ஐந்து ஏற்கனவே சம்பவித்து நிறைவேறிவிட்டது. 29இங்கே சபையில் எத்தனை பேர்கள் அந்த தரிசனத்தை நினைவில் வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக, அவைகள் சொல்லப் பட்டன. எவ்வாறு கென்னடி கூட கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக் கப்படுவார் என்பதும் முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு பெண் களும் வாக்களிக்க உரிமையளிக்கப்படுவார்கள் என்று கூறப் பட்டது. அந்த ரூஸ்வெல்ட் எவ்வாறு உலகை யுத்தத்திற்கு நேராக நடத்திச் செல்வார் என்றும் முன்னுரைக்கப்பட்டது. முஸோலினி எத்தியோப்பியா மேல் தனது முதல் படையெடுப்பை எடுத்து, அதை வென்றெடுத்து, பின்பு அதுவே அவனது முடிவை ஏற்படுத்தும் என்றும், அதன் பிறகு அவன் மரணமடைந்து விடுவான் என்று முன்னுரைக்கப்பட்டது. எவ்வாறு இந்த பெரிய கொள்கைகள் தோன்றும் என்றும், அவைகள் முடிவாக வீழ்ந்து, அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் எவ்வாறு தோன்றும் என்றும் கூறப்பட்டது. ஹிட்லரிசம் முஸோலினியின் நாசிசம் ஆகியவைகள் தோன்றி, இறுதியாக கம்யூனிசம் தோன்றும் போது இவ்விரு கொள்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு மறைந்து போய்விடும் என்று கூறப்பட்டது. “ஜெர்மனி தேசத்தோடு நாம் யுத்தத்திற்கு செல்லுவோம், ஜெர்மனி தேசம் காங்க்ரீட் சுவர்களால் ஆன மாகினோட் லைன் என்று கூறப்படும் பலத்த அரணை அமைத்துக் கொள்ளும்'' என்று அச்சம்பவம் சம்பவிப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைக்கப்பட்டது. அதன்படியே அது நிறைவேறவும் செய்தது. அதன்பிறகு உரைக்கப்பட்டதென்ன வெனில், விஞ்ஞானமானது மிகப் பெரிய அளவில் முன்னேறி விடும் என்றும், அப்பொழுது, மோட்டார் வண்டிகள் முட்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனங்களை கண்டு பிடிப்பார்கள் என்றும் உரைக்கப்பட்டது. முன்பு அனாதை சாலையாக இருந்ததும் தற்போது சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனமானது இருக்கிறதுமான அந்த இடத்தில்தான் அத்தரி சனம் உண்டாயிற்று. சார்லி கெர்ன் என்பவர் அப்பொழுது அங்கு வாழ்ந்து வந்தார், அவர் ஒருவேளை இங்கு இக்கட்டிடத்தில் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு அது நேரிட்டது. ''ஒரு வாகனத்தை அவர்கள் கண்டு பிடிப்பார்கள்; அதற்கு ஸ்டியரிங் இல்லாமலே ஏதோ ஒரு சக்தியினால் அது செல்லுவதாக இருக்கும்'' என்று தரிசனத்தில் கூறப்பட்டிருந்தது. இப்பொழுது அவர்கள் அதை கண்டுபிடித்து விட்டார்கள். காந்த சக்தியினால் இயக்கப்பட்டு, ரேடாரினால் கட்டுப்படுத்தப்பட்ட தாக அது உள்ளது. நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்கள் ரேடரை நீங்கள் அமைத்துவிட்டால் போது மானது. நீங்கள் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்ட வேண்டிய தேயில்லை, அது தானாகவே உங்களை, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும். 30மேலும் அத்தரிசனங்களில், 'அக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஒரு பெரிய பெண்மணி எழும்புவாள்'' என்று உரைக்கப்பட்டது. அவள் மிகவும் நன்கு உடுத்தியிருந்தவளா கவும், சௌந்தர்யமுள்ளவளாகவும், ஆனால் இருதயத்தில் கொடூரம் கொண்டவளாகவும் அத்தரிசனத்தில் காணப்பட்டாள். அத்தரிசனத்தைப் பற்றிய விவரக் குறிப்புக் கூட நான் வைத்துள் ளேன். அப்பெண்மணி ஒருவேளை கத்தோலிக்க சபையைக் குறிக் கக் கூடும் என்று கூறினேன். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கப்படுவதினால், அவர்கள் தவறான நபரை இத் தேசத்தின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஏதுவாயிருக்கும். அதைதான் அவர்கள் செய்து விட்டார்கள். ''அதுதான் அதன் ஆரம்பம்'' என்று உரைக்கப்பட்டது. இன்னொரு விஷயம் அதில் என்னவெனில்... இதையடுத்து உடனடியாக இத்தேசமானது எரிந்து சாம்பலாகி சிதறிப் போனதைக் கண்டேன். இத்தரிசனங்களில் ஏற்கனவே சில நிறை வேறிவிட்டபடியால், மீதமுள்ளவைகளும் நிச்சயமாக நிறை வேறும். அதினால்தான் ஜெபர்ஸன்வில்லில் உள்ள இம்மக்களுக்கு இந்த இராத்திரியில் இச்செய்தியை தாமதமின்றி கொடுத்து, ஒழுங்குபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன். ஏனெனில், நான் வெளிநாட்டு ஊழியங்களுக்கு விரைவில் மீண்டும் சென்று விட ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்பொழுது ஆண்டவரால் அழைக்கப்படுவேன், அல்லது எடுத்துக் கொள்ளப் படுவேன் என்பது எனக்குத் தெரியாது... நாம் அதை அறியோம். சபையானது அவர்கள் வாழும் நேரத்தைக் குறித்து அறிந்து கொண்டு விட வேண்டுமென்ற விஷயத்தில் நான் நிச்சயமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில், இக்காரியத்தைக் குறித்து, சர்வவல்லமையுள்ள தேவன் என்னை பொறுப்பாளியாக்கி விடுவார். 31வேதவாக்கியங்களின்படி, இந்த சபைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தூதன் உண்டு. தூதன் என்னப்பட்டவன்... தூதன் என்றால் அர்த்தம் என்ன என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? தூதன் என்றால் “செய்தியாளன்'' அல்லது ”செய்தி யைக் கொண்டு வருபவன்'' என்று அர்த்தமாகும். “ஏழு சபை களுக்கும் ஏழு தூதர்கள்'' என்றால், ஏழு செய்தியாளர்கள் என்று பொருள்படும். அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்கள் இருந்தன. அவர் கரத்திலிருந்த இவ்வேழு நட்சத்திரங்களும் அவரு டைய சமுகத்தின் ஒளியை, நாம் வாழும் இந்த இராக்காலத்தில் பிரதிபலிக்க வேண்டியவர்ளாகயிருக்கிறார்கள். இரவில் நட்சத் திரங்கள் சூரியனின் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறபடியால், இரவு வேளையில் அவ்வெளிச் சத்தில் நம்மால் நடக்கவும், அசை வாடவும் முடிகிறது. அத்தூதர்களில் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் காலங் களில், அவரவர்களுக்குரிய ஸ்தானத்தையும், உத்தியோகத்தையும் உடையவர்களாயிருக்கின்றனர். மேலும், சகோதரரே, இந்த இராத் திரியில் நாம் அதற்குள்ளாக பார்க்கப் போகிறதில்லை, ஏனெனில், நாம் முதல் சபையின் இந்த தூதனைப் பற்றி அறிவோம்; ஆனால் ஏனைய சபைகளுக்குரிய தூதர்கள் யார், யார் என்பதைப் பற்றி காணப்போவதும், வரலாற்றிலிருந்து அதின் நிரூபணங்களை எடுத்துக் காணப்போவதும் உங்களுக்கு இரகசியமானதாகவும், மகிமை பொருந்தினதாகவும் இருக்கப் போகிறது. முதலாம் சபைக் காலத்தின் செய்தியாளன் பரிசுத்த பவுல். அவன் அதை நிறுவினான். அவன் தேவனுடைய செய்தியைக் கொண்டு வந்தவன். எபேசு சபையின் தூதன் பரிசுத்த பவுல். இப்பொழுது, நான் இக்காரணத்தைக் கொண்டு... 32இப்பொழுது, ஏனைய தூதர்களைப் பற்றி நீங்கள் என்னோடு முரண்படக்கூடும். பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பி, அசைத்து, அத்தூதர்கள் ஒவ்வொருவரும் யார், யார் என்பதைப் பற்றி நான் அறிந்து கொள்ள வைக்கிற வரைக்கிலும், நான் நாட்கணக்கில் அவரது அசைவின் கீழ் அமர்ந்திருந்தேன். எனவே தான் நான் இதைப் பற்றி திட்டவட்டமாக அறிந்துள்ளேன். நீங்கள் ஒரு வரலாற்றாளராக இருப்பின், ஒவ்வொரு காலத்திற்கும் தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்களான இம்மனிதர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள்... இன்னின்னார் தான் அத்தூதர்கள் என்று நான் சொல்லும் தூதர்களை வெளிப்படுத்துதலினால் தான் அறிந்து கொண்டுள்ளேன். அவர்கள் தத்தம் காலத்திய சபைகளுக்கு தூதர்களாயிருந்தார்கள். ஆதியில் இருந்தவர்களுக்கு இருந்த அதே ஊழியத்தைப்போலவே இவர்களுக்கும் உண்டாயிருந்தது. அவ் ஊழியமானது ஒருக்காலும் மாறிப்போகாது. எல்லாக் காலங் களிலும் அது பெந்தெகொஸ்தேயாகத்தான் இருக்க வேண்டும். 33சிமிர்னா சபையின் காலத்திற்கு ஐரேனியஸ் என்பவர்தான் தூதன் என்று நான் அறிவேன். ஆனால் இங்கே அமர்ந்திருக்கும் வரலாற்றாளர்கள் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவரல்ல, பாலிகார்ப் தான் தூதர் என்று உங்களில் அநேகர் ஒரு வேளை சொல்லக் கூடும். ஆனால் பாலிகார்ப் அவர்கள் மத சம்பந்த மான ஸ்தபான வழியில் அதிகமாக சாய்ந்து போனவராகக் காணப்பட்டார். மேலும் அப்பொழுது வளர்ந்து கொண்டு வந்திருந்த கத்தோலிக்க மதஸ்தாபனத்திடமும் சார்புடைய வராகவும் காணப்பட்டார். ஆனால் ஐரேனியஸோ, தேவனுடைய வல்லமையையுடையவராயிருந்து, அந்நிய பாஷையில் பேசி, ஊழியத்தின் அடையாளங்கள் பின் தொடரப் பெற்றவராகக் காணப்பட்டார். ஐரேனியஸ் தேவனுடைய தூதனும் ஒளியாகவும் இருந்தார். பாலிகார்ப் சிலுவையில் அறையப்பட்டு அல்லது கொலை செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து ஒளியை சுமந்து சென்றார். ஐரேனியஸ், பாலிகார்ப்பின் மாணாக்கர்களில் ஒருவராவார். பாலிகார்ப், பரிசுத்த பவுலின்... பரிசுத்த யோவானின் மாணாக்க ராவர். பாலிகார்ப் மரித்த பிறகு, அவருடைய இடத்தை ஐரேனியஸ் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து ஒளியைக் கொண்டு வந்தார். 34பெர்கமு சபையின் காலத்திற்கு அந்த மகத்தான பரிசுத்த வானாகிய மார்ட்டின் தூதனாகவும், அக்காலத்திற்குரிய ஒளியாக வும் இருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்து, மனிதர்களுக் குள்ளே பரிசுத்த மார்ட்டினை விட மகத்தான மனிதர்கள் இருந் தார்கள் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. வல்லமை? ஐரேனியஸ் அற்புத அடையாளங்களிலும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங் களிலும் விசுவாசம் கொண்டவராயிருந்தார். அவரை சிரச்சேதம் செய்தவற்காக கொலைகாரர்கள் அவரிடம் வந்த பொழுது அவர் கழுத்து வரையிருந்த தன் அங்கியை தளர்த்தி, அவர்கள் தன்னை வெட்டுவதற்கு வசதியாக கழுத்தை நீட்டிக் கொடுத்தார். கொலைகாரன் அவர் தலையை சீவி எறியும்படியாக பட்டயத்தை உருவிய போது, தேவனுடைய வல்லமையானது அக்கொலைகாரனை மார்ட்டினை விட்டு தூரத்தில் தூக்கி எறிந்தது. அக்கொலைக்காரன் முழங்காலிலேயே ஊர்ந்து வந்து, அவரிடம் மனந்திரும்புதலை பெற்றுக் கொள்ள வேண்டினான். ஆமென். மார்ட்டினே இச்சபைக் குரிய தூதனாவார். அவர் செய்த ஏனைய காரியங்கள். அவர் எவ்வாறு.... அவருடைய சகோதரர்களில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட போது, என்ன நடந்தது என்பதை மார்ட்டின் அறிய முயன்று, அதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் அங்கு போனபொழுது, அவரது சகோதரனை அவர்கள் ஏற்கெனவே தூக்கில் தொங்க விட்டிருந்தார்கள். அவரை தூக்கிலிருந்து இறக்கி தரையில் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். அவர் மரித்து, கண்கள் தலையிலிருந்து வெளியே பிதுங்கிய நிலையிலிருந்தது? மார்ட்டின் முழங்கால் படியிட்டு, பிறகு, தன் சரீரத்தை மரித்தவருடைய சரீரத்தின் மேல் கிடத்தி, ஒரு மணிநேரம் தேவனிடம் ஜெபித்தார். தேவனுடைய வல்லமை அம்மனிதர் மேல் வந்தபோது, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், அவரது கையைப் பிடித்துக் கொண்டு மார்ட்டின் அங்கிருந்து நடந்து சென்றார். ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், இன்னும் வரலாற்றில் கூறப்பட்டுள்ள ஏனையோரைப்போல, மார்ட்டினைப் பற்றிய இவ்விஷயங்களும் உண்மையான வரலாறாக இருக்கிறது. அது சரித்திரம். 35அவர் செய்த ஏனைய காரியங்கள். அவர் எவ்வாறு.... அவருடைய சகோதரர்களில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட போது, என்ன நடந்தது என்பதை மார்ட்டின் அறிய முயன்று, அதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் அங்கு போனபொழுது, அவரது சகோதரனை அவர்கள் ஏற்கெனவே தூக்கில் தொங்க விட்டிருந்தார்கள். அவரை தூக்கிலிருந்து இறக்கி தரையில் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். அவர் மரித்து, கண்கள் தலையிலிருந்து வெளியே பிதுங்கிய நிலையிலிருந்தது? மார்ட்டின் முழங்கால் படியிட்டு, பிறகு, தன் சரீரத்தை மரித்தவருடைய சரீரத்தின் மேல் கிடத்தி, ஒரு மணிநேரம் தேவனிடம் ஜெபித்தார். தேவனுடைய வல்லமை அம்மனிதர் மேல் வந்தபோது, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், அவரது கையைப் பிடித்துக் கொண்டு மார்ட்டின் அங்கிருந்து நடந்து சென்றார். ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், இன்னும் வரலாற்றில் கூறப்பட்டுள்ள ஏனையோரைப்போல, மார்ட்டினைப் பற்றிய இவ்விஷயங்களும் உண்மையான வரலாறாக இருக்கிறது. அது சரித்திரம். 36ஆம், ஐயா! பரிசுத்த மார்ட்டின் தான் பெர்கமு சபையின் தூதனாவார். அச்சபையின் காலம் தான் மார்ட்டின் மறைவிற்குப் பிறகு கத்தோலிக்க கொள்கைகளுக்கு விவாகம் செய்து கொண்டு, அவர்களை அதற்குள் கொண்டு சென்றது. தீயத்தீரா சபையின் காலத்திற்கு கொலம்பா என்பவர் தான் தூதனாவார். மரித்துப் போன சபையாகிய சர்தைக்குரிய தூதர்... சர்தை என்றால் “மரித்தவன்'' என்று பொருளாகும். அவருடைய பெயரில்லாத ஒரு பெயரோடு புறப்பட்டு அச்சபை வருகிறது. ''உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தாலும், மரித்த வனாயிருக்கிறாய்...'' என இச்சபையைக் குறித்துக் கூறப்பட்டது. அந்த நாளில் ஞானஸ்நானத்தை அவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதைப் பாருங்கள். பாருங்கள், கத்தோலிக்க மார்க் கத்திலிருந்து அதைக் கொண்டு வந்தார்கள். முதல் சீர்த்திருத்தக் காரரான மார்ட்டின் லூத்தர் இக்காலத்திற்குரிய சபையின் தூதனாவார். பிலதெல்பியா சபைக்கு ஜான் வெஸ்லி என்பவர் தான் தூதனாவார். 37லவோதிக்கேயா சபைக்குரிய தூதன் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் அவர் யார் என்பது தெரியவரும். ஆனால் அவர் இப்பொழுது இப்புவியில் இருப்பார். “காதுள்ளவன் எவனோ...'' அவன் அந்தக் காலத்தில்தான் நாம் ஜீவிக்கிறோம் என்பதை அறிவான். அதைக் குறித்த நிதானிப்பை தேவனே செய்வார். இப்பொழுது கவனியுங்கள், வேத வாக்கியங்களில் நாம் முதலாம் சபைக்காலத்தைக் குறித்து பார்க்க திரும்பிச் செல்லு வோம். சில விஷயங்களை நான் இங்கே எழுதிவைத்திருக்கிறேன்; நீங்கள் அவைகளை மிகவும் கவனமாக செவிமடுக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். முதலாம் சபையாகிய எபேசு சபையானது தேவனால் எதற்காக கடிந்து கொள்ளப்பட்டதென்றால், அவர்களிடம் அன்பில்லாத கிரியைகள் காணப்பட்டனவே, அதினால்தான். அச்சபைக்கு அவர் அளிக்கும் பலன் ஜீவ விருட்சமாகும். 63. சிமிர்னா சபையானது உபத்திரவப்படுத்தப்பட்ட சபை யாகும். அது உபத்திரவங்களின் வழியாக கடந்து சென்றது. அதற்குரிய பலன் ஜீவ கிரீடமாகும். 38மூன்றாம் சபையான பெர்கமு, அதின் காலமானது கள்ள உபதேசம், சாத்தானின் பொய், போப்பு மார்க்கத்தின் ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையயும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவைகளின் காலமாக விளங்குகிறது. அதற்கு அளிக்கப்படும் பலனானது, மறைவான மன்னாவும், வெண் குறிக்கல்லுமாகும். தீயத்தீரா சபையானது, போப்பின் வஞ்சனையைக் கொண்டதாக இருந்தது. அதுவே இருண்ட காலங்களாகும். இச் சபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அளிக்கப் படுவது, ஜாதிகளின் மேல் அதிகாரமும், விடிவெள்ளி நட்சத்திரமு மாகும். இதைப் பெறுபவர்கள், இவ்விருண்ட காலங்களின் வழியாகச் சென்ற அந்த உண்மையான சிறு கூட்டமே. 39சர்தை சபையானது சீர்திருத்தத்தின் காலமாக விளங்கியது, அந்த மகத்தான மிஷனரி காலம்... மிஷனரி காலம் அல்ல, எவரும் அறிய முடியாத இரகசியமான பெயர்கள், அவர்களுக்கு சொந்த மான பெயர்கள் இருந்தன. அவர்களுக்கு அளிக்கப்படும் பலன் வெண்வஸ்திரமும், ஜீவ புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் இடம் பெறுதலாகும். (அப்புத்தகம் நியாயத்தீர்ப்பில் வரவேண்டிய தாயுள்ளது). ஜீவ புத்தகத்தை பற்றி அன்றொரு நாள் நாம் பார்த்தோம். ஜீவ புத்தகத்திலிருந்து தான் நீங்கள் நியாயந்தீர்க்கப் படுவீர்கள். பரிசுத்தவான்கள் மறுரூபப்படுத்தப்பட்டு, நியாயத் தீர்ப்புக்குட்படுத்தப்படாமல் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்படைவதில்லை. பிலதெல்பியா சபையின் காலமானது, சகோதர சிநேகத்தின் காலமாகும். மகத்தான கட்டளையின் காலம், மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலமாகும். திறந்த வாசலின் காலமாகும். வாக்கு ரைக்கப்பட்ட பலன் என்னவெனில், தேவாலயத்தில் தூனாக ஆக்கப்படுதல், தேவனுடைய நாமங்கள் வெளிப்படுத்தப்படுதல் இக்காலத்தில். இச்சபைக் காலமானது 1906ம் ஆண்டில் முடிவுற்றது. சரி. 40லவோதிக்கேயா சபைக்காலமானது வெதுவெதுப்பான சபையாகும். அது ஐசுவரியமுள்ளதாகவும், திரவிய சம்பன்னராக வும், ஒன்றும் குறைவில்லையென்றும் சொல்லிக் கொண்டாலும், நிர்ப்பாக்கியமுள்ளதாகவும், தரித்திரமாயும், குருடாயும், பரிதபிக் கப்படத்தக்கதாயும், நிர்வாணியாகவும் இருக்கிறது. இக்காலத்தில் ஜெயங்கொள்கிறவனுக்கு கர்த்தரோடு அவருடைய சிங்கா சனத்தில் உட்காருவதாகும். இதுதான் அவர்களுடைய பலன். இத்தோடு இதை முடித்துக்கொண்டு, முதலாம் சபைக் காலத்தைப் பற்றி படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். 41அவர், தாம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளபடியால், நாம் அவரை அறிவோம். அவர் தேவன்! நான் ஏற்கனவே கூறினபடி, இச்சபைக் காலமானது ஏறத் தாழ கி.பி. 53 முதல் கி.பி.170ம் ஆண்டு வரையிலும் நீடித்திருந்தது. எபேசு பட்டணமானது : ஆசியாவிலுள்ள பெரிய மூன்று பட்டணங்களிலொன்று ஆகும். கிறிஸ்தவ விசுவாசத்தின் மூன்றாவது பட்டணம் என்று அழைக்கப்பட்ட துண்டு. (முதலாவது எருசலேம், இரண்டாவது அந்தியோகியா, மூன்றாவது எபேசு) பெரிய அளவில் வாணிபம் மற்றும் வர்த்தகம் செழித்த ஒரு பட்டணம்; அதன் அரசு ரோமானிய அரசாகும். அதில் பேசப்பட்ட மொழி கிரேக்கமாகும். யோவான், மரியாள், பேதுரு, அந்திரேயா, பிலிப்பு ஆகிய இவர்கள் யாவரும் இங்கே தான் அடக்கம் பண்ணப்பட்டனர் என்று வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். எபேசு பட்டணம் அதின் அழகுக்கு பெயர் பெற்றது ஆகும். எபேசுவில் கிறிஸ்தவம் தழைத்திருந்த போது, யூதர்களும் அப்பட்டணத்தில் இருந்தார்கள். எபேசுவில் கிறிஸ்தவமானது கி.பி.யில் சுமார் 53 அல்லது 55ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பரிசுத்த பவுல், கிறிஸ்தவத்தை நட்டான். அதன் பிறகு பரிசுத்த பவுல், எபேசுவில் மூன்று ஆண்டுகள் இருந்தான் எபேசுவிலுள்ள விசுவாசிகள் மத்தியில் பவுலின் போதகமானது பெரிய செல்வாக்கைப் பெற்றதாக இருந்தது. அடுத்ததாக, தீமோத்தேயு, எபேசுவிலுள்ள சபையின் முதலாவது கண்காணியாக விளங்கினான். பவுல் எபேசு சபைக்கு நிருபம் எழுதினான். பவுலின் காலத்தில் எபேசுவிலுள்ள சபையானது மிகச் சிறந்து விளங்கியது. 42“எபேசு'' என்ற பெயருக்கு அர்த்தம் என்னவெனில், 'போக விடு, தளர்த்து, பின்மாற்றம் அடைந்தது'' என்பதாகும். ”பின் மாற்றம் அடைந்த சபை' என்று தேவனால் அழைக்கப்படுகிறது. தேவன், அவர்களுடைய கிரியைகளையும், அவர்களுடைய பாடு களையும், அவர்களுடைய பொறுமையையுங் குறித்து பிரதானமாக அறிக்கை செய்கிறார். அவர்கள் ஆதி அன்பை விட்டுவிட்டு, பின் மாறிப்போய், ஒளியை மேலும் சுமந்து செல்லாதபடி, இருந்து ஜீவிப்பதைக் குறித்து, அவர்கள் பேரில் தேவன் கடிந்து கொள்ளு கிறார். எபேசு சபையானது வஞ்சிக்கப்பட்டதொரு சபையல்ல; பரிபூரண அன்பில் நிலைத்திருக்காமல் இருப்பதைக் குறித்த விஷயத்தில்தான் அது வழுவிப் போனது. எபேசு சபையின் கனிகளைப் பற்றிய சுருக்கவுரை: அன்பில் லாமற்போனது, விசுவாசத்தை விட்டு வழுவிப் போகுதலுக்கு நடத்தப்படுதல். அதற்குரிய வாக்குத்தத்தங்கள், இச்சபையின் காலத்தில் ஜெயங்கொள்ளுகிற பரிசுத்தருக்கு, பரதீசின் மத்தி யிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பார். 43இங்கு அழகானதொரு விஷயம் உள்ளது. ஜீவ விருட்சத்தைப் பற்றி ஆதியாகமத்தில் மூன்று தடவைகளும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில் அது இருந்ததைத்தான். கிறிஸ்துவே அம்மரமாயிருக் கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது, கிறிஸ்து பரதீசில் உள்ளதை. ஓ, அது ஆழமானது. கர்த்தர் ஆசீர்வதிப்பார். இப்பொழுது, நாம் எபேசு சபைக் காலத்தைப் பற்றிக் கூறும் வெளி. 2ம் அதிகாரம் 1ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம்: எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்; ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டு, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறவதாவது“ வெளி.2:1 அந்நேரத்தில் யோவான் அந்த தூதனாயிருக்கிறான். ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவாகும். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் ஒரு குத்துவிளக்கின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறார் என்று கூறவில்லை; அவைகள் யாவற்றின் மத்தியிலும் அவர் உலாவுகிறார். அது எதைக் காட்டு கிறது? ஒவ்வொரு சபைக்காலத்திலும் உள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார் என்பதையே. அவர் ஒவ்வொரு நபரிடம் பரிசுத்த ஆவி யோடு ஒவ்வொரு காலத்திலும் வருகிறார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார். 44''வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருந்தார்'', ''வலது கரம்'' என்பதற்கு அவருடைய ''அதிகாரமும் வல்லமையும்'' என்று அர்த்தமாகும். ஏழு சபைக்காலங்களுக்கும் உரிய ஏழு தூதர்களையும் தனது வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார்; அதாவது, அவர்களை தனக்குக் கீழ், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஓ! அது எனக்கு விருப்பம். கிறிஸ்துவானவர் தன்னை தன் ஜனங்களுக்கு, அது இருண்ட காலமானாலும் சரி, எல்லா காலங்களிலுமே அறியப்படுத்திக் கொண்டு, இச்சபைகளின் காலங்களின் நடுவில் உலாவி வருவதைக் காணுங்கள். ஒவ்வொரு காலத்திலும், சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகி விழுந்து போய், சிலர் இப்படியும், சிலர் அப்படியுமாக வழி விலகிச் சென்றனர், ஆனால் அந்த சிறு கூட்டமான உண்மையான சபையானது, தொடர்ந்து நிலைத்து நின்றது, கிறிஸ்துவும் அவர்களோடிருந்து கிரியை செய்து, தன் வார்த்தையை உறுதிப் படுத்தினார். அவ்வாறே எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. 45இதை நாம் படிக்க ஆரம்பிக்கையில், இன்று நமக்குள்ளதை நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். துவக்கத்தில்... நீங்கள் யாவரும் இதை இவ்வளவு உயரத்தில் காண முடிகிறது என்று நான் நம்புகிறேன். (சகோ. பிரான்ஹாம் கரும்பலகையை வைத்து அதிலிருந்து விளக்கிக் கூறுகிறார் - ஆசி). இங்கே ஒரு சபைக் காலம் பெந்தெகொஸ்தேயாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது சபைக் காலங்கள் வருகின்றன. இதை கவனமாக பார்ப்பீர்களானால், முதல் சபையானது பெந்தெகொஸ்தே நாளில் துவங்கியது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? பெந்தெ கொஸ்தேயில் என்ன சம்பவித்தது என்பதை பாருங்கள், அதன் பிறகு, சபையானது தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை நாம் கவனிக்கிறோம். அடுத்தடுத்து வந்த காலங்களில், படிப்படியாக அது மங்கலாகிக் கொண்டே வந்து, உண்மையான சபையானது புறப்பட்டுச் சென்று விடுகிறது. 46இப்பொழுது, கிறிஸ்து... சபையானது எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதைப் பற்றிக் கவலையில்லை. ''எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருப்பேன்'' என்று இயேசு கூறியுள்ளார். எதன் பேரில் அவர்கள் கூடிவரும்பொழுது? மெதோடிஸ்ட் என்ற பெயரில் கூடி வரும்பொழுதா? பாப்டிஸ்ட் என்ற பெயரில் கூடி வருகையிலா? பெந்தெகொஸ்தே என்ற பெயரில் கூடி வருகை யிலா? இயேசுவின் நாமத்தில் கூடி வருகையில்! எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் அவர் நாமத்தில் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் வருவார். அது எத்துனை சிறியதாயினும் சரி, அதைப் பற்றி அக்கறையில்லை. அவரது சபையானது கடைசி நாட்களில் மிகவும் சிறிய கூட்டமாக ஆகிவிடும். அது இன்னும் குறைந்து கொண்டே போகும். கர்த்தர் தனது கிரியையை முன் கூட்டியே முடித்துக்கொண்டு விரைந்து வந்துவிடுவார். இல்லை யெனில், எடுத்துக் கொள்ளப்படுவதற்கு மாம்சமான எவருமே இருக்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ'' முதலாம் சுற்று அதில் அப்போஸ்தலர்கள். இதுவே சபையின் துவக்கம் என்று நாம் காண்கிறோம். அதுவே பெந்தெ கொஸ்தே. அதே மகத்தான தேவன் அவர்கள் நடுவில் அதே மகத்தான அடையாளங்களோடு உலாவுகிறார். ஒவ்வொரு சபைக் காலத்திலுமே அவர் உலாவுகிறபடியினால், அதே மகத்தான அடை யாளங்கள் எல்லாக் காலங்களிலுமே தொடர்ந்து வந்து கொண் டிருக்க வேண்டும். யாரை அவர் ஆசீர்வதிக்கிறார்? அவருடைய நாமத்தினால் கூடிவருகிற அவருடைய ஜனங்களையே. 47சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்த்துக் கொண்டு போகையில், நீங்கள் இந்த ஒரு விஷயத்தைக் கவனிக்க விரும்பு கிறேன். இந்த சபை (முதல் சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபையும் (இரண்டாவது சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபையும் (மூன்றாவது சபை) இயேசுவின் நாமத்தைப் பெற்றிருந்தது. இந்த சபை (நான்காவது சபை) இயேசுவின் நாமத்தை இழந்துவிட்டது. இந்த சபை (ஐந்தாவது சபை) லூத்தரின் காலமாக வெளி வருகிறது, அது ''உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் மரித்தவனா யிருக்கிறாய்'' என்று அழைக்கப்பட்டது. இவ்வாறான நிலைமை இந்த சபையின் காலத்தின் முடிவு (ஆறாவது சபைக்காலம்) வரைக்கிலும் நீடித்தது. இந்த சபையின் காலத்திற்கும் (ஆறாவது சபைக்காலம்) இந்த சபையின் காலத்திற்கும் (ஏழாவது சபையின் காலம்) இடையில் திறந்தவாசல் வைக்கப்படுகிறது, அதுவே நாமத்தை சபைக்கு திரும்ப கொண்டு வருகிறது. வேத வாக்கியங் களை நாம் படித்த பிறகு, அது சத்தியம்தானா என்பதை கவனித்துப் பாருங்கள். அது அந்த காலங்களுக்கு இடையில். நாளை இரவு இவ்விளக்கப்படத்தை நான் இங்கு பொருத்தி வைக்க முயலுவேன், அதினால் நாம் யாவரும் அதை பார்த்துத் தெரிந்து கொள்ளமுடியும். நாளை பிற்பகல், இங்கு வந்து, நான் பேசப் போகிறவைகளைப் பற்றிய திட்டங்களைப் பற்றி வரைந்து வைப்பேன். உங்களில் எவரிடமாவது வரலாற்றுப் புத்தகங்கள் இருந்தால் உங்களுடன் கொண்டு வாருங்கள். அல்லது உங்களு டைய குறிப்புக்களை நூலகங்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள வரலாற்றுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு படித்து, இது சரிதானா என்று பாருங்கள். இப்பொழுது முதலாம் வசனம்; இங்கே அவர் என்ன செய்கிறார்? அவர்களை வாழ்த்துகிறார். “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; (யோவானுக்கு) ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டு, ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது, 48இரண்டாம், மூன்றாம் வசனங்களில் அவர்களை அவர் புகழுகிறார். “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமை யையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்... அறிந்திருக்கிறேன்” முதலாம் சபைக்காலத்திலேயே விசுவாசத்துரோகமானது ஏற்பட ஆரம்பித்துவிட்டது என்பதைப் பாருங்கள். அங்கே அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஏனெனில், இயேசு தமது சாட்சியில் உரைத்தபடி, வேத நெறிகளையும், வேத வார்த்தை களையும் கடைபிடிக்க விரும்பின தெரிந்து கொள்ளப்பட்டதும், உண்மையானதுமான சபையானது ஏற்கனவே பிரிந்து போக ஆரம்பித்தனர். அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம் பித்தது; வேத வாக்கியத்திற்கு முரணானவைகளையும், தவறானவை களையும், வேதத்தோடு ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ முயற்சி செய்து உபதேசிக்கும் கள்ளப் போதகர்கள் அப்பொழுது எழும்ப ஆரம்பித்தார்கள். எனவே தான் அவர் இந்த வெளிப்பாட்டை சபைக்குக் கொடுத்து, இவ்வாறு கூறினார்; “இதிலிருந்து ஒன்றை எவன் எடுத்துப் போடுகிறானோ அல்லது இதோடு ஒன்றை எவன் கூட்டு கிறானோ, இவனுடைய பங்கு ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்'' அப்படிச் செய்தால், சகோதரனே, நீ இழக்கப் படுவாய். தேவனுடைய வார்த்தையில் அனாவசியமாய் தலை யிடாதே. அது யாரை புண்படுத்தினாலும் சரி, அல்லது எதைப் புண்படுத்தினாலும் சரி, அது உரைக்கப்பட்ட வண்ணமாகவே அதை உரை. அங்கே அது எழுதப்பட்ட வண்ணமாகவே உரைக்க வேண்டும். அதுதான் வழி. வேத வாக்கியத்தை நமக்கு வியாக்கி யானிக்க பிரபலமான ஒரு நபரோ, அல்லது எந்தவொரு மத குருவோ தேவையில்லை. பரிசுத்த ஆவியாகிய தேவனே நமக்குரிய வியாக்கியானியாயிருக்கிறார். அவரே உரிய வியாக்கியானத்தை தருகிறவராயிருக்கிறார். 49ஏற்பட்ட தீமைகளைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் பார்த்த பிறகு, அவர்கள் பொய்யானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது; தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களா யிருந்தார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். எவ்வாறு சபையானது வெறும் சடங்காச்சார ரீதியில் ஆகியது என்பதைப் பாருங்கள். பரிசுத்த ஆவியின் அசைவின் கீழ் இருந்த ஜனங்களை அவர்கள் உள்ளம் உடைந்து நொறுங்கும்படி செய்தார்கள், அதினால், பார்க்கிற மற்ற ஜனங்கள் அவர்களை கேலி செய்தார்கள். ''நீதியினிமித்தம் துன்பப்பட்டால் நீங்கள் பாக்கிய வான்களாயிருப்பீர்கள்'' என்று இயேசு கூறவில்லையா? துன்பப் படுத்தப்பட்டால், அதற்குப் பயந்து கொண்டு, நீங்கள் வெறும் குளிர்ந்து போன நிலையில் ஆகிவிடுங்கள் என்று அவர் சொல்ல வில்லையே. “மகிழ்ந்து களிகூருங்கள். உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும் அவர்கள் அவ்வாறே துன்பப்படுத்தினார்கள்'' என்று கூறினார். மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5ம் அதிகாரத்தில் மலைப் பிரசங்கத்தில் ”பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். கர்த்தராகிய இயேசுவை நீங்கள் நேசிக்கிறபடி யினால் மக்கள் உங்களை பரிகசித்தால், அது உங்களுக்கு ஆசீர்வாத மாகவே இருக்கும். அவர்கள் உங்களை சபித்தால் அதின்மூலம் அவர்கள் உங்கள்மேல் தேவனுடைய ஆசீர்வாதங்களையே கொண்டு வருகின்றனர். அக்காலத்தில் பிலேயாமுக்கு நேர்ந்ததது போல், அவர்கள் போடும் சாபம் அவர்கள் மேலேயே திரும்பி விடுகிறது. நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பதினிமித்தம் அவர்கள் உங்களைப் பரிகசித்தால், அது அவர்கள் மேலேயே திரும்பிவிடும், உங்களையோ தேவன் ஆசீர்வதிக்கிறார், ஏனெனில், ''என் நாமத் தினிமித்தம் மனிதர் உங்களைத் துன்பப்படுத்தினால் நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவருடைய நாமத்தினிமித்தம் “நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரிக்கிறவர்களாக ஆக ஆரம்பித்தார்கள் என்று நாம் கண்டோம். 50இப்பொழுது நான் இந்த இடத்தில் சற்று நிறுத்தி விட்டு, ஒரு காரியத்தை சொல்ல முடியும். நான் அவ்வாறு செய்வேன் என்று நம்புகிறேன். ஊழியக்காரரான சகோதரர்களே, இதை நீங்கள் சோதித்துப் பாருங்கள்; அதாவது, ரெபெக்காள் ஏசா, யாக்கோபு என்ற இரட்டையரை பிறப்பித்தது போல, எந்தவொரு எழுப்புதலும் இரட்டையர்களைப் பிறப்பிக்கிறது. ஈசாக்கும் ரெபெக்காளும் இரட்டையர்களைப் பிறப்பித்தார்கள். தந்தையும் பரிசுத்தமானவன், தாயும் பரிசுத்தமானவள், அப்படியிருக்க, அவர்களுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டையர்கள் பிறந்தனர். அவர்கள் இருவருமே தேவ பக்தியுள்ளவர்களாயிருந்தனர். ஆனால் ஏசாவோ நற்கிரியைகளைப் பொறுத்தமட்டில் பிரமா ணங்களை மிகவும் கண்டிப்பபுடன் பின்பற்றுபவன் என்ற ரீதியில், ஒருவேளை எல்லாவகையிலும், யாக்கோபைவிட மேலானவனாக இருந்திருப்பான், நீங்கள் அதை அறிவீர்களா? எப்பொழுதும் தன் தாயையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பவனாக சிறுவன் யாக்கோபு காணப்பட்டான். ஆனால் ஏசாவோ, வெளியே போய் வேட்டையாடி, அதின் மூலம் கிடைத்த மான் இறைச்சியை சமைத்து, வயதானவரும், குருடானவரும், தீர்க்கதரிசியுமான தன் தந்தைக்கு உணவளித்து, அவரை நன்கு கவனித்துக் கொண்டான். ஆனால் யாக்கோபுக்கோ, ஒரே ஒரு காரியம் தான் எப்பொழுதும் அவன் சிந்தையில் இருந்து வந்தது; அது தான் சேஷ்டபுத்திர பாகம்! எவ்வளவு காலம் வேண்டுமாலும் காத்திருந்து, எதைச் செய்தாகிலும், அவனுடைய வாழ்க்கையின் பிரதான இலக்காகிய சேஷ்டபுத்திர பாகத்தை அடைய அவன் மிகவும் கவனமாயிருந் தான். ஏசாவோ அதை அலட்சியம் செய்தான். 51நீங்கள் அந்த மாம்சப்பிரகாரமான மனிதனை இங்கே காண வில்லையா? ஒரு எழுப்புதல் வரும்பொழுது, அதிலிருந்து இரண்டு விதமான வகுப்பினர் தோன்றுகின்றனர். அவ்வாறு தோன்றும் இருவரில் ஒருவனாகிய மாம்சப்பிரகாரமான சுபாவ மனிதன் பீடத்தண்டையில் வந்து, ''ஆம் ஐயா, நானும் கிறிஸ்துவை எனது இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' என்கிறான். அவன் அதன் பிறகு புறப்பட்டுச் செல்லுகையில், அவனுக்கு என்ன சம்ப விக்கிறது? அவன் செய்யும் முதல் காரியம், நல்ல குளிர்ந்த, சடங் காச்சார சபையொன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஏனெனில், ''நல்லது, நான் சபையுடன் சேர்ந்து கொண்டால், அடுத்தவனைப் போலவே நானும் நல்லவன் தானே, ஒரு சபையில் சேர்ந்து என்னுடைய அறிக்கையை நான் செய்யும் வரைக்கும், அதனால் என்ன வித்தியாசம்?'' என்று எண்ணுகிறான். நிச்சயம் அது பெரிய அளவில் வித்தியாசமானது தான். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். உங்களுக்கு சேஷ்ட புத்திரபாகம் கிடைத் திருக்க வேண்டும். யாக்கோபு எவ்வளவாக பரிகசிக்கப்பட்டாலும் அதைக் குறித்து அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு அந்த சேஷ்டபுத்திர பாகம் தேவையாயிருந்தது. அவன் அதை எவ்விதத்தினாலாவது பெற்றுக்கொள்வதைக் குறித்து கவலைக் கொள்ளவில்லை. 52அநேக மக்கள் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறதேயில்லை. ஏனெனில் சேஷ்டபுத்திரபாகம் என்பது, அவ்வளவு ஒன்றும் கௌரவம் மிக்கது அல்ல என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பீடத்தண்டை வந்து, முழங்கால்படியிட்டு, கொஞ்சம் அழுது ஜெபிக்கவோ, அல்லது சில வேளை உணவுகளை வெறுத்திடவோ விரும்பவில்லை. அதைச் செய்ய அவர்கள் விரும்பவில்லை. அநேகம் பெண்கள், தாங்கள் அழுது கண்ணீர்விட்டு ஜெபித்துவிட்டால் தங்களுடைய முகத்தில் பூசிக் கொண்டுள்ள அழகுபடுத்தும் சாதனங்கள் கண்ணீரில் கரைந்து போய்விடுமே என்றும், அதினால் திரும்ப பூசிக் கொள்ள வேண்டியது வருமே என்றும் அஞ்சி, பீடத்தண்டை வருவதே யில்லை. பரிசுத்தகுலைச்சலான ரீதியில் நான் இவ்வாறு சொல்ல வில்லை. அந்த அர்த்தத்தில் நான் சொல்வது தொனிக்காது என்று நம்புகிறேன், ஆனால் அதுதான் சத்தியம். அவர்களுக்கு அது பிரியமில்லை. புதிய பிறப்பை (மறுபிறப்பு) அடைய அவர்கள் விரும்புவதேயில்லை. ஏனெனில் புதிய பிறப்பு என்பது சற்று அருவருப்பு ஊட்டக்கூடியது போல் அவர்களுக்கு காணப்படு கிறது. எந்தவொரு இயற்கை பிறப்பைப் போலவே அதுவும் இருக்கிறது. எந்தவொரு பிறப்பும் சற்று அசிங்கமாகத்தான் இருக்கும். பிரசவித்து பிறத்தல் எங்கு நேரிட்டாலும் சரி அக்கறை யில்லை. அது ஒருவேளை பன்றி அடைக்கும் பட்டியில் நடந்தாலும் சரி, அல்லது ஒரு பண்டகசாலையில் நடந்தாலும் சரி, அல்லது அலங்கரிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையிலாகட்டும், அது ஒரு சுத்தமில்லாத அருவருப்பான காட்சியாகத்தான் இருக்கும். 53எனவே, புதிய பிறப்பும் அவ்வாறே இருக்கிறது. ஆமென். புதிய பிறப்பு உங்களுக்கு நேரிடும் போது, நீங்கள் செய்வோம் என்று நினைத்துப் பார்க்காத காரியங்களை செய்வீர்கள். நீங்கள் ஒரு மூலையில் நின்று கொண்டு, தம்புரூவை அடித்து பாட்டுப் பாடி, ''தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை'' என நீங்கள் ஆர்ப்பரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு புத்திசுவாதீனமில்லாதவனைப் போல் நடந்து கொள்கிறீர்கள். அப்போஸ்தலர்களுக்கும் அதுதான் நேரிட்டது; கன்னி மரியாளுக்கும் புதிய பிறப்பு நேரிட்டபொழுது, குடித்தவளைப் போல் பிறருக்கு காணப்பட்டாள். மரியாள் சமுதாயத்தில் ஒரு அசிங்க மானவளாக காணப்பட்டாள். ஆனால் ஜீவனானது பிறப்பின் மூலம் வெளியே வருவதென்றால் அப்படித்தான் அருவருப்பாகக் காணப்படும். ஆமென்! ஏதாவது ஒன்று செத்து அழுகிப் போகாவிட்டால், அதிலிருந்து ஜீவனானது புறப்பட்டு வர முடியாது. ஒரு மனிதன் தன் சிந்தையில் மரித்து அழுகிப் போகாவிட்டால், கிறிஸ்து அவனது இருதயத்தினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் நீங்களோ, ''இப்பொழுது நான் பீடத்தண்டை போய், 'ஆம் ஆண்டவரே, நான் அருமையானவன், நான் உம்மை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய தசமபாகங்களைச் செலுத்துவேன், இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருப்பதை விட, நீங்கள் உங்களுடைய சிந்தைகளுக்கு மரித்து, அச்சிந்தைகள் அழுகிப்போக விடவேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களை தன் கையிலெடுத்து, உங்களுடன் அவர் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யும்படி நீங்கள் விட்டுவிட வேண்டும். பரிசுத்த ஆவி உங்களுக்குள் வந்து அதினால், பிறர் உங்களை அருவருப்பாக எண்ணினாலும் பரவா யில்லை, அது கடுமையாக தொனிக்கக் கூடும், ஆனால் அது பரிசுத்த குலைச்சலான பேச்சல்ல, அது சத்தியமாக இருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு எனக்குத் தெரிந்திருக்கிற முறை அதுவே. 54அந்நாளில், அந்த அந்தஸ்து மிகுந்த யூதர்கள் கூட்டத்திற்கு முன்பாக அவர்கள் வெளியே வந்து பரியாச உதடுகளினால் பேசினார்களே, அப்பொழுது அந்த யூதர்களுக்கு அதைவிட அருவருப்பான காட்சி வேறு என்ன இருந்திருக்க முடியும்? தெற்றி அல்லது குழறி குழறிப் பேசுதல் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (சகோ.பிரான்ஹாம் குழறிப் பேசுதல் என்றால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டுகிறார் - ஆசி). அந்நிய பாஷைகளில் பேசுதல்... குடித்தவர்களைப் போல் நடந்து கொள்ளுதல். (சகோ.பிரான்ஹாம் எவ்வாறு குடித்தவன் நடந்து கொள்வான் என்பதை செய்து காட்டுகிறார் - ஆசி). அப்படித்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பிறர் பார்வைக்கு அசிங்கமானவர்களாகத் தோற்றமளித்தார்கள். “இந்த மனிதர்களெல்லாம் புதுத் திராட்சரசத்தினால் வெறித் திருக்கிறார்களா?'' என்று கேட்டனர். ஆனால் அவர்களிலொருவன் ஆவியினால் அந்நிய பாஷை யில் பேசுவதை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி, “நீங்கள் நினைக் கிறபடி அவர்கள் வெறிகொண்டவர்களல்ல'' என்று கூறி விட்டு, உடனே வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறான். ”கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது. 55அவ்விதமாகத்தான் சபையானது ஆதியில் பிறந்தது. தேவன் முடிவில்லாதவர் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அப்படியாயின் அவர் மாறாதவராயிருக்க வேண்டும். எப்படிப் பட்ட சபை ஆதியில் உண்டாக வேண்டும் என்று தேவன் சிந்தை கொண்டிருந்தாரோ, அதைப் போலவே கடைசியிலும் அதே விதமான சபையைத்தான் அவர் உடையராயிருப்பார். அவர் மாற முடியாது. ஆகவே, ஆதியில் நடந்ததை பெற்றுக் கொள்ளாமல், அவைகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில், அதற்கு பதிலாக இப்பொழுது நீங்கள் கைகளை குலுக்கிக் கொள்ளுதல், தெளித்தல் மற்றும் இன்ன பிற காரியங்களை எப்படி கொண்டுவர முடியும்? ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் பெந்தெகொஸ்தேக்குப் பிறகு செய்த ஊழியங்களிலெல்லாம், ஆதியில் உள்ள மாதிரியையே விடாமல் பின்பற்றினார்கள். அவர்கள் மேல் பரிசுத்த ஆவி விழுந்த போது, பேதுரு, ''நம்மைப் போல் பரிசுத்த ஆவியைப் பெற்ற அவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா!'' என்று சொல்லி, “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்''. அது உண்மை . பவுல் ஒரு சமயம், ஆர்ப்பரித்து, தேவனை மகிமைப்படுத்தி மிகவும் ஆரவாரமான வேளையைக் கொண்டிருந்த ஒரு கூட்டம் பாப்டிஸ்ட்களை கண்டான். அப்போஸ்தலர் 19ல் பவுல் இவ்வாறு கூறுகிறான்; ''நீங்கள் விசுவாசிகளானது முதற்கொண்டு இது வரையில், பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' 56“பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை'' என்றார்கள். 'அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்று பவுல் கேட்டான். அதற்கு அவர்கள், “இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத் தானே யோவான் ஸ்நானன், அதே மனிதன் கொடுத்த ஞானஸ் நானத்தைத் தான் நாங்களும் பெற்றோம்'' என்றார்கள். 'ஆம், அந்த ஞானஸ்நானம் இனிமேல் கிரியை செய்யாது'' என்று பவுல் கூறினான். பாருங்கள், பேதுரு திறவுகோலை உடையவனாயிருந்து பெந்தெகொஸ்தேயில் செய்ததை அவன் அறிந்திருந்தான். பேதுருவினிடம் திறவு கோல் இருந்தது, பாருங்கள். “இது இனிமேல் கிரியை செய்யாது'' என்றும், ”நீங்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தாக வேண்டும்'' என்றும் பவுல் கூறினான். எனவே, அவன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். பிறகு, அவன் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, ஆதியில் அவர்கள் மேல் எப்பேர்ப்பட்ட அனுபவங்கள், விளைவுகள் ஏற்பட்டதோ, அதேவிதமான அனுபவம் இவர்களுக்கும் ஏற்பட்டது. அவர்கள் மேல் பரிசுத்த ஆவி வந்து, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசினம் உரைத்தார்கள். ஆதியில் இவ்வாறு சபையானது ஆரம்பித்தது, அதைப் போலவே சபைக் காலங்கள் தோறும் சபையானது இருந்து வந்துள்ளது. 57''உன் பொறுமையை அறிந்திருக்கிறேன். நீ மிகுந்த நீடிய பொறுமையை உடையவனாய் இருந்து வந்திருக்கிறாய். அது எனக்குத் தெரியும். குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவுகிறவர் நானே என்பதை நினைவில் கொள்வாயாக. உன்னுடைய பொறுமையையும், உன்னுடைய கிரியைகளையும், உன்னுடைய பாடு களையும், உன்னுடைய அன்பையும் நான் அறிந்திருக்கிறேன். நீ செய்திருக்கிற யாவற்றையும் நான் அறிவேன். தங்களை 'தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள்' என்று தாங்களே அழைத்துக் கொள்ளும் இந்த நபர்களை நீ சோதித்து அறிந்து, அவர்கள் பொய்யரென்று கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்''. ஓ! மிகவும் பட்டவர்த்தனமாகக் கூறப்பட்டுள்ளதல்லவா? இதற்கு நான் பொறுப்பாளியல்ல, அவரே பொறுப்பாளி. அவர்கள் பொய்யர்கள் என்று அவர் கூறியுள்ளார். வேதமோ ''எந்தவொரு மனிதனையும் சோதித்துப் பார். உங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசி இருந்தால் அல்லது அவன் தான் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அந்த தீர்க்கதரிசி சொல்லும் காரியம் நிறைவேறினால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள். ஏனெனில் நானே அவனோடிருக்கிறேன். ஆனால் அவன் கூறிய வைகள் நிறைவேறாமற்போனால், நீங்கள் அவனுக்கு செவி கொடுக்கவோ, அஞ்சவோ வேண்டாம். என்னுடைய வார்த்தை அவனிடம் இல்லை'' என்று கூறுகிறது. பாருங்கள், அது அவருடைய வார்த்தையானால் அது அப்படியே நிறை வேறும். 58முதலாம் சபையின் காலத்தில் அவர்கள் சிலர் தேவனுடைய வார்த்தையின்படியே காரியங்களைச் செய்வதில்லை என்பதை கண்டு பிடித்தனர். பாருங்கள், வேறெதோ ஒன்றை அடைய அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். (இன்னும் சில நிமிடங் களில் இவ்விஷயத்தில் உள்ள தங்கக்கட்டி போன்றதொரு கருத்தை நாம் பார்க்கப் போவதால், சொல்லப்படுகிற விஷயங்களின் பேரில் உங்கள் கருத்தோட்டத்தை தீர்க்கமாக பாயவிடுங்கள்). நீங்கள் நீடிய சாந்தமுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர் களாயும், அவர்களைச் சகித்துக் கொண்டிருக்கிறதையும், அவர்களைச் சோதித்து, அவர்கள் அப்போஸ்தலரல்ல என்று கண்டறிந்ததையும் நான் அறிந்திருக்கிறேன், அவர்கள் அப்போஸ்தலரல்ல'' என்று கூறுகிறார். நாம் மீண்டும் இதை துவங்கு முன்னர், ஒவ்வொரு எழுப்புதலும் ஒரு ஜோடி இரட்டையரைப் பிறப்பிக்கிறது என்று நான் கூறினேன். அதில் ஒருவன் ஆவிக்குரியவனாகவும், மற்றவன் பூமிக்குரிய மாம்ச சுபாவ மனிதனாகவுமிருந்தான். ''நான் இன்ன சபையைச் சேர்ந்து விட்டேன், எல்லோரைப்போல நானும் நல்லவன்தான்'' என்று கூறுகிறார்கள். எழுப்புதல் இதையுந்தான் பிறப்பித்திருக்கிறது. ஒவ்வொரு எழுப்புதலும் இந்தவிதமான நபர்களை பிறப்பித்து விடுகிறது. அவ்விதமான ஒரு இனத்தை லூத்தரின் காலத்தில் ஏற்பட்ட எழுப்புதலும் பிறப்பித்தது. ஐரேனியஸின் காலத்து எழுப்புதலும் அப்படிப்பட்ட சாராரைப் பிறப்பித்தது. பரிசுத்த மார்ட்டினின் ஊழியத்தினால் ஏற்பட்ட எழுப்புதலும் அப்படிப்பட்ட சாராரைப் பிறப்பித்தது. கொலம் பாவினுடையதும் அப்படியே பிறப்பித்தது. வெஸ்லியினு டையதும் அப்படியே. பெந்தெகொஸ்தேயின் எழுப்புதலும் இந்த வகையான நபர்களை பிறப்பித்துள்ளது. 59அவர்கள் எவ்வாறு சீர்கெட்டுப் போனார்கள் என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்களுக்கென பெரிய கட்டிடங்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டு, இன்னும் வழுவிக் கொண்டே சென்றார்கள். எழுந்து நின்று 'அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்' என்று ஒன்றை திரும்பக் கூறி, 'பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களுடன் கொள்ளும் ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று அறிக்கை யிடுகிறார்கள். பரிசுத்தவான்களுடன் கொள்ளும் ஐக்கியத்தை விசுவாசிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அந்நபர் செத்துப் போன ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் கொள்கையை உடைய நபராவார். செத்துப் போன ஆவிகளோடு பேசுகிறேன் என்று கூறி அதில் விசுவாசம் வைக்கும் செய்கையானது பிசாசினால் உண்டா யிருக்கிறது. அதைப் பற்றி சந்தேகமேயில்லை. மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் ஒரேயொரு மத்தியஸ்தர்தான் உண்டு. அவர் மனிதனாகிய இயேசு கிறிஸ்துவே. அது உண்மை . பேதுரு அதைத் தான் சொன்னான். அருமையான கத்தோலிக்க மக்களே, இயேசுவோடு நடந்த பேதுருவைப் போய் நீங்கள் முதலாவது போப்பு என்று அழைக்கிறீர்கள். 60''மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே வேறு எந்த மத்தியஸ்தரும் இல்லை'' என்று அவர் கூறுகிறார். நீங்கள் இன்றைக்கு, இன்னும் 10000 பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்களாக கொண்டுள்ளீர்கள். சபையானது மாறாத, பிழையே செய்யமுடியாத தன்மை கொண்டதாக இருக்குமானால், ஏன் நிறைய மாற்றம் ஏற்பட்டது? உங்கள் பூசைப்பலிகள் எல்லாம் இலத்தீன் மொழியில் உச்சாடனம் செய்யப்படுவதால் மாறாது என்று எண்ணுகிறீர்களா? என்ன நடந்தது? அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் வேதத்தில் எங்கே யிருக்கிறது? அப்போஸ்தலர்களுக்கு விசுவாசப் பிரமாணம் என்று ஒன்று இருந்திருக்குமானால், அது “மனந்திரும்பி ஒவ்வொரு வரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள்'' என்ற அந்த பிரமாணம் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் அறியவோ உச்சரிக்கவோ இல்லை. 'பரிசுத்த ரோம சபைகள்' என்பதும், மற்றும் கத்தோலிக்க மதத்தின் ஏனைய இந்த உச்சாடனங்களும் “வானத்தையும் பூமியை யும் காப்பாற்றுகிற சர்வ வல்லமை பொருந்திய பிதாவாகிய தேவன்'' என்பதும், அபத்தமானது. இவைகள் வேதத்தில் இல்லை. அப்படிப்பட்ட காரியம் வேத வாக்கியங்களில் காணப்படவில்லை. அவர்களாகவே கற்பனையாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கோட்பாடு இது. கத்தோலிக்கர் உச்சாடனம் செய்யும் அவர் களுடைய ஜெபங்கள் யாவும் கற்பனையாக புனைந்து ஏற்படுத்திக் கொண்டவைகளாகும். 61இன்றைக்கு நம்முடைய ப்ராடெஸ்டெண்டுகளை நாம் பார்க் கையில், அவர்களும் சத்தியத்தை விட்டு தூர விலகிப் போனார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பில்லிகிரகாம் “மக்கள் ரொம்பவும் தவறானதில் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இவ்வாறு தவறில் இருக்கையிலேயே, தாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார். அவர் கூறியது சரிதான். அது சத்தியமானது தான். இவ்வாறு அவர் கூறியதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜார்ஜ் ஜெஃப்ரீஸ் என்பாரின் ஊழியத்தில் பில்லிகிரகாம் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார் என்று எனக்குத் தெரியும். ஆதலால் இந்நாட்களில் ஒன்றில் அவர் அதை விட்டு வெளியே வந்து விடுவார். தேவன் அவரை இப்பொழுது உபயோகித்துக் கொண்டு இருக்கிறார். எனவே அவரால் அந்த இராஜ்யத்தை அசைக்க முடியும், வேறு யாரும் அவரைப் போல் அதனுள்புக முடியாது. ஆனால் அவருடைய பிரசங்கத்தை நீங்கள் கவனித்தீர்களானால், அதன் பின்னால் ஏதோ இருக்கிறது. ஏனெனில் அவரோடு கை குலுக்கிக் கொள்கிறதினால் ஐக்கியங் கொள்ளலாம் என நம்பும் இந்த பாப்டிஸ்டுகள் அவர் பின்னால் அவர் மேல் செல்வாக்குச் செலுத்திக் கொண்டு இருந்து வருகிறார்கள். ஆம் ஐயா! இப்பொழுது; உன்னுடைய கிரியைகளையும்... உன் பொறுமையையும்... எவ்வாறு நீ அவர்களை.... இப்பொழுது இவ்வசனத்தைப் பார்ப்போம். “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறு மையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக் கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தல ரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் அறிந்திருக்கிறேன்.” வெளி. 2:2 62அவர்களை பொய்யரென்று கண்டறிந்துள்ளனர். எவ்வாறு அவர்கள் அதைக் கண்டுபிடித்தனர்? வேதவாக்கியத்தை சரியாக அவர்கள் மேற்கோள் காட்டாத காரணத்தால். ஒரு மனிதன், “வேதமானது எபிரெயர் 13:8ல் 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது'' என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து, 'ஆ, அற்புதங் களின் காலம் கடந்து போய்விட்டது'' என்று சொல்வானாகில் அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான். வேதமானது, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறுகையில், வேதத்தில் ஒவ்வொரு இடத்திலும் அதே காரியத்தைத்தான் ஆண்டவர் கூறி யிருக்கிறார், வேதாகம காலத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அப்படியிருக்கையில், எவனாவது இதற்கு முரணாக தெளித்தல் மூலமோ அல்லது வேறு எந்த விதத்திலோ ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டால், அம்மனிதன் ஒரு பொய்காரன், அவன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கண்டுகொள்ளலாம். 63நான் உங்கள் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்று நம்பு கிறேன். சகோதரனே, இக்காரியத்தில் நீங்கள் குழந்தையைப் போல இதை கொஞ்சிக் குலாவ முடியாது. நீங்கள் கையுறைகளைக் கழற்றி விட்டு, சுவிசேஷத்தை கையாள வேண்டும். பாருங்கள்? அதுதான் சத்தியம். இதற்கு மாறாக எதையாவது காண்பியுங்கள் பார்க்கலாம். இயேசுவின் நாமத்தினாலேயன்றி, வேறு எந்த நாமத்தினாலும், எவராவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்களா என்பதை எனக்குக் காண்பியுங்கள், பார்க்கலாம். கத்தோலிக்க சபைதான் அதை ஏற்படுத்தியது. ஆகவே அப்படிப்பட்ட ஞானஸ்நானத்தை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் கிறிஸ்தவ சபையில் அங்கம் வகிப் பவர் அல்ல; நீங்கள் கத்தோலிக்க சபையில்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் கத்தோலிக்க சபை ஏற்படுத்திய முறையில்தான் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். கத்தோலிக்கருடைய 'சண்டே விசிட்டர்'' என்ற செய்தித்தாளில் அவர்களுடைய உபதேசப் புத்தகத்தைப் பொறுத்த இவ்வாறான ஒரு கேள்வி காணப்பட்டது. “ப்ராடெஸ்டெண்டுகள் இரட்சிக்கப்படுவார்களா?” இது கேள்வி. இதோ இதற்கு அவர்களே அளிக்கும் பதில்; 'அவர்கள் அநேகர் அடைவார்கள். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஞானஸ் நானத்தையும் நம்முடைய மற்ற காரியங்களையும் பெற்றிருக் கிறார்கள். அவர்கள் வேதத்தைக் குறித்து உரிமை கொண்டாடு கிறார்கள். வேதமோ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ் நானம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. நாமோ அதை அதிலிருந்து அகற்றிவிட்டு, “பிதா குமாரன் பரிசுத்த ஆவி” யின் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று ஆக்கிவிட்டோம். இதை ப்ராடெஸ்டெண்டுகள் முழுப்பெலத்தோடு பின்பற்று கிறார்கள்''. நிச்சயமாக பார்த்தீர்களா? அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்லவே அல்ல, அது கத்தோலிக்க ஞானஸ்நானமே. 64அன்றொரு இரவில், “கிறிஸ்தவ ஞானஸ்நானம் எடுத்தீர்களா?'' என்று கூறப்பட்டதைக் கேட்டீர்களா? கிறிஸ்தவ ஞானஸ்நானம். கிறிஸ்து, ”இயேசு கிறிஸ்து'' ஏதோ சில பட்டங்களில் அல்ல. இப்பொழுது மூன்றாம் வசனம். “நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக் கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப் பட்டதையும் அறிந்திருக்கிறேன். வெளி.2:3 “என் நாமத்தினிமித்தம்” அவர்களுக்கு பொறுமையிருந்தது என்பதை கவனித்தீர்களா? எதற்காக பிரயாசப்பட்டார்கள்? அவரு டைய நாமத்திற்காக . அந்த சபைக்காலத்தில் அவர் நாமத்தைப் பற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த வாரத்தில் நாம் தொடர்ந்து படிக்கையில், எவ்வாறு அவர் நாமத்தைப் பற்றிக் கொள்ளுகிற விஷயத்தில், அது மங்கிக் கொண்டே போய், முடிவில் வேறு நாமத்தில் போய் முடிந்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள். “என் நாமத்தினிமித்தம் பொறுமையாயிருக்கிறதையும், இளைப் படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்'' அவருடைய நாமத்தினிமித்தம் பிரயாசப்பட்டார்கள். எந்த சபையின் நாமத்தையும் விட மேலாக இயேசு கிறிஸ்து வின் நாமத்தை உயர்த்திட வேண்டும், அதுவே பிரதானமானதாக இருக்கட்டும். “எதைச் செய்தாலும்... வார்த்தையினாலும், கிரியை யினாலும், நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே செய்யுங்கள்'' என்று வேதம் கூறுகிறது. அது சரிதானே? ”வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும்'' நீங்கள் விவாகத்தை செய்து வைப்பதாயிருந்தால், மணமக்களைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களிருவரும் கணவனும் மனைவியுமாக இருக்கிறீர்கள்'' என்று சுதந்திரமாக அறிவிக்க உங்களுக்கு இயலாது போகுமானால், அந்த அளவுக்கு அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்து சொல்ல, உச்சரிக்க தயக்கமுள்ளவர்களாக இருப்பின், அவர்களைப் போகவிடுங்கள். அவர்களுக்கு நீங்கள் விவாகம் செய்து வைக்க வேண்டாம். சரி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமானால் இயேசுவின் நாமத்தில் கொடுங்கள். 65இயேசுவின் நாமத்தில் எந்தக் காரியத்தையாவது செய்ய இயலாதபடி இருக்குமானால், அதைச் செய்ய வேண்டாம்! எவரோ கூறினாராம், ''சிறிது மதுவை உட்கொள்ளுங்கள்'' என்று இயேசுவின் நாமத்தில் நீங்கள் அதைச் செய்யவே முடியாது. நீங்கள் அதைச் செய்ய வேண்டாம். ''கொஞ்சம் சீட்டு விளையாடுங்கள்'' என்று யாராவது சொன்னால், நீங்கள் அதை இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது, ஆகவே அதையும் விட்டுவிடுங்கள். சீட்டுக் கச்சேரிகளில் அசிங்கமான ஹாஸ்யத் துணுக்குகளைக் கூறுவது, அதை நீங்கள் இயேசுவின் நாமத்தில் செய்யவே முடியாது, ஆகவே அதையும் விட்டு விடுங்கள்! இவ்வாறு நான் கூறிக்கொண்டே போக முடியும், ஆனால் நான் கூறுவது என்ன என்று நீங்கள் அறிவீர்கள். சரி, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. அவர் நாமத்தினால் எதையெல்லாம் நீங்கள் செய்யக் கூடாதோ அவைகளை விட்டுவிடுங்கள். ஏனெனில், “வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே செய்யுங்கள்'' என்று அவர் கூறியிருக்கிறார். மேற்சொன்ன வசனங்களில் அவர் அவர்களை அவர் களுடைய கிரியைகளுக்காகப் புகழுகிறார். இப்பொழுது நான் 4ம் வசனத்தில் அவர் குறைகூறுதலின் பேரில் பேசப்போகிறேன். “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு” ஓ, உனக்கு விரோதமாக எனக்கு ஒரு காரியம் உண்டு. 66“நீ பொறுமையாயிருந்திருக்கிறாய், என் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்திருக்கிறாய்''. இவ்விஷயத்தில், இன்று இங்குள்ள இக்கூடாரத்திற்கும் இது பொருந்துமல்லவா? ஆம், ஐயா! ”நீ சரியாக இருந்திருக்கிறாய், நீ மிகவும் பொறுமை யோடிருந்திருக்கிறாய்; நீ நீண்டகாலம் சகித்துக் கொண்டிருக் கிறாய். இதைவிட இன்னும் முக்கியமானது, “என் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்தாய்'' என்பதுதான். இவை யாவற்றையும் நான் மெச்சுகிறேன். அதற்காக நான் உன்னைப் புகழுகிறேன். அதெல்லாம் சரிதான். வேதத்திற்கு முரணாகப் போதித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே அப்போஸ்தலர்கள் என்று அறிவித்துக் கொள்ளும் நபர்களை, நீ சோதித்து அறிந்து அவர்களை பொய்யரென்று நீ கண்டறிந்ததையும் நான் அறிந்திருக் கிறேன். அச்செயலையும் நான் மெச்சுகிறேன். ஆனால் உனக் கெதிராக நான் கொண்டிருக்கிற ஒரு காரியம் உண்டு. அதென்ன வெனில், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாய். அந்த அருமையான பழங்காலப் பாணியிலான பரிசுத்த ஆவிக் கூட்டங்களின் மேல் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாய். இப்பொழுதோ, நீ அவற்றினின்று ஒருவாறு பின்வாங்கிப் போய், வெறும் சம்பிரதாய ரீதியில் ஆகிவிட்டு 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' என்று வெறும் உச்சாடனங்களில் இறங்கி விட்டாய்'' அவைகள் அபத்தம்! பாருங்கள்? ஓ! இந்த சமுதாயம், இவர்களிடம் ஒருவர் பெரிய அங்கியை அணிந்து கொண்டு வரவேண்டும், ஆலய பாடகர் குழுவில் பாடுவதற்கு. அவர்கள் தங்கள் விரல் நகங்களை பள பளவென தீட்டிக் கொண்டும், சிகை அலங்காரம் செய்து கொண்டும், முகத்தில் எக்கச்சக்கமான ஒப்பனைகளுடனும் வந்து இருந்து கொண்டு, பாடகர் குழுவில் அங்கம் வகித்து எப்படியோ பாடுகிறார்கள். அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. 67சமீபத்தில் நான் வியாபாரிகளால் நடத்தப்படும் ஒரு கன்வென்ஷனுக்குப் போயிருந்தேன். அது மட்டும் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களின் கூட்டமாக இல்லாதிருந்தால், அங்கிருந்து ஒரு கூட்டம் மக்களை நான் வெளியே வரும்படி அழைத்திருப்பேன். நான் அங்கே பிரசங்கிக்க இருந்தேன். ஹோட்டலில் அதை அவர்கள் நடத்த முடியவில்லை. அவர்கள் என்னை ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுடைய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நான் என்னை ஓரல் அவர்களின் படிக்கும் அறையில் அமர்ந்திருக்கையில், அங்கே பெந்தெகொஸ்தே பிள்ளைகள் நின்று கொண்டி ருந்தார்கள். பதினாறு, பதினேழு மற்றும் பதினெட்டே வயது நிரம்பிய ஆண் பிள்ளைகள் மற்றும் பெண்பிள்ளைகள் அடங்கிய முப்பது அல்லது நாற்பது பேர்கள் அடங்கிய ஒரு குழு ஒரு விதமான பாடலை பாட இருந்தார்கள். அது சைகோவ்ஸ்கி அல்லது வேறு யாரோ ஒருவர் எழுதின பாடல் போல் எனக்குத் தோன்றியது. அதைக் குறித்து பெக்கி பேசுவது வழக்கம். இலக்கிய காவிய நடையிலான பாடலாக அது இருந்தது என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது சகோதரர்கள் கூட்டத்தில் காணிக்கை எடுக்கவிருந்தார்கள். அவர்கள் கையில் சிறு கிண்ணம் இருந்தது. அவர்கள் குருடரைப் போல் நடித்தார்கள். எல்லாவித ஹாஸ்யத் துணுக்குகளையும் பேசிக்கொண்டு, நீங்கள் கேட்டிருக்க முடியாத அளவுக்கு பேசிக்கொண்டும் சென்றார்கள். அப்பெண் பிள்ளைகள், ஓரல் அவர்களின் கட்டிடத்தின் சுவர்களில் பூசப் போதுமான அளவுக்கு வர்ணத்தை, தங்கள் முகங்களில் பூசியிருந்தார்கள். இப்படியெல்லாம் நடந்து கொண்டும் அவர்கள் தங்களை “பெந்தெகொஸ்தேயினர்'' என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களிலிருந்த ஆதி அன்பை இழந்து விட்டார்கள். 68“தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது'' என்று கூறிய டேவிட் டூப்ளெஸ்ஸிஸ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக் கிறேன். நம்மிடையே மெதோடிஸ்டு பேரப்பிள்ளைகள் உண்டு. நமக்கு பாப்டிஸ்ட் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். நமக்கு பெந்தெகொஸ்தே பேரப்பிள்ளைகள் உண்டு. ஆனால் தேவனுக்கோ பேரப்பிள்ளைகள் கிடையாது. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். உங்களுடைய தாய் தந்தையர் நல்லவர்களாக இருக்கிறபடியினால், அவர்களினிமித்தம் நீங்கள் உள்ளே வந்துவிட முடியாது. அவர்கள் இந்த சிலாக்கியத்தைப் பெற என்ன கிரயத்தைச் செலுத்தினார்களோ, அதே கிரயத்தை நீங்களும் செலுத்தியாக வேண்டும். அவர்களைப் போலவே நீங்களும் மறுபடியம் பிறக்க வேண்டும். தேவனுக்கு பேரப் பிள்ளைகள் கிடையாது. நீங்கள் குமாரனாகவோ அல்லது குமாரத்தி யாகவோ தான் இருக்கிறீர்கள். பேரப்பிள்ளையாக அல்ல, அது மட்டும் நிச்சயம். ஒரு அருமையான பெந்தெகொஸ்தே சபையில் நடந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே குட்டைப்பாவாடை அணிந்து தலைமுடியை வெட்டி, அறைகுறை ஆடை அணிந்து, ஏறத்தாழ வீனரைப் (wiener) போல சதையெல்லாம் வெளியே தெரியும்படி (வீனர் என்றால், மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சியும் பன்றியிரைச்சியும் கலந்து, மிகவும் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து அதை சவ்வு போன்ற உறையில் அடைத்து வைத்திருக்கும் ஒரு வகை சாஸேஜ் பண்டம் - அந்த சவ்வு போன்ற உரைக்குள் வைக்கப் பட்டிருக்கும் அம்மிருகத்தின் இறைச்சி அல்லது சதை வெளியே நன்கு தெரியும். உடுத்தியிருந்த, மிகவும் பால் உணர்வுகளைத் தூண்டத்தக்கதான முறையில் உடையுடுத்தியிருந்த பெண்கள் நான் உள்ளே நுழைவதைக் கண்டவுடனே சிதறி ஓட ஆரம்பித்தார்கள். நியாயத்தீர்ப்பின் நாளில் நீங்கள் இச்செய்கைக்காக பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். விபச்சாரப் பாவத் தைப் பற்றி குற்றமுள்ளவர்களாக இருக்கப் போகிறீர்கள். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு தன் இருத யத்தில் விபச்சாரம் செய்தாயிற்று'' என்று இயேசு கூறினார். எனவே, ஒரு மனிதனின் கண்களுக்கு முன்பாக, இப்படிப்பட்ட கீழ்த்தரமான உடையில் நீங்கள் உங்களை காண்பித்து கொண்டால், யார் குற்றமுள்ளவர்கள் இதில்? நீங்களா அல்லது அந்த மனிதனா? சரியாக இருங்கள்? பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகுங்கள். பாருங்கள்? அதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? ஆதி அன்பை விட்டு விட்டீர்கள். அப்படிப்பட்டவர்களை, அவர்கள் கையில் ஒரு தம்புரூ கொடுத்து இசைக்கச் செய்து தெரு மூலையில் நின்று, கைகளைத் தட்டி தேவனை பாடித் துதிக்க வைக்க முடியாது. ஓ, முடியாது. அவர்களால், அங்கிகளை அணிந்த சிலரோடு சேர்ந்து கொண்டு, ஒருவிதமான 'க்ளாஸிக்கல்' இசையில் பாடல்களை பாட மட்டுமே தெரியும். அவர்கள் ஆதி அன்பை இழந்து விட்டார்கள். முதலாம் சபையின் காரியமும் அப்படித்தானிருந்தது. 69அவர்களுக்கு உலகத்தைப் போல நடக்க வேண்டியதா யிருந்தது. அவர்களுக்கு, உலகத்தைப் போல் உடையுடுக்கவும், உலகத்தைப்போல் தோற்றமளிக்கவும், உலகத்தைப்போல் நடந்து கொள்ளவும் வேண்டியதாயிருந்தது. அவர்களுக்கு அவர்களு டைய அபிமான தொலைகாட்சி நட்சத்திரம் உண்டு. தொலைக் காட்சியை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. 'நாங்கள் சூசியை நேசிக்கிறோம்' போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அவர்களுக்கு உண்டு. அதையெல்லாம் அவர்கள் பார்த்தேயாக வேண்டி உள்ளது. அந்நிகழ்ச்சியை கண்ணுற, அவர்கள் ஜெபக் கூட் டங்களைக் கூடத் துறந்து வீட்டில் தங்கிவிடுகின்றனர். அல்லது அப்படியே அவர்கள் ஜெபக்கூட்டத்திற்குப் போய்விட்டால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வீடுகளுக்கு சீக்கிரமாக திரும்ப வசதியாக ஜெபக்கூட்டத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென தங்கள் போதகரை நோக்கி கூச்சலிடுகின்றனர். தேவ பிரியராயிராமல் உலகத்தின் மேல் பிரியராயிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் சடங்காச்சாரக்காரர்களாக மாறி, 'ஆமென்'' சொல்ல இயலாத அளவுக்கு ஆகிவிட்டார்கள். அது அவர்களுடைய ஒப்பனைகளையெல்லாம் உடைத்துவிடும். அவர் களிடம் பெந்தெகொஸ்தே அனுபவம் இல்லை. அது பாப்டிஸ்ட் அனுபவமும் அல்ல. ப்ரெஸ்பிடேரியன்களுக்கும் தொடக்கத் திலிருந்தே அவ்வனுபவம் கிடையவே கிடையாது. நான் பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறேன். நான் கூறுவது சலிப்புண்டாக்கும் என்றறிவேன். ஆனால் இவற்றி லிருந்து நமக்கு ஒரு பிறப்பு உண்டாக வேண்டும். பிறப்பை அடைய ஒரு மரணம் அவசியமாயிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது சத்தியமாயிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டீர்கள். 70இந்த சபைக்கெதிராக தேவன் இத்தகைய குறை கூறுதலை கூறினால், அதற்கெதிராகவும் அவர் அதே குறைகூறுதலை கூறுகிறவராயிருக்கிறார். 'ஆதி அன்பை விட்டுவிட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறை உண்டு. உனக்கெதிராக நான் கூறும் குறை ஒன்றுண்டு. முன்பு நீ மகத்தான வேளையை உடையவனாய் இருந்தாய். ஆனால் இப்பொழுதோ லௌகீகம் உன்னிடத்தில் ஊடுருவ இடம் கொடுத்து விட்டாய், அதினால் வெறும் சடங்காச்சார ரீதியில் நடந்து கொள்ள வேண்டியவனாய் இருக்கிறாய். இன்னும் நீ என்னுடைய நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாய், சரியான காரியங்களை நீ இன்னும் செய்து கொண்டிருக்கிறாய்; உனக்கு மிகுந்த பொறுமை உண்டு, நீ பாடு படுகிறாய், கோவேறு கழுதையைப் போல், மிகுந்த பாடுபட்டு, களைப்படையாமல் பிரயாசப்படுகிறாய். என்னே! என்னே! என்னே! பார், நீயோ கிருபையையும் விசுவாசத்தையும், வல்லமையையும் பாடுபடுதலுக்காகவும், கிரியைகளுக்காகவும் மாற்றாக விட்டுக் கொடுத்துவிட்டாய். ''நல்லது, சகோ.பிரான்ஹாமே, நான் ஒவ்வொரு விதவைப் பெண்மணிக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்'' என்று நீங்கள் கூறலாம். நல்லது, அது நல்ல காரியம்தான். அதற் காக நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால் நீ முன்பு கொண்டிருந்த ஆதி அன்பு எங்கே? நீ முன்பு வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த மகிழ்ச்சி எங்கே? “ஓ கர்த்தாவே, உம்முடைய இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்'' என்று தாவீது ஒரு சமயம் கதறினான். கன்னங்களில் கண்ணீர் வடிய நீங்கள் ஜெபிக்கும் இந்த முழு இரவு ஜெபக் கூட்டங்கள் எங்கே? உங்களுடைய வேதமானது தூசி படிந்து, சிலந்தி வலை பின்னிய நிலையில் கிடக்கிறது. நீங்கள் உங்களின் பிரிய காதல் கதைகளை வாசிப்பதிலும், செய்திகளை வாசிப்பதிலும், பிரசுரிக்கவே தகுதி யில்லாமல் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டியவை களையெல்லாம், அழுகிப்போன உணவுகளைக் கொண்ட தொட்டியின் மேல் மொய்க்கும் ஈக்களைப் போல் மொய்த்து, வாங்கி வாசிக்கிறீர்கள். அது உண்மை , தேவனே இரங்கும்! நமக்கு தேவையானதெல்லாம் ஆதி அன்புக்குத் திரும்புவதே! பெந்தெ கொஸ்தேயின் அனுபவத்திற்கு திரும்புவதே! ஓ, இதைப் பற்றி நான் பேசாமல் நீங்கிச் செல்வது நலமாயிருக்கும். சரி, இப்பொழுது ஆதி அன்பை விட்டு விட்டதைக் குறித்து புரிந்து கொண்டீர்களா? 71இப்பொழுது 4ம் 5ம் வசனங்கள், 5ம் வசனத்தில் ஒரு எச்சரிக்கை; “நினைத்து, மனந்திரும்பு.'' ? ”ஆகையால் நீ இன்ன நிலையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து (எங்கிருந்து நீ விழுந்து விட்டாய்? பெந்தெகொஸ்தே அனுபவத்திலிருந்து, தற்போது நீ இருக்கும் பின்மாற்ற நிலைக்குள் விழுந்து விட்டாய்) மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக: (பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு திரும்பிப்போ): இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத்தண்டை (அது யாரென்று நீங்கள் கண்டு கொண் டீர்கள் இல்லையா?) அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்,“ இதையே இன்னொரு விதமாகச் சொல்வோமானால், உங்களுக்கு தேவனால் நிரம்பின, பரிசுத்த ஆவியினால் நிரம்பின போதகர் இருப்பாரெனில் அவரை உங்களுடைய விரல் நுனியில் கட்டுபடுத்தி வைக்க நீங்கள் எண்ணி நல்லது. அவர்கள் நமக்கு அங்கியணிந்த பாடகர் குழு இருப்பதைப் பற்றியோ, நாம் போட்டுக் கொள்ளும் அழகுபடுத்தும் சாதனங்களைப் பற்றியோ பிரசங்கித்தால், நாம் அவரை சபையை விட்டு வெளியே தள்ளி விடுவோம்'' என்று சொல்லுவீர்கள். நீங்கள் கவலையேபட வேண்டாம். நீங்கள் அதைச் செய்வதற்கு முன்னால் தேவனே அதைச் செய்து விடுவார். அப்போதகர் அவ்விதமான வேத விரோத காரியத்தோடு ஒத்துப் போவதற்குப் பதிலாக வெளியே புறப்பட்டுப் போய், கல்லுகளுக்கு பிரசங்கிப்பார். சத்தியத்தை உண்மையாகவே உரைக்கும் ஒரு போதகர் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தேவனை கனம் பண்ணி, ஆவியில் நிலைத்திருந்து, தேவனை தொழுது கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நீங்கள் இழந்து போகப்படுவீர்கள் என்பதையும் உணரவேண்டும். 72ஆனால் மக்களோ, இன்றைக்கு, “இவ்வுலகில் வாழ்ந்து விடு, அதற்குப் பிறகு ஒன்றுமேயில்லை' என்பது போல் ஜீவிக் கிறார்கள். ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு என்றும், அது இங்கிருந்து கிளம்பி எங்கோ செல்லுகிறது என்பதையும் நீங்கள் உணருகிறதில்லை. நீங்கள் அழுக்காறு கொண்டு, அற்பமாகவும் மற்றும் இன்னும் வேறு சில காரியங்களையும் செய்கிறீர்கள். நீங்கள் வாழும் விதத்திலும், நீங்கள் செய்யும் செய்கையினாலும், உங்களுடைய போக்கிடத்தை இங்கேயே நீங்கள் முத்திரையிட்டுக் கொண்டு விடுகிறீர்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டும் ஆலயத்திற்கும் ஓடிப்போகிறீர்கள். ஓ! உங்களுக்கு இரக்கம் கிடைக்கட்டும், வ்யூ! உங்களுக்கு வெட்கக்கேடு! கிறிஸ்துவுக்குரிய மேலான நோக்கத்தின் மேல் நீங்கள் நிந்தையைக் கொண்டு வருகிறீர்கள். அப்படித்தானே? நாம் அவ் வாறு செய்யவில்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள் கூட சபையை இழிவுபடுத்தவில்லை. அவர்களல்ல. விபச்சாரி சபையை பாழ்படுத்தவில்லை. கிறிஸ்தவர்கள் என அறிக்கை செய்து வரும் மக்கள் தான் சபையை பாழ்படுத்துகிறார்கள். ஒரு கள்ளச் சாராயம் காய்ச்சுபவன் யார், ஒரு விபச்சாரியானவள் யார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நம்முடைய சகோதரிகளே விபச்சாரிகளைப் போல் ஆடையாபரணம் தரித்தால், அது மாறு பாடானது. அதுவே சபையை பாழ்படுத்துகிறது. சகோதரனொருவன் சாராயம் விற்கிறவனைப் போல் குடித்துக் கொண்டிருந்தால், அதுவே சபையை பாழ்படுத்துகிறது. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். மக்கள் உங்களை அந்த நாமத்தைக் கொண்டே கவனித்துப் பார்க்கிறார்கள். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக் கடவன்'' அதைவிட்டு விலகுங்கள். சகோதரரே, நாம் மிகவும் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். நான், நீங்கள் நாமெல்லோருமே எந்த அளவு இருக்க வேண்டு மென்று கிறிஸ்து விரும்புகிறாரோ, அதைவிடக் குறைவாகவே நாம் இருக்கிறோம். இந்நாளில், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிற இப் பந்தய ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டிய வேளையா யிருக்கிறது. பிரசங்கிகளாகிய சகோதரரே, அது உண்மை , அது முற்றிலும் உண்மை . 73“நினைத்து, மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் வந்து, நட்சத்திரத்தின் ஒளியை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்''. அதனிடத்தினின்று என்றால் என்ன? சபையில் அது இருக்கும் இடத்தினின்று என்பதாகும். ”நீ மனந்திரும்பி, ஆதியில் நீ இருந்து வந்த ஸ்தானத்திற்குத் திரும்பி போகாவிடில், நான் உன் போதகரை உன் மத்தியிலிருந்து அகற்றி, வேறு எங்கு என்னுடைய ஒளியை பிரதிபலித்து பிரகாசிக்கச் செய்ய முடியுமோ, அங்கு வைத்து விடுவேன்''. °! இது மிகவும் பயபக்திக்குரியதாக இல்லையா? சபைகள் மனந்திரும்ப வேண்டிய வேளையாயிருக்கிறது இது. பெந்தெகொஸ்தேயினரே! இவ்வேளையில், நாசூக்கான அந்த நவீன அறிஞர்கள் அநேகரை உங்களுடைய பிரசங்க பீடங்களை விட்டு அகற்றிவிட்டு, அவ்விடத்தில், பழமைப் பாணியிலான சத்தியத்தையே பிரசங்கிக்கும் பிரசங்கியை வைக்க வேண்டியதா யிருக்கிறது. ஒரு உணவு அனுமதிச் சீட்டுக்காகவும், மிகுந்த கூலிக் காகவும் மற்றும் அவ்வாறான காரியங்களுக்காகவும் வேண்டி, சபையை உபயோகப்படுத்தவும், உங்களை முதுகில் தட்டிக் கொடுத்து, நயங்காட்டிடும் போதகர்கள் உங்களுக்கு வேண்டாம். மனோதத்துவத்தை பிரசங்கிப்பதும், சில குதிரை பந்தயங்களை நடத்துவதும், சபையில் மாலைநேர சமுதாய விருந்துகளை ஏற்பாடு செய்வதுமான போதகர்கள் வேண்டாம். சுவிசேஷத்திற்குத் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்துவிட்டது. நீங்கள் எவ் வளவு சிறு கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை. “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்கள் என் நாமத்தில் கூடியிருக் கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்'' என்கிறார். “மனந்திரும்பாவிட்டால், நான் வந்து விளக்குத்தண்டை அதனிடத்தினின்று அகற்றிவிட்டு, அவனை வேறு எங்காவது பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி அனுப்பி விடுவேன்.' 746ம் வசனம். இங்கேயுள்ள இந்த நபரோடு தான் நமக்கு தொல்லை உள்ளது. மனந்திரும்பாவிட்டால், அவர் வந்து போதகரை அவர்களைவிட்டு அகற்றிவிடுவார். “இது உன்னிடத்திலுண்டு” இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். இதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். இப்பொழுது நாம் பார்க்கப் போகிற விஷயம், நாம் இப்பொழுது வாழ்கிற இந்தக் காலம் வரைக்கிலும் உள்ள ஏனைய காலங்களை இணைக்கிறது. யாவரும் உற்சாகமாக இருக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி). நீங்கள் அவசரமாக போக வேண்டுமா? (சபையார் “இல்லை'' என்று கூறுகிறார்கள் - ஆசி). சரி, அப்படியானால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். (சபையிலிருந்து ஒரு சகோதரர், இரவு முழுவதும் தங்கித்தரிக்கலாம்” என்கிறார் - ஆசி). இப்பொழுது, உங்களுக்கு நன்றி. இது உன்னிடத்திலுண்டு.... (அப்படியானால் அவர்களிடம் ஏதோ ஒன்றிருந்தது, இல்லையா? அவர்களிடம் என்ன இருந்தது?).... நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். வெளி.2:6 75“நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்”. நான் இன்று இதைக் குறித்து படித்துக் கொண்டிருக்கையில், இரண்டு பக்கங்களுக்கு ஒரு குறிப்பை எழுதி வைத்தேன், அதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். 6ம் வசனத்தில் புகழ்ச்சி இருக்கிறது. ஒரு விஷயத்தில் தேவனும் சபையும் கருத்தொருமித்து இருக்கிறார்கள். எபேசு சபைக் காலத்தில் இருந்து வந்த உண்மையான சபையாகிய அந்த மெய் யான திராட்சைச் செடி, தேவன் வெறுத்த நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை தானும் வெறுத்தது''. ஒவ்வொரு சபைக்காலத்திலும் சபையில், ஆவிக்குரியவர் களும், வெறும் சடங்காச்சார ரீதியிலானவர்களும் இருந்தே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுப்புதலின் போதும் இவ்வாறான இரட்டையர்கள் ஒவ்வொரு சபையிலும் பிறந்து ஜீவித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த சபையின் காலத்திலேயே ஆரம்பித்து, இந்த சபையின் காலத்தில் முடிவடைகிறார்கள். இறுதியாக தீயத்தீரா சபையின் காலத்தில், மாம்சத்துக்குரியவர்கள் தங்கள் கையில் சபையை எடுத்துக் கொண்டார்கள். லூத்தர் தன் காலத்தில் அதை வெளியே மீண்டும் இழுத்துப் போட்டார். இப்பொழுது சடங்காச்சார மார்க்கமானது மீண்டும் வந்துவிட்டதை உங்களால் பார்க்க முடிகிறதா? அதற்கும் கத்தோலிக்க கொள்கைக்கும் வேறுபாடு ஏதுமில்லை. எல்லாம் ஒன்றேதான். ஒவ்வொரு ஸ்தாபனமும் அதற்குள்ளாகத் தான் அடித்துப் போடப்பட்டுள்ளது. தேவன் ஒருபோதும் தன் சபையை ஒரு மதஸ்தாபனமாக ஆக்கவில்லை. ஆனால் அதைத் தான் அவர்கள் இங்கே செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். அது அவ்வா றில்லையா என்பதை கவனியுங்கள். எவ்வாறு ஒரு மத ஸ்தாபன மானது சபிக்கப்பட்டது என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன். புதிய ஏற்பாட்டு உண்மையான சபைக்கும், ஸ்தாபனத்திற்கும் சம்மந்தமே இல்லை பாருங்கள்? “நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு” 76மெய்யான திராட்சைக் கொடி, நிக்கொலாய் மதஸ்தரின் சம்பிரதாய கிரியைகளை தேவன் வெறுக்கிறது போல தானும் வெறுத்தது. எபேசு சபையின் காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாக இருந்தவை. பெர்கமு சபையின் காலத்தில் உபதே சமாக மாறியது. எபேசுவாகிய முதலாம் சபையில், அது ஒரு கிரியையாக இருந்தது. பின்பு அடுத்து வந்த சபைக் காலத்தில் அது ஒரு போதகமாக மாறியது. நீங்கள் இதை அறிந்து கொள் கிறீர்களா? இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருக் கிறீர்களா? எபேசுவில் கிரியையாக இருந்தது, பெர்கமுவில் ஒரு போதகமாக மாறியது. முதலில் அது சிறு குழந்தை வடிவில் ஆரம்பித்தது. இன்னும் சில நிமிடத்தில் அது என்ன என்பதைப் பார்ப்போம். பவுல் அதை 'ஓநாய்கள்'' என்று குறிப்பிடுகிறார். “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்''. மேற்கொண்டு நாம் செய்தியைக் கேட்பதற்கு முன்னால், நிக்கொலாய் என்ற வார்த்தையை பதம் பிரித்து பார்ப்போமாக. நிக்கொலாய் என்ற வார்த்தை எனக்கு அந்நியமான ஒன்றாகும். என்னால் பார்க்க இயன்ற அளவுக்கு அநேக கிரேக்க மொழி அகராதிகளைப் பார்த்துவிட்டேன். நிக்கொலாய்டேன்ஸ் (ஆங்கில வேதாகமத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில் நிக்கொலாய் என்று மொழி பெயர்த்துப் போட்டுள்ளார்கள் - மொழிபெயர்ப்பாளர்) என்ற வார்த்தை யானது நிக்கோ (Nicko) என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. 'நிக்கோ' என்றால் 'ஜெயங்கொள்ளுதல்' அல்லது 'தூக்கியெறிதல்' என்று பொருள். 'நிக்கொலாய்டேன்ஸ் (Nicolaitanes) என்றால், 'லெய்டி'யை (லெய்டி என்றால் மக்கள் அல்லது சபை என்று அர்த்தம் - மொழி பெயர்ப்பாளர்) வென்று, 'தூக்கி யெறிதல்' என்று அர்த்தமாகும். ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே தேவ ஆவியானவர் வரங்களினால் அசைவாடி, அதற்கு தேவனே மேய்ப்பர்களை தந்து நடத்தி வந்தார். அதை மாற்றி, அதற்குப் பதிலாக, சபையை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, சில பாதிரிமார்கள், பிஷப்புகள், போப்புகள் இவர்களை சபை பெற்றிருக்கும்படியாக உபதேசத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு காரியத்தைத்தான் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். தேவன் இதை வெறுப்பதாகக் கூறுகிறார். இன்றைக்கும் அதை அவர் வெறுக்கிறார். ''நிக்கொலாய்டேன்ஸ்'' என்றால் ''லெய்டியை வென்று கீழ்ப்படுத்தல்'' என்று பொருள். லெய்டி என்றால் சபை என்று பொருள். லெய்டி என்றால் சபை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ''சபையை வென்று அதைக் கீழ்ப்படுத்தி அதின் இடத்தை எடுத்துக் கொள்ளுதல்'' என்பதுதான் இதன் அர்த்தம். 77இதையே இன்னொரு விதமாகச் சொல்வதென்றால், சபை யிலிருந்து எல்லா பரிசுத்தத்தையும் அகற்றி, அதிலிருந்து எல்லா வல்லமையையும் அகற்றிவிட்டு, பாதிரிமார்களுக்கு அதிகாரம் கொடுத்து ''சபையானது தான் விரும்புகிறபடி வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பாதிரிமார்களே பரிசுத்தமானவர்கள்'' என்று அறிவித்து விட்டார்கள். ஜனங்களை விட்டு பரிசுத்த ஆவியையும், அதோடு தொடரும் அற்புத அடையாளங்களையும் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்த குருத்துவ ஆளுகை முறையை ஏற்படுத்தினார்கள். குருத்துவ ஆளுகை முறையை பரிசுத்த ஆவிக்கு மாற்றாகக் கொண்டு வந்தார்கள். அது என்ன என்பதை பார்த்தீர்களா? முதலாம் சபையின் காலத்தில் அது கிரியைகளாக இருந்து, பின்பு மூன்றாம் சபையின் காலத்தில் அது போதகமாக மாறியது. தியத்தீரா சபையின் காலத்தில் அது முழுவதும் மேற்கொண்டு விட்டது. லூத்தர் அதை விட்டு வெளியேறிய பொழுது, இவ்வுபதேசம் சிறிது காலம் தான் வலுவிழந் திருந்தது. கொஞ்சக் காலத்திற்குப் பிறகு அது மீண்டும் வலுப் பெற்று திரும்பவும் போய் அது தன் ஸ்தானத்தை வென்று எடுத்துக் கொண்டது. பிஷப்புகளும், கார்டினல்களும், ஆர்ச் பிஷப்புகளும் தலைமை ஸ்தானங்களை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தேவனுடைய சபைக்கு தேவனைத் தவிர வேறு எவர் தலைவராக இருக்க முடியும்? ஆமென்! வ்யூ! நான் இப்பொழுது பக்திப் பரவசமடைகிறேன்! சபையை ஆளுகை செய்ய பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். பிரசங்கியாரை மட்டுமல்ல, முழுச் சபையையும் ஆளுகிறவர் அவரே. பிரசங்கியார் மட்டும் பரிசுத்தமாயல்ல, சபை முழுவதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறது. 78தேவ ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு அப்பத்துண்டை அல்லது பிஸ்கோத்தை, சிறிது திராட்சைரசத்தோடு எடுத்துக் கொண்டு அதை, ''பரிசுத்த யுக்காரிஸ்ட்' என்றழைக்கிறார்கள். அதற்கு பரிசுத்த ஆவி' என்று பொருள். சிறிது திராட்சைரசமும், ஒரு பிஸ்கோத்தும் எவ்வாறு ஒரு ஆவியாக இருக்க முடியும்? அப்படித்தான் இருக்கும் என்றால், அப்பொழுது நீங்கள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை இவ்வாறுதான் படிக்க வேண்டும்; “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அங்கே ஒரு ரோமன் சாமியார் வந்து, சபையினரின் நாக்கில் ஒரு வட்டவடிவ அப்பத்துண்டை வைத்து, ”இதைப் புசியுங்கள்'' என்று கூறிவிட்டு, சாமியார் தானே அந்த இரசத்தை பருகி, 'இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு விட்டீர்கள்'' என்று கூறினார். அது மிகவும் பயங்கரமானதாக நமக்கு காணப்படுகிறது. அது அப்படித்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம். ''நான் ஒரு பாப்டிஸ்ட் சபையில் குருப்பட்டம் பெற்றேன். நாம் பாப்டிஸ்டுகளை தெரிந்து கொள் வோம்'' என்கின்றனர். மெதோடிஸ்டுகள் என்ன கூறுகிறார்கள்? “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசு வாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்'' என்கிறார்கள். பிசாசு கூட இயேசு தேவனுடைய குமாரன் என விசுவாசித்து, நடுங்குகின்றன. சபை அங்கத்தினர்களைவிடக் கூடுதலாக அவன் விசுவாசிக்கிறான். பிசாசும் அதையே விசுவாசித்து, நடுங்குகிறான். ஏனெனில் தான் நாசமடையப் போகிறதை அவன் அறிவான். 79இப்பொழுது மெதோடிஸ்டுகளின் வழியைப் பார்ப்போம். “யோவான் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, தெளித் தலையே செய்தான்'' என்று கூறுகிறார்கள். மேலும், 'அந்நாட்டில் நிலத்தில் வளைகளைத் தோண்டி வாழும் ஒரு வகை ஆமைகள் ஏராளம் உண்டு. அவ்வளைகளில் தண்ணீர் வந்துவிடும் போது, ஆமையின் சதையை சுரண்டி எடுத்துவிட்டு, அவ்வோட்டை எடுத்து விட்டு, அவ்வோட்டை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் தண்ணீர் நிரப்பி யோவான் ஜனங்களுக்கு ஞானஸ்நானத்தை தெளித்தல் முறையில் கொடுத்தான்'' என்று மெதோடிஸ்டுகள் பிரசங்கிக்கக் கூட செய்கிறார்கள். அது அபத்தமானது, ஓ சகோதரனே! நல்லது, இப்பொழுது இவ்வாறாக இதைப் பற்றிச் சொல்லுவோம். “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் கூடிவந்திருந் தார்கள். அப்பொழுது போதகர் அங்கே வந்து ஒரு அருமையான பிரசங்கத்தை நிகழ்த்தி விட்டு, 'எனக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுங்கள். உங்கள் பெயர்களை புத்தகத்தில் எழுதி விடுவோம்'' என்று கூறினார். அது சரியாக தொனிக்கிறதா? வசனம் அவ்வாறா இருக்கிறது? ஒரு பஞ்சாங்கம் கூட இப்படியான ஒரு காரியத்தைக் கொண்டிருக்காது, அது கூட இவர்கள் சொல்வதை விட சரியாக இருந்துவிடும். வயோதிப பெண் மணிகளின் பிறந்த நாள் பஞ்சாங்கம் கூட இதை விட சரியான தாயிருக்கும். இப்படியாக இவர்கள் நடந்து கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது? இந்த நிக்கொலாய் மதத்தினர், வேத வாக் கியங்களைப் புரட்டவும், ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கவும், அதினால் தேவன் அங்கே அசைவாட முடியாதபடி செய்யவும், அதற்காக ஒரு கூட்டம் மனிதர்களை உள்ளே கொண்டு வந்தனர். அங்கேயே அது மரித்துவிட்டது! அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து, 'உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் நீ மரித்தவனாயிருக்கிறாய்'' என்று கூறினார். அவர்களில் அநேகர் மரித்தவர்களாயிருக்கின்றனர். ஆயினும் அதை அவர்கள் அறியவில்லை. 80நானும் எனது சகோதரனும் சிறுவர்களாயிருக்கையில், ஒரு சமயம், மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் அப்பொழுது தூண்டிலில் ஒரு வயதான பெரிய ஆமையைப் பிடித்தேன். இந்த வகை ஆமை மிகுந்த வலுவுடன் தூண்டிலை இழுக்கக் கூடியது. எனவே அது என்னை ஏமாற்றிவிடாதபடி இருக்க, உடனே நான் தூண்டிமுள்ளைக் கவ்விய அதன் தலையைக் கிள்ளி ஆற்றுக் கரையில் எறிந்துவிட்டேன். என்னுடைய தம்பி அங்கே வந்து, “சற்று முன்னர் நீ எதைப் பிடித்தாய்?'' என்று கேட்டான். நான், “ஒரு ஆமை'' என்று கூறினேன். “அதை என்ன செய்தாய்? என்று கேட்டான். “அதை நான் அங்கே போட்டு விட்டேன். அதோ அதன் தலை அங்கே கிடக்கிறது'' என்று கூறினேன். அவன் அதனிடமாகப் போய், “அது செத்துவிட்டதா?” என்று கேட்டான். “நிச்சயமாக! அதன் தலையை அதன் சரீரத்திலிருந்து வெட்டி எறிந்து விட்டேன், அது மரித்துதான் இருக்க வேண்டும்'' என்று நான் பதிலளித்தேன். எனவே, அப்பொழுது அவன் ஒரு குச்சியை எடுத்து, அந்த ஆமைத்தலையை மீண்டும் நதியில் போட்டுவிட எத்தனித்து, குச்சியை அதனருகில் கொண்டு சென்றான். அவ்வாறு அவன் செய்த பொழுது, அந்த ஆமை அக்குச்சியை கவ்வியது. இவ்வகை ஆமையானது, அதன் சரீரத்தினின்று தலையைப் பிய்த்து எறிந்து விட்டாலும், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அது உயிரோடிருக்கும். என் தம்பி, செத்துப் போனதாக எண்ணப் பட்ட ஆமைத்தலையானது அக்குச்சியைக் கவ்வியதைக் கண்டதும், துள்ளிக்குதித்து, “ஹேய், இதென்ன அது செத்துவிட்டது என்று சொன்னாயே” என்று கத்தினான். “அது மரித்தே விட்டது'' என்று நான் கூறினேன். ''நல்லது, ஆமைக்கு தான் மரித்து விட்டது தெரிய வில்லையா'' என்று பதிலளித்தான். 81அவ்விதமாகத்தான் அநேகர், தாங்கள் மரித்தவர்களாயிருந் தாலும் அதை அறிய மாட்டாதவர்களாயிருக்கிறார்கள். நிக்கொலாய் மதஸ்தர் இவர்கள். ஓ, என்னே ! ஓ, “நீயும் அதை வெறுக்கிறாய்'' என்று அவர் கூறுகிறார். ”எல்லாவற்றையும் எடுத்து விட்டு, பரிசுத்த குருக்கள், பரிசுத்த கார்டினல்கள், பரிசுத்த பிஷப்புகள் என்று அழைத்துக் கொள்பவர்களை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். பெந்தெகொஸ்தேயினரே, உங்களில் சிலர், ''தலைமை கண்காணிப்பாளர் வந்து, நீங்கள் சுகமளிக்கும் ஆராதனையை இங்கே நடத்தலாமா வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவார்'' என்கிறீர்கள். தேவனுடைய நித்திய வார்த்தை யாகிய பரிசுத்த ஆவியானவர்கள்தான், நீங்கள் இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும், வேறு யாருமல்ல. அல்லேலூயா! ''நல்லது, சகோ. பிரன்ஹாம் அவர்களே, 'இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள்' என்று வேதம் போதிக் கிறது என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் எங்களுடைய சபையின் பொதுக் கண்காணிப்பாளர் அவர்கள், எங்களுடைய சபையில் இதை நாங்கள் செய்ய ஆரம்பித்தால், எங்களை வெளியே தள்ளிவிடுவதாகக் கூறியிருக்கிறாரே'' என்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். தேவனுடைய நகரத்தினின்று நான் உதைத்து தள்ளப்படுவதைப் பார்க்கிலும், இங்கே இவர்களால் உதைத்து வெளியே தள்ளப்படுவதையே நான் விரும்புவேன். இங்கே, வேதத்திலிருந்து நீங்கள் எதையாகிலும் எடுத்துப் போட்டால், அங்கே, தேவனுடைய நகரத்தில் நீங்கள் உள்ளே நுழையாதபடி உதைத்துத் தள்ளப்படுவீர்கள். எனவே அங்கே யிருந்து உதைத்து வெளியே தள்ளாதபடிக்கு, இங்கே உதைத்து வெளியே தள்ளப்படுங்களேன். இங்கே இவர்கள் உங்களை உதைத்து வெளியே தள்ளினால், அங்கே உள்ளே தள்ளப்படுவீர்கள். அதுதான் நடக்கும், எனவே வார்த்தையோடு நிலைத்திருங்கள். 82நாம் சரியாகவே இருக்க விரும்புகிறோம். ஓ என்னே , சகோதரனே, அது ஒரு மிகவும் முக்கியமான காரியமாகும். நாம் இந்த காரியத்தை சரி பண்ணிக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். தேவன் தன் சபையை கட்ட ஒரு உறுதியான அஸ்திபாரம் அவருக்கு கிடைக்க வேண்டும். அது இல்லாதவரையில் நமக்கு ஒரு சபை இருக்காது. ஒரு சில அபத்தங்களை அஸ்திபாரமாகக் கொண்டு, தேவன் ஒருபோதும் தன் சபையை கட்டமாட்டார். அவர் தன்னுடைய வார்த்தையின் பேரில்தான் வரவேண்டும். அல்லாவிடில், அவர் வரவே மாட்டார். சரியானபடி அவர் தன் வார்த்தையில் தான் இருக்கிறார். சமீபத்தில் சிலர், 'சகோ.பிரன்ஹாமே, நீங்கள் சாடாகு வாவுக்கு வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்திருந்தனர். சாடாகு வாவுக்கு எத்தனை பேர்கள் வந்திருந்தீர்கள்? ஏன், இங்கு பாருங்கள், சபையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலானவர்கள் சாடாகு வாவுக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது, அந்த பிற்பகலில் அந்த மனிதன் எழும்பி நின்று, அவன் பேசுவது எனக்குத் தெரிய வரும் என்று அறியாமல் பேசினான். நீங்களும் அதைக் கேட்டீர்கள். அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எனக்கு என்னுடைய அறையில் தேவன் வெளிப்படுத்த முடியும். அவர் அவ்வாறே செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அம்மனிதன் அங்கே எழும்பி நின்று, ''சகோ.பிரன்ஹாம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர். ஆவியானவர் அவர்மேல் இருக்கையில், அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார். என்ன நடக்கிறது என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும், தேவன் அவருக்கு சொல்லுகிறபடியினால் அவர் நிச்சயமாக அதைப்பற்றி அறிந்திருக்கிறார். ஆனால் அவருடைய வேத சம்மந்தமான போதகமோவென்றால், அதற்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டாம்'' என்று கூறினார். 83என்னே இது ஒரு குழப்பமான கருத்து! ஒரு மனிதன் எவ்வாறு அதை சொல்ல முடியும்? உடைக்கப்பட்ட 'பீன்ஸ்களுக்கும் காப்பிக் கொட்டைக்கும் உங்களுக்கு வித்தியாசனம் தெரியாமல் போனால்; இதைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டதொரு காரியத்தை எவ்வாறு உங்களால் எண்ண முடிகிறது? தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு, “வார்த்தையின் தெய்வீக வெளிப்படுத்துதலைக் கூறுவோன்'' என்று பொருள். தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தையானது வருகிறது. நானும் ஒரு போதும் என்னை அவ்வாறு அழைத்துக் கொள்ளவில்லை. அவர்களே அவ்வாறு என்னை தீர்க்கதரிசி என்று அழைத்தனர். ஆனால் அவர்களோ அவர் களுடைய கூற்றுக்கே முரண்படுகிறார்கள். பாருங்கள்? எவ்வாறு ஒரு மனிதன்... அவர்களுடைய ஸ்தாபனமானது இதை ஒத்துக் கொள்ளாதபடியினால், ஒரு சிறு சபை போதகத்தை அவர்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதினால் பரிதாபமான மாய்மாலக்காரனே! ஏசாவைப் போல், உன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை ஒரு பானை கூழுக்காக விற்றுப் போடு கிறாய். அது உண்மை . ஒரு பானை கூழுக்காக. தேவன் வெறுக்கிற மதஸ்தாபனத்திற்காக, உங்களுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போடுகிறீர்களே! நீங்கள் “ஸ்தாபனம்'' என்று அழைப் பதை தேவன் வெறுக்கிறார். அக்காரியமே, சகோதரர்களை பிரிவினைக்குள்ளாக்கியது. இன்றிரவில், தேவனுடைய பந்தியில் ஐக்கியங்கொள்ள வாஞ்சிக்கும் அநேக மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், ப்ரெஸ்பிடேரியன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்தால், அதைச் செய்ய ஆரம்பிக்கும் முதல் தடவையிலேயே அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். 'அம்மா அதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்'' என்று கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் முதற்கண் பேரப்பிள்ளை களாக ஆகிவிடுகின்றனர். அம்மா எதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்கள் தன் நாளில் உண்டாயிருந்த ஒளி முழுவதிலும் நிலைத்திருந்து ஜீவித்தார்கள், நீங்களோ வேறொரு நாளில் ஜீவிக்கிறீர்கள். 84முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானமானது ஒரு பந்தை பூமியைச் சுற்றி சுழலவிட்டு, ஒரு வாகனம் 30 மைல்களுக்கு மேல் உள்ள பயங்கர வேகத்தில் ஓடுமானால் அப் பொழுது, அது புவியின் ஈர்ப்பு சக்தியை விட்டு விடுபட்டு, விண் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்'', என்றுரைத்தது. இன்று விஞ்ஞானம் அக்கூற்றை நம்புகிறது என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது விண்வெளியில் மணிக்கு 1900 மைல்கள் வேகத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் என்ன சொன்னோம் என்று அவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கிறதில்லை. எதிர்வரும் காலத் தில் என்னத்தை தாங்கள் காண முடியும் என்று முன்னோக்கிப் பார்ப்பதற்காக பின்னால் திரும்பி பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் சபையோ, எப்பொழுதும் பின்னால் பார்த்து, வெஸ்லி என்ன கூறினார் என்பதையும், மூடி என்ன கூறினார் என்பதையும், சாங்கி என்ன கூறினார் என்பதையும் காண விரும்பு கிறார்கள். “விசுவாசிக்கிறவனுக்கு யாவும் கைகூடும்'' முன் னோக்கிப் பாருங்கள். வேதத்தில் கூறப்படும் பின்னால் திரும்பிப் பார்க்கும் தன்மை கொண்ட ஒரே ஜந்து எது? எந்த ஜந்து எப் பொழுதும் பின்னால் திரும்பிப் பார்க்கும் தன்மை கொண்டது என்ற உங்களுக்குத் தெரியுமா? மிகவும் கீழான ஒரு ஜந்து அது. ஊர்வனவற்றில் மிகவும் கீழான தன்மை கொண்ட அந்த ஜந்து எது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தவளைதான் அது. தவளை தான் மிகவும் கீழ்த்தரமான ஜந்து. மனிதன் தான் மேன்மையான ஜீவன். தவளை பின்னால் திரும்பிப் பார்க்கிறது. நான் அந்த கீழ்த்தரமான ஜந்துவை விரும்பவில்லை. நான் முன்னோக்கிப் பார்த்து, விசுவாசித்துக் கொண்டு, அவர் ஒளியிலிருக்கிறது போல, நானும் ஒளியில் நடந்துகொண்டு, அவர் காண்பிக்கும் ஒளியில் நடந்து வாழவே விரும்புகிறேன். ஆமென். ஒரு தடவை கென்டக்கியில் நான் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கையில், வயது முதிர்ந்த ஒரு மனிதன் அங்கே வந்தார். அவர் ''நான் அந்த சுகமளித்தலை விசுவாசிக்கவில்லை'' என்று கூறினார். “நல்லது, அது சரி, நீங்கள் ஒரு அமெரிக்கர்'' என்றேன் நான். “நான் எதையும் காணாமல் விசுவாசிக்க மாட்டேன்'' என்று கூறினார். “அதெல்லாம் சரிதான்'' என்றேன் நான். அதற்கு அவர், “உங்களுக்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் கூறுவதை நான் விசுவாசிக்கவில்லை'' என்று கூறினார். “நீங்கள் அமெரிக்கர் என்பதனால் உமக்கு உண்டாயிருக்கும் சிலாக்கியம் அது. நீங்கள் விரும்பாவிடில் விசுவாசிக்கத் தேவை யில்லை'' என்று பதிலளித்தேன். “தெளிவாக ஒன்றை என் கண்களினால் காணாமல் நான் ஒருபோதும் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை'' என்று கூறினார். “நல்லது, அது நன்றாக இருக்கிறது, நீங்கள் மிஸ்ஸௌரியி லிருந்து வந்தவராக இருக்க வேண்டும்'' என்றேன் நான். அவர், “இல்லை, நான் கென்டக்கிக்காரன்'' என்றார். ''உங்கள் பேச்சு கெண்டக்கியின் பேச்சு போல் தொனிக்க வில்லையே, எனினும் நீங்கள் அவ்வாறு கருதினால், அப்படியே செய்யுங்கள். நீங்கள் எப்படி வீட்டுக்குப் போகப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.) 85“நான் அந்த மலைக்கு அப்பால் போகப் போகிறேன், அங்கே தான் வாழ்கிறேன். நல்லது, என்னுடன் என் வீட்டிற்கு வாருங்கள், இரவில் என்னுடன் தங்குங்கள் சகோ.பிரன்ஹாம் அவர்களே'' என்று அந்த அருமையான மனிதர் கூறினார். “எனக்கும் விருப்பம் தான் சகோதரரே, ஆனால் நான் என்னுடைய மாமா வீட்டிற்கு இந்தப் பக்கம் போகப் போகிறேன், என்னுடைய வாகனத்தில் வருகிறீர்களா?'' என்று நான் கேட்டேன். “இல்லை, நான் இந்த மலைக்கப்பால் இந்தப் பக்கம் செல்ல வேண்டும், அங்கே ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து மறுபடியும் மலையேறி, செல்ல வேண்டும்'' என்றார் அவர். 'நல்லது, எவ்வாறு அந்த இடத்திற்கு போகப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''அங்கே பாதை உண்டு, அதிலே நான் நடந்து செல்லவேண்டும்'' என்றார். “ஏன், இவ்விரவில், உங்களுக்கு முன்னால் உங்கள் பாதையைக்கூட பார்க்க முடியாதே, எப்படி அங்கே போகப் போகிறீர்கள்?'' என்று நான் கேட்டேன். “என்னிடத்தில் ஒரு கைவிளக்கு உண்டு' என்றார் அவர். நான் சரி அவ்விளக்கைக் கொளுத்தி அதை கொண்டு நடந்து செல்லப் போகிறீர்களா? என்ற கேட்டேன். 'ஆம் ஐயா'' என்றார் அவர். நான் அவரிடம், “நீங்கள் அவ்விளக்கை கொளுத்தி எரிய வைத்து, சற்று உயரத்தூக்கி இப்படிப் பிடிக்க முடியுமா? அவ்வொளியில் நான் உங்கள் வீட்டைக் காண விரும்புகிறேன்'' என்றேன். “உங்களால் அதைக் காணமுடியாது'' என்று பதிலளித்தார் அவர். 'அப்படியென்றால், எவ்வாறு நீங்கள் அங்கே செல்லப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன். 86அவர் கூறினார்; ''ஓ! நான் எனது கைவிளக்கை பற்ற வைப்பேன், நான் விளக்கின் ஒளியில் பாதையில் நடந்து செல்வேன்'' 'அப்படித்தான் அது உள்ளது. ஆமென், ஒளியில் நடவுங்கள்'' என்றேன். நடந்து கொண்டேயிருங்கள். நிலையாக நின்று விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் போய்ச் சேரமுடியாது. நீங்கள் இரட் சிக்கப்பட்டிருந்தால், பரிசுத்தமாகுதலை நோக்கி நடந்து செல் லுங்கள். ''எப்படி அங்கே போக வேண்டும்?'' என்று கேட்கிறீர்கள். நடந்து கொண்டேயிருங்கள். ''பரிசுத்தமாகு தலுக்குப் பிறகு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமா? அதை நான் எப்படிப் பெறுவேன்?'' ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். “அப்புறம், அடையாளங்களும், அற்புதங்கள், அதிசயங்களுமா?'' தொடர்ந்து ஒளியில் நடந்து கொண்டேயிருங்கள். பாருங்கள்? விடாமல் அதைச் செய்யுங்கள். நீங்கள் உங்கள் காலடியை முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு தடவையும், ஒளியானது உங்களுக்கு சற்று முன்னே வழிகாட்டிக் கொண்டே முன் செல்லும், ஏனெனில், அவர் எப்பொழுதும் உங்களுக்கு முன்னே போகிறார். அவர் உங்களை பின்னால் இருந்துகொண்டு தள்ளிவிடுவதில்லை. அவர் உங்களை வழி நடத்திச் செல்லுகிறார். அவரே ஒளியா யிருக்கிறார். அதைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சி யடையவில்லையா? அவரில் இருளேதும் இல்லை. 87“நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்'' அக்கிரியை போதகமாக மாறியது. இப்பொழுது பவுல் என்ன சொல்லுகிறான் என்று... இப்பொழுது, யாருடைய சபை... இந்த சபையை நிறுவியது யார்? பவுல், எபேசு சபையை. நாம் இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்த கத்தில் 20ம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம் போவோம். அங்கே பவுல் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம். பவுல் ஒரு தீர்க்கதரிசி என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவன் ஒரு தீர்க்கதரிசிதான். ஒரு இரவில், அந்த கொந்தளிக்கும் கடலில், பவுலுக்கு உண்டான தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 20 அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். நாம் இவ்வசனத்தை வாசிக்கையில் மிகவும் கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது, இங்கே, இந்த பவுல் தீர்க்கதரிசியானபடியால், வரப்போகும் காரியத்தை முன்னுரைக்கிறான். “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடி யினாலே.” ஆசீர்வதிக்கப்பட்ட அந்த மனிதன்! ஓ, அந்நாளில் நான் அங்கே நின்று, இரத்த சாட்சிகளுக்குரிய அந்த கிரீடமானது அவனது சிரசில் சூடப்படுவதை காண வேண்டுமென்று வாஞ்சிக் கிறேன். அங்கே அழுகை என்ற ஒன்று இருக்குமானால் நானும் அழுவேன். நான் அப்பொழுது பவுலைப் பார்த்து ஆர்ப்பரித்திடு வேன். பிரகாசமும், அழகுள்ளதுமான அங்கியணிந்து, மகத்தான அப்போஸ்தலனும், பரிசுத்தனுமாகிய பவுலைப் பாரீர், நாம் அங்கே செல்லுகையில், நிச்சயம் ஆர்ப்பரிப்பு உண்டென்று கருதுகிறேன். (நீங்கள் அப்படிச் செய்வீர்களா?) இப்பொழுது, “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை.'' 88அது சரியா? கிறிஸ்தவர்களே, இந்தப் பக்கம் பாருங்கள். நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அல்லாமல் வேறுவிதமாக ஞானஸ்நானம் பெற்ற வர்களை, மீண்டும் சரியானபடி ஞானஸ்நானம் பெறும்படி மக்களுக்கு கட்டளையிட்டது யார்? (சபையார், “பவுல்'' எனறு பதில் அளிக்கின்றனர் - ஆசி). அவன் தேவனுடைய முழு ஆலோசனையையும் பிரசங்கித்தான். அப்படித்தானே? 1தெச லோனிக்கேயர் 1ம் அதிகாரம் 8ம் வசனம் என்று எண்ணுகிறேன், எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, அங்கே பவுல் என்ன கூறுகிறான்? ”நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத் தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், வானத்திலிருந்து ஒரு தூதன் நாங்கள் பிரசங்கித்த தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்...'' “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் மீண்டும் எடுக்கும்படி மனிதருக்கு கட்டளையிடாமலும், பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தை அல்லாமல் வேறு சுவிசேஷத்தைப் பிரசங்கித் தாலும்) அது வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி'' (ஏன், அது ஒரு பிஷப்போ , கார்டினலோ, அல்லது ஒரு பொதுக் கண்காணிப்பாளரோ, அல்லது ஒரு போதகராயினும் சரி, அவர் எப்படிப்பட்டவராயினும் சரி, அக்கறையில்லை) வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது நாங்கள் பிரசங்கித்ததையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப் பட்டவனாயிருக்கக்கடவன்'' அது அப்படித்தான் இருக்கிறது. பவுல் கூறிய மேற்சொன்ன வசனம் கலாத்தியர் 1ம் அதிகாரம் 8ம் வசனத்தில் உள்ளது. இப்பொழுது அது என் நினைவுக்கு வருகிறது. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது கலாத்தியர் 1ம் அதிகாரம் 8ம் வசனமாகும். அங்கே பவுல் என்ன சொன்னான் என்பதைப் பாருங்கள். 89அப்போஸ்தலர் 20:27ல் பவுல் இவ்வாறு கூறினான். “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்கவில்லை” இப்பொழுது இவ்வசனத்தை கவனியுங்கள், இது ஒரு தீர்க்க தரிசனம். ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கை யாயிருங்கள். அப்.20:28 யார் சம்பாதித்தது? யாருடைய இரத்தம் அது? அது தேவனுடைய இரத்தம் என்று வேதம் கூறுகிறது. தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால். அது சரிதானே? “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு ” நாம் தேவனுடைய இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டிருக் கிறோம் என்று வேதம் கூறுகிறது. அதை நீங்கள் அறிந்துள்ளீர் களா? நிச்சயமாக அப்படித்தான். தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்டார். “நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, (வரப்போகிற காலத்திற்குள் உற்று நோக்கி, சம்பவிக்கப் போகிற காரியத்தை அம்மனிதன் பார்க்க முடிந்தது என்பதை கவனியுங்கள்) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” அப்.20:29-30 90(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) அநேக ஆண்டுகள் கழித்து, ஒரு கூட்டம் மனிதர்கள் எழும்பி, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விரும்பினார்கள். அவர்கள் பரிசுத்தமானதை அகற்றி, பரிசுத்த ஆவியை சபையைவிட்டு தள்ளிவிட்டு, பிஷப்புகள், போப்புகள், சாமியார்கள் இவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அறிவித்து, சபையார் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என அனுமதித் தார்கள். அவர்களை நரகத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டி, சபைக்குருவானவர் அவர்களுக்காக வேண்டுதல் செய்ய அதற் குரிய கட்டணமான, குருக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், இன்னும் பல அபத்தங்களை எல்லாம் உள்ளே கொண்டு வந்தார்கள். அதுவே நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், “நான் அதை வெறுக்கிறேன்'' என்று தேவன் உரைத்தார். இப்பொழுது கவனியுங்கள். “தேவன் அதை வெறுப்பதாகக் கூறினாரா? நானும் அதைப் பார்க்கட்டும்'' என்கிறீர்கள். இப்பொழுது அவர் அவ்வாறு சொன்னாரா இல்லையா என்று பார்ப்போம்: ''நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய். இது உன்னிடத்திலுண்டு.'' தேவன் ஒரு மதஸ்தாபனத்தை வெறுக்கிறார். சரியா? அவர்கள் அங்கே என்ன செய்யவிருந்தார்கள் என்றும், என்ன செய்து விட்டார்கள் என்பதையும் அப்படியே காணலாம். தொடர்ந்து வந்த ஒவ்வொரு சபைக்காலத்திலும் அவர்கள் அதையே செய்தார்களா இல்லையா என்பதை கவனியுங்கள். தேவன் ஒரு மதஸ்தாபனத்தை வெறுக்கிறார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். வெளி.2:7 91இப்பொழுது, பவுல், ஓநாய்கள் வரும் என்று எச்சரித்தான். அதுதான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாக ஆகியது. அவர்கள், பழைய ஏற்பாட்டிலுள்ள லேவிய முறைமையின் படியான குருத்துவ (ஆசாரியத்துவ) முறையை உண்டாக்க முயன்று கொண்டிருந்தார்கள். அம்முறையானது புதிய ஏற்பாட்டு உபதேசத்திற்கு முற்றிலும் அந்நிய காரியமானதாகும். ஆமென்! கிரேக்க மொழியில் ''நிக்கோ'' என்ற வார்த்தைக்கு, ''வென்று மேற்கொள்ளுதல்'' என்று பொருள். எதை மேற்கொள்ளுதல்? சபையை, பரிசுத்த ஆவியை மேற்கொள்ளுதல். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவையும், விசுவாசிகள் மத்தியில் உண்டா யிருக்கும் அற்புத அடையாளங்களையும் சபையை விட்டு அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக, ஒரு மனிதனை போப், அல்லது மாம்சீக கார்டினல், அல்லது ஒரு கண்காணி ஆகிய பதவிகளுக்கு, தங்கள் வாக்குகளினால் தேர்ந்தெடுத்து, அவர்களை சபையின் மேல், பரிசுத்த மனித ஒழுங்கு என்ற மனித ஒழுங்கின்படி, அதிகாரிகளாக வைத்து விட்டார்கள். அதனால் பரிசுத்த ஆவியை சபையைவிட்டு நீக்கி விட்டார்கள். அவர்களை அவர்கள் “மேய்ப்பர்கள்'' என்று அழைப்பதற்குப் பதிலாக, ”பிதாவே“ (Father ஃபாதர்). ஆனால் இயேசு, ”பூமியின் மேல் எந்த மனிதனையும் பிதா என்று அழைக்காதிருங்கள்'' என்று சொன்னார். அந்த தீமையான காரியத்தைப் பார்த்தீர்களா? நாம் என்ன செய்து விட்டோம்? 92ஓ, நாம் முடிக்க முடிந்தால், இவ்வாறு இந்த இரவுகளி லெல்லாம், நாம் எல்லாவற்றையும் ஒரேயடியாக சேர்த்து வைத்துப் பார்க்காமல் இருப்பது நலமென்று எண்ணுகிறேன். நாளை இரவு வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தை படித்து, அதிலுள்ள அந்த பழைய மகாவேசி உட்கார்ந்திருக்கிறதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். அவ்வாறு அவள் அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவள் தேவனுக்கெதிராக வேசித்தனம் செய்தாள், அவன் தன்னை விதவை என்று அழைத்துக் கொண்டாள். அவள் தானே வேசிகளுக்கெல்லாம் தாயானவள். அது சரிதானே? நாம் அது ரோமாபுரியை குறிக்கிறது என்று அறி வோம். வருந்தத்தக்க காரியம் என்னவெனில், அவள் வேசிகளுக் கெல்லாம் தாயானவள் என்பதுதான். இங்கே ரோமாபுரியில் அவள் ஆரம்பித்ததன் காரியம் இதுதான், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள். அப்படித்தான் துவங்கினார்கள். கவனியுங்கள்! இதை மெய்ப்படுத்த, தேவன் எனக்கு உதவி செய்யட்டும். கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்ட ஒரு கூட்டம் மக்கள் ஒரு சபையில் இருந்துகொண்டு, அவர்கள் சடங்காச்சாரன ரீதியில் மாறினார்கள். அவர்கள் மாறுபாடான வர்களாக ஆகி, தங்களுக்கென ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். இருண்ட காலத்தில், அவர்கள் சபையை அரசுடன் ஒன்றாக இணைத்துவிட்டனர். அரசும், சபையும் ஒன்றாக இணைந்த நிலையில் அது எவ்வாறு ஆகியது? கிறிஸ்தவ சபையாக இருக்க வேண்டியது, ''பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை' என்று அழைக்கப்பட்டது. (கத்தோலிக்கம் என்றால், “அகில உலக'' அல்லது சர்வவியாபகமான'' என்று பொருள்) ”மகத்தான அகில உலக கிறிஸ்தவ சபை' அந்நிய பாஷைகளில் பேசுபவர்களையும், ஆர்ப்பரிக்கிறவர்களையும், பிணியாளிகளை சொஸ்தமாக்குகிற வர்களையும், அவர்கள் 'பதிதர்கள்' (வேதப்புரட்டர்கள்) என்று அழைத்தனர். இறுதியாக, யாராவது அந்த முறையில் தேவனைத் தொழுது கொள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை பலாத்காரமாக மிரட்டி, கத்தோலிக்க மதத்தை தழுவிக் கொள்ள அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். அதற்கு இணங்க மறுத்தால் அவர்கள் சிங்கக்கெபியில் தூக்கியெறிப்பட்டனர். சபைக் குண்டான உபத்திரவ காலத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உபத்திரவம் தொடர்ந்தது. ஆனால் சபையோ மரிக்கவேயில்லை. அதை நீங்கள் கொல்ல முடியாது. அது இறுதி வரை ஜீவிக்கும், முடிவில் அதற்கு ஜீவக் கிரீடம் கொடுப்பதாக தேவன் கூறியுள்ளார். அது அந்த உபத்திரவங்களின் காலங்களின் வழியாக வந்தது. 93அதன்பிறகு மார்ட்டின் லூத்தர் வந்து சபையின் காலத்தை தொடரச் செய்து, நீதிமானாகுதல் என்பதன் கீழ் சபையைத் திருப்பினார். லூத்தர் இறந்த பிறகு என்ன நேரிட்டது? லூத்தரன் சபையை அவர்கள் ஸ்தாபிதம் செய்த பொழுது, என்ன செய் தார்கள்? தங்கள் பிறப்புரிமையை அல்லது சேஷ்ட புத்திர பாகத்தை ரோமானியக் கொள்கையிடம் மீண்டும் விட்டுக் கொடுத்தனர். அது முற்றிலும் உண்மை. அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அதைவிட்டு வெளி யேறினார், வெஸ்லி அதைக் கண்ணுற்றார். ஜார்ஜ் விட்ஃபீல்ட், ஆஸ்பரி மற்றும் இவர்களைப்போல் இன்னும் அநேகர் மகத்தான எழுப்புதல் பிரசங்கிகளாக இருந்தார்கள். அந்நாளில் இவர்கள் உலகம் இரட்சிப்படைய காரணமாயிருந்தார்கள். அந்த பிலதெல் பியா சபையின் காலத்தில் அவர்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிற்று. இங்கிலாந்தும் அமெரிக்காவும் இரட்சிப்பைக் கண்டடைய அவ்வெழுப்புதல் காரணமாயிற்று. அவர்கள் கூட்டங் களில், புறம்பே தள்ளப்பட்டு, ''உருளும் பரிசுத்தர்'' என்று அழைக்கப்பட்டனர். மெதோடிஸ்டுகளே, நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். அக்காலத்திய மெதோடிஸ்டுகள் மேல் தேவனுடைய வல்லமை இறங்கி, அவர்கள் தரையில் வீழ்ந்த போது, அவர்கள் மேல் தண்ணீர் தெளித்து, அவர்களுக்கு விசிறி விட்டிருக்கின்றனர். தேவனுடைய வல்லமையின் கீழ் அவர்கள் இருந்தபோது அவர்கள் மிகவும் துள்ளிக்குதித்தனர். அவர்களிடம் துள்ளிக்குதித்தல்கள் உண்டாயிருந்தன. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அசைக்கப்பட்ட பொழுது, அந்நாட்களில் அவர்கள் இவ்வாறு துள்ளி சாடியிருக்கின்றனர். இப்படியாக இருக்கிறது. மெ தோடிஸ்டுகளின் வரலாறு. அதிலிருந்து க்வேக்கர்ஸ் வந்தனர். 94ஆனால் இப்பொழுது அவர்கள் ஒரு மதஸ்தாபனமாக ஆகிவிட்டனர். அவர்கள் இந்த மெதோடிஸ்டு, ப்ரிமிடிவ் மெதோடிஸ்டு, அந்த மெதோடிஸ்டு, இந்த மெதோடிஸ்டு என்றெல்லாம் ஏற்படுத்திக் கொண்டு, இறுதியில் இப்பொழுது மெதோடிஸ்டுகள் தங்களுடைய பாடல் புத்தகங்களிலிருந்து, “இரத்தம்'' என்ற வார்த்தையையே அகற்றிவிட விரும்புகிற அளவுக்கு வந்துவிட்டார்கள். அன்றொரு நாள் இரவில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண என் தாயார் என்னைக் கூப்பிட்டார்கள். அதில் தோன்றிய இண்டியானாவிலுள்ள மெதோடிஸ்டு போதகர் ஒருவர், சபையில் ராக் அண்டு ரோல் நடனத்தை கற்பித்துக் கொடுக்கிறாராம். அவர் அந்த நிகழ்ச்சியில் “சபைக்குள் இருக்க வேண்டிய இந்த கலையை நாம் காணத் தவறிவிட்டோம்'' என்று கூறினார். ஒரு கள்ளத் தீர்க்கதரிசிக்குள் இருக்கும் பிசாசு அது! ஆம் அப்படித்தான்! நான் இவ்வாறு சொல்வதின் மூலம் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது தேவனுடைய சத்தியமாயிருக்கிறது. இவ்வாறு கூறுவதினால் நான் ஒருவேளை உங்களை கோபமடையச் செய்தாலும், உங்களை வேத வாக்கியங்களை படிக்கச் செய்து, தேவனோடு உங்களை சரி பண்ணிக் கொள்ளும்படி செய்வேனேயல்லாமல், இதை உங்களுக்குக் கூறாமலிருப்பதினால், நீங்கள் முடிவில் கைவிடப்பட்டிருக்க நான் விரும்ப மாட்டேன். இப்பொழுது நீங்கள் என்னை விரும்பாம லிருக்கக் கூடும். ஆனால் ஒரு நாளில், நீங்கள் என் தோளில் உங்கள் கையைப்போட்டு, ''சகோ. பிரன்ஹாமே, அது சத்தியமா யிருக்கிறது'' என்று கூறுவீர்கள். இங்கே இப்பொழுதே, அவர்கள் அதற்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அது அங்கேதான் இருக்கிறது. வேதம் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று கூறியிருக்கிறது. 95வெஸ்லிக்கு பிறகு; வெஸ்லி அதைச் செய்தாரென்றால், அதற்குப் பிறகு பெந்தெகொஸ்தேயினர் வந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அதினால் வரங்கள், அந்நிய பாஷைகளில் பேசுதல் போன்றவற்றை திரும்பக் கிடைக்கப் பெற்றார்கள். எவ்விதமாக தானிய விதையானது நிலத்திலிருந்து முளைத் தெழும்பி வருகிறதோ, அது போல, முதலாவதாக அவ்விதை பூமியில் விதைக்கப்பட்டதும், அழுகுகிறது. அதன்பிறகு இரண்டு முளைகள் வருகின்றன. நீங்கள் ஒரு தானிய வயலுக்குச் சென்று பாருங்கள். அந்த முளையானது வளர்ந்து பயிரில் பட்டுக் குஞ்சம் போன்ற அமைப்பு உண்டாகிறது. இது முதலில், லூத்தரனாக இருந்தது. மணிக்குஞ்சம், இது என்ன? அதில் மகரந்தம் உள்ளது. சகோதர சிநேகத்தைப் பற்றிக் கூறுகிறது. அதுதான் மெதோ டிஸ்டுகள். இக்காலத்தில் சுவிசேஷ ஊழியம் பலமாய் நடந்தது. அதாவது குஞ்சத்தில் இருக்கும் மகரந்தபொடி தேன் சேகரிக்க வரும் வண்டுகளின் கால்களில் ஒட்டிக்கொண்டு, அவைகள் பின்பு இன்னொரு பூவில் போய் உட்காரும்போது மகரந்தச் சேர்க்கை உண்டாகி அதினால் தானியம் உருவாகக் காரணமாகிறதோ, அதுபோல் அக்காலம் இருந்தது. சகோதர சிநேகம் மகரந்தத்தைப் போல் மற்றவர்களுக்குள் செல்கிறது. 96இயற்கையே இந்தச் சபைக் காலங்களைப் பற்றிக் கூறுகிறது. லூத்தரின் காலத்தின் குழப்பமான நிலையிலிருந்து மெதோடிஸ்டு காலம் வெளிவருகிறது. வந்து, சகோதர நேசத்தாலே, சுவிசேஷ மய காலத்திற்குள் பிரவேசிக்கிறது. மிஷனரி ஊழியத்தின் காலம் அது. மெதோடிஸ்டுகளின் காலம்தான் உலகம் இது வரை அறிந் திராத மகத்தான மிஷனரி ஊழியத்தின் காலத்தை அளித்தது. அது தன் மகரந்தப்பொடியை எங்கும் தெளித்தது. அதிலிருந்து என்ன புறப்பட்டு வந்தது? பயிரின் குஞ்சத்தி லிருந்து தானியத்தின் கதிரானது வந்தது. அதுதான் பெந்தெ கொஸ்தேயினர். பூமியில் விதைக்கப்பட்ட தானியத்தைப் போலவே மேலே வருவதும் இருக்கிறது. இலையல்ல, குஞ்சம் அல்ல, ஆனால் ஒரு தானிய மணி. பெந்தெகொஸ்தேயினர் தற்போது, அந்த தானிய மணியின் மேல் பூஞ்சாணம் பிடித்துப் போனதாக ஆக்கிவிட்டார்கள். அதினால் அந்த மணியையே பார்க்க இயலாதபடி ஆகிவிட்டது. இப்போது, அதை சுத்தம் பண்ண வேண்டிய வேளையாக இருக்கிறது. ஆமென்! பெந்தெ கொஸ்தேயினர் என்ன செய்தார்கள்? மெதோடிஸ்டுகளைப் போலவே இவர்களும் செய்தனர். ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டு ஒரு சாரார் தங்களை நாங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட்'' என்று அழைத்துக் கொண்டனர். இன்னொரு கூட்டத்தினர் ''நாங்கள் பெந்தெகொஸ்தே பரிசுத்தம்'' என்று அழைத்துக் கொண்டனர். பிறிதொரு கூட்டத்தினர் “நாங்கள் ஒருத்துவக் கூட்டத்தினர்'' என்றனர். ''நாங்கள் இருத்துவ கூட்டத்தினர்'' என்றனர். ஏனையோர் இப்படியாக அவர்களில் அநேக பிரிவினர் தோன்றி விட்டனர். ஒன்று ஒரு திமில் ஒட்டகம், இன்னொன்று இரு திமில்கள் உள்ள ஒட்டகம், மற்றது மூன்று திமில்கள் உள்ள ஒட்டகம், இப்படியாக பல்வேறு கூறாக உள்ளனர். இப்படிப்பட்ட வெவ்வேறு வகையான ஸ்தாபனங்கள் அறுபது அல்லது முப்பது அல்லது நாற்பதுக்கு மேல் உள்ளனர் 97அவர்கள் என்ன செய்தனர்? மறுபடியும் ரோமானியக் கொள்கைக்குள் போய், ரோமன் கத்தோலிக்க ஞானஸ்நானத்தை கொடுத்தனர். வேதத்தில் எவராவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டனரா என்பதை எனக்கு காண்பிக்கும்படி பெந்தெகொஸ்தேயினரை நான் கேட்கிறேன். கத்தோலிக்க சபையைத் தவிர அதற்கு வெளியில் அதற்கு முன்பு, வேறு எவராவது எப்பொழுதாவது இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தனர் என்பதை எனக்கு எந்த பிஷப்பாவது, கார்டினலாவது, எந்தப் போதகராவது காண்பிக் கட்டும் என்று நான் கேட்கிறேன். லூத்தர் கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறும் பொழுது, தன்னுடன் அந்த ஞானஸ் நானத்தையும், (Catechism) மற்றும் கத்தோலிக்க மதத்தின் ஞான உபதேசம் மற்றும் ஏனைய காரியங்களையும் கொண்டு வந்தார். அதன்பின்பு வந்த மெதோடிஸ்டுகள் அதில் தொடர்ந்து நீடித்தனர். பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் வெட்கமடைய வேண்டும்! உங்களைச் சுத்தப்படுத்துங்கள். தேவ வார்த்தைக்கு திரும்பிச் செல்லுங்கள்! மனந்திரும்புங்கள், இல்லாவிடில் தேவன் உங்கள் நடுவிலிருந்து விளக்குத்தண்ணடை அகற்றிவிடுவார். உங்கள் நடுவில் நீங்கள் பெற்றிருக்கும் ஒளியும் அகன்றுவிடும். ஆமென்! சரி. 98சபைக்கு தலைவராயிருந்த பரிசுத்த ஆவியை அவர்கள் அகற்றிவிட்டு, மனிதனுடைய ஒழுங்காகிய பரிசுத்த ஒழுங்கு என்னப்பட்டதை கொண்டு வந்து அதை சபையின் மேல் வைத்தனர். ஊழியக்காரர்கள் பாஸ்டர்கள், என்றழைக்கப்பட வேண்டும். பாஸ்டர்கள் என்றால் மேய்ப்பர்கள் என்று அர்த்தமாம். ஆனால் அவர்கள் பாஸ்டர்கள் அல்லது மேய்ப்பர்கள் என்றழைக்கப்படாமல் ஃபாதர் (பிதா), கார்டினல், ஆர்ச்பிஷப், ஜெனரல் ஓவர்சீர் (பொது கண்காணி) என்றெல்லாம் அழைக் கப்படலாயினர். இதையெல்லாம் உண்மையானவர்கள் வெறுத் தனர். அவர்கள் இவ்விதமான கிரியைகளை வெறுப்பதைக் குறித்து தன்னுடைய அங்கீகாரத்தை தெரியப்படுத்தும்படி தேவன், “நானும் இதை வெறுக்கிறேன்'' என்றார். ஏனெனில், சபைக்கு ஜெனரல் ஓவர்சீர். ஆர்ச் பிஷப், போப் ஆகியவற்றை தேவன் தாமே வகிக்கிறதாக இருக்க வேண்டும். அவர் தனிப்பட்ட நபரோடு கிரியை செய்து இடைபடுகிறார். ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல, ஒரு தனி நபரிடம் தான் தேவன் கிரியை செய்கிறார். இப்பொழுது விசித்திரமான ஒரு காரியம்... முடிக்கப் போகி றோம், கவனியுங்கள். நமக்கு இன்னும் ஒரு வசனம் உள்ளது. 99இங்கே தான் கத்தோலிக்க சமயத்தின் கோட்பாடு ஆரம்ப மாகிறது. அதாவது, அப்போஸ்தலப் பட்டத்திற்கு வம்சா வழியில் வாரிசு முறை. எத்தனை பேர்கள், அதை அறிவீர்கள்? அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சவழியில் வாரிசாக ஏற்படுதல். கத்தோலிக்க சமயத்தவர், 'இன்றைக்கு இருக்கும் போப் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாரிசு'' என்கின்றனர். அப்போஸ்தல உத்தியோகத்திற்கு வம்சாவழியாக வாரிசாக வந்திருக்கிறவர் என்கின்றனர். அப்படியொரு காரியம் கிடையவே கிடையாது. எவ்வாறு உங்களுடைய மாம்சீக, பால் உணர் வினால்.... பரிசுத்தமான ஒரே தாய், தந்தைக்குப் பிறந்த இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும் ஆவார்கள். ஆனால் அவர்களில் இளையவன் கிறிஸ்தவனாகவும், மூத்தவன் பிசாசாகவும் இருந்தானே? பார்த்தீர்களா? அது எப்படி முடியும்? ஏனெனில் பாவம் பாவம் தான், பாலுணர்வு பாலுணர்வுதான். ஆனால் தேவனோ புதிய பிறப்பைக் கொடுக்கிறார். தேவன் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தெரிந் தெடுத்தார். அதை நீங்கள் அறிவீர்களா? வரலாற்றாளர்கள் எழுதியுள்ளதை நாம் வாசிக்கும் வரைக்கும் காத்திருங்கள். ஐரேனியஸ் எவ்வாறு உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் அவரை தெரிந்து கொண்டதற்காக எவ்வாறு தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். பரி. மார்டினும் மற்றவர்களும் அதற்காக எவ்வாறு அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள் என்று. அவர், “ஏனென்றால் ...'' என்றார். மக்கள் அவரைக் குறித்து பேசுகையில், 'அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே தெரிந்து கொள்ளப் பட்டார்'' என்றனர். அது வேத பூர்வமானது. அச்சகோதரர்கள் தேவனோடு ஓரணியில் நின்றிருந்தனர். 1500 ஆண்டுக்கால இருண்ட யுகத்தின் வழியாக வந்த இந்த சபையானது, விளக்கில் கரும்புகை பிடித்தல் எவ்வாறு விளக்கொளியை மறைக்குமோ, அதுபோல ஒளியை மறைத்த நிலையில் இருக்கிறது. ஆனால், ''சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்'' என்று கர்த்தர் கூறினார். வம்ச பரம்பரையாக அப்போஸ்தலப் பட்டத்திற்கு வாரிசு உருவாகுதல், ஒருவன் பின் ஒருவராக வருகிறார்கள். ஒருவர் போப்பாக ஆக வேண்டுமென்றால் போப்புகளின் வம்சாவழியில் நீங்கள் வந்தவராக இருக்க வேண்டும். ஓ, என்னே, என்னே! அது அபத்தம். சபையின் ஜனங்கள், தங்கள் பாவத்தை விட்டு வெளியே வரவும், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், சாமியாரிடம் பாவ அறிக்கை செய்யவும், அதற்காக சபையின் குருவானவர் ஜெபிக்க வேண்டுமானால் அவருக்கு பணம் கட்ட வேண்டும். 100ப்ராடெஸ் டெண்டுகளும் அதேபோல செய்கின்றனர். தங்கள் மேய்ப்பரை முதுகில் தட்டிக் கொடுத்து, உலகத்தாரைப் போல் ஜீவிக்கிறார்கள். மேய்ப்பர் எப்படி தேவனை அறிந்திருக்க வில்லையோ, அதே போல் சபையாரும் தேவனை அறிந்திருக்க வில்லை. இந்த விதமான நிலையில், அந்த மேய்ப்பனுடைய சபையில் தங்கியிருக்க அனுமதித்து, அவர்களை சபையின் அங்கத் தினர்கள் என்று அவர் அழைக்கிறார்; அவர்கள் இரட்சிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று அவர் அவர்களுக்கு அறிவித்துவிடுகிறார். அவர்கள் மறுபடியும் பிறவாதபடியினால், அந்த நாளில் எந்த அளவுக்கு ஏமாறப்போகிறார்கள்! பரிசுத்த ஆவியைப் பெறாமல் இருந்தால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். பரிசுத்த ஆவியினா லேயல்லாமல் ஒருவனும் 'இயேசுவே கிறிஸ்து'' என்று கூறமுடியாது. எபேசு சபைக்காலத்தில் இருந்த உண்மையான சபையானது, இப்படிப்பட்ட நளினமான, புத்திசாலித்தனமான நயவஞ்சகப் பேச்சுகளினால் ஏமாறவில்லை, வஞ்சிக்கப்படவில்லை. அதை அவர்கள் வெறுத்தனர். அவர்கள் வஞ்சிக்கப்படவில்லை. உண்மையான சபை வஞ்சிக்கப்பட முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். 101இந்த நபர்கள் கொண்டிருந்த கள்ள வெளிப்படுத்துதல் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமாயிருந்தது. அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாயிருந்தது. 'பாவ சங்கீர்த்தனம் கேட்கும் குருவானவர்' என்றொரு காரியம் போதிக்கப்பட்டுள்ளது என்பதை வேதத்தில் எங்கு கண்டீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவமன்னிப்புக்காக “தெளித்தல்'' என்றொரு போதகம் வேதத்தில் நீங்கள் எங்கே வாசிக்கிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்? யாராவது, தங்களது பாவ மன்னிப்புக்கென, ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத் தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்களா என்பதை வேதத் திலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம் “ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து, பெயரை சபையின் புத்தகத்தில் பதிந்து விட்டால் எல்லாம் முடிந்தது'' என்ற போதகம் வேதத்தில் எங்கே பார்த்தீர்கள்? அது என்ன? தேவ வார்த்தையோடு சரியாக இல் லாத நிக்கொலாய் மதஸ்தராகிய குருத்துவம் தான் அது. ''நான் அவைகளை வெறுக்கிறேன்'' என்று தேவன் கூறினார். தேவ வார்த் தைக்கு திரும்பி வாருங்கள்! இது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நான் அறிவேன். நான் அதற்கு பொறுப்பல்ல, வாக்குவாதம் செய்வதாயிருந்தால் தேவனிடத்தில் அதைச் செய்யுங்கள். வார்த்தைக்கு முரணாக உள்ள கள்ள வெளிப்படுத்துதல்கள், அவர்களை தேவன் “பொய்யர், கள்ள அப்போஸ்தலர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள்'' என்றே அழைக்கிறார். ஆனால், உண்மையான சபையோ, பரிசுத்த பவுலுடைய மூல உபதேசத்தையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், பவுல் போதித்த தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தொடர்ந்து வரும் அற்புத அடையாளங்களையும் விடாமல் பற்றிக் கொண்டவர்களாயிருந் தனர். ஆமென்! தெளித்தல் என்ற வார்த்தையை தேவன் எங்காவது உறுதிப்படுத்தியுள்ளாரா என்பதை எனக்கு காட்டுங்கள் பார்க்க லாம். வெறுமனே கைகளை குலுக்கிக் கொள்வதையும், சபையின் பதிவேட்டில் தன் பெயரை பதிந்து கொள்வதையும், தேவன் எங்காவது உறுதிப்படுத்தி, அந்நிய பாஷைகளில் பேசுதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் செய்திருக்கிறாரா என்பதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். வெறுமனே கைகுலுக்கிக் கொண்டு, சபையின் புத்தகத்தில் பெயரை பதிவு செய்து கொண்டு, இருந்தால் அதுவே போதும் என்றெண்ணி, இன்னமும், வெற்றிலை பாக்கு புகையிலைமென்று கொண்டு, புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும், பொய்களை ஊதிக்கொண்டும், சீட்டாடிக் கொண்டும், கொஞ்சம் களியாட்டும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஓ, இரக்கம் வேண்டுமே! அது மாம்சீகமானது, நண்பரே, இது கள்ளத் தீர்க்கதரிசிகளின் காரியம். ஆம், ஐயா! 102தேவனுடைய வழி பரிசுத்தமானது. இங்கிருக்கிற கிறிஸ்து வின் சரீரத்தின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இவ்விஷயம் தெரிந்திருக்கட்டும்! நீங்கள் ஒரு பரிசுத்த ஜீவியத்தைச் செய்கிற வரைக்கிலும், தேவன் உங்கள் பலியை ஏற்றுக் கொள்கிறதில்லை. பலியானது, பரிசுத்தமான கரங்களினால் படைக்கப்படவேண்டும். அது உண்மை . பிரதான ஆசாரியனானவன், தேவ சமுகத்தில் பலி செலுத்துவதற்கு முன்னால், அதற்காக அங்கு அவன் நடந்து உள்ளே வருவதற்கு முன்பே, பரிசுத்தமாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப் பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, பரிமள தைலம் பூசப்பட்டு இருக்க வேண்டும். காரியமானது, அப்படித்தானே உள்ளது? அப்படி யெல்லாம் இல்லாமல், உங்கள் அயலகத்தாரோடு சண்டை யிட்டுக் கொண்டும், ஏமாற்றி, திருடிக்கொண்டும், வாக்குவாதம் செய்து கொண்டும் இருந்துவிட்டு, இங்கே உள்ளே வந்து, 'ஓ தேவனாகிய கர்த்தாவே! இயேசுவுக்கு துதி! அல்லேலூயா!'' என்றெல்லாம் எவ்வாறு கூறமுடியும். ''அவர்களில் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் பார்த் திருக்கிறேன்'' என்று மக்கள் கூறுகிறார்கள். அதினால் அவர்கள் பரிசுத்த ஆவியினைப் பெற்றிருக்கிறார்கள் என்றாகிவிடாது. ''அவர்கள் சப்தமிடுவதை நான் கேட்கிறேன்'' என்று சொல்லலாம். அதுவும்கூட அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதற்கு அடையாளமாக இருக்காது. பரிசுத்த ஆவி என்பது ஜீவனாகும். எபிரெயர் 6ம் அதிகாரத்தில் வேதம் இவ்வாறு கூறுகிறது; ''தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலம்... ஆனால் முட்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ... சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு'' 103“சூரியனானது நல்லோர் மேலும், தீயோர் மேலும் உதிக் கிறது. மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது''. மழையானது கோதுமைப் பயிரை (அப்படி நாம் வைத்துக் கொள்வோம்) முளைக்கச் செய்ய வருகிறது. நிலத்திலுள்ள ஒவ்வொரு களைக்கும் கூட அம்மழை வருகிறது. கோதுமைப் பயிர் தாகமாயிருக்கிறது. அதே போல களையும் தாகமாயிருக்கிறது. கோதுமைக்கு நீர் பாய்ச்சுகிற அதே மழைதான் களைக்கும் நீர் பாய்ச்சுகிறது. அந்த சிறிய கோதுமை பயிரானது, தன் தலையை உயர்த்தி, ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! இந்த மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்!'' என்று சொல்லுகிறது. பக்கத்தில் இருக்கும் களையுங்கூட, “தேவனுக்கு மகிமை! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! மழை கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்'' என்று கூறுகிறது. ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை நீங்கள் அறியலாம் அது சரி. அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறியலாம். 1047ம் வசனம் - அதோடு முடித்துக் கொள்வோம். இது தான் இச்சபைக் காலத்தின் முடிவுப் பாகம். இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தான். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது.” வெளி.2:7240. ஜெயங்கொள்ளுகிறதற்கு உங்களுக்குள்ள வழி இதுவே என்பதைப் பாருங்கள், நண்பர்களே. முதலில் நீங்கள் ஜெயங் கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் நீங்கள் கனியைப் புசிக்க முடியும். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கனி புசிக்கக் கொடுக்கப் படுகிறது. கடந்த இரவில் உண்டாயிருந்த நம்முடைய உபதே சத்தை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? யோவான் எந்த ஒன்றையும் காணும் முன்னர், அவன் முதலில் ஆவிக்குள்ளாக வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு பாப்டிஸ்ட் அல்லவென்றால், நான் அவர் பிரசங்கத்தைக் கேட்கமாட்டேன்'' என்றும், ''நீங்கள் என் சபை போதிக்கிறதற்கேற்ப போதிக்காவிடில் உங்கள் பிரசங் கத்தை நான் கேட்கமாட்டேன்'' என்றெல்லாம் நீங்கள் சொல்லுகிறீர்களே, அது எப்படி? நீங்கள் ஜெயங்கொள்ளப் போகிறதில்லை. நீங்கள் இன்னும் ஆவிக்குள்ளாகவில்லை. நீங்கள் யாவரும் ஒழுங்கற்றுக் காணப்படுகிறீர்கள். தேவனுடைய ஆவிக்குள்ளாகி, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் சரியென்று காண்கிற எதையும் எனக்கு வெளிப்படுத்தி அதை என்னிடம் கொண்டு வாரும்'' என்று அவரிடம் கூறுங்கள். அப்பொழுது நீங்கள் சரியான வழியில் வந்துவிடுவீர்கள். 105வேதாகமத்தில் ஆதியாகமத்தில் மூன்று இடங்களிலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று இடங்களிலும் ஜீவ விருட்சத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைக்கு அதைக் குறித்து நாம் பார்த்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஞாயிற்றுக்கிழமை... நேற்று பார்த்தோம். பிசாசானவன் வேத வாக்கியங்கள் யாவையுமே வெறுக்கிறான். ஆதியாகமம் மிகவும் நம்பத்தகுந்ததால், அவன் அதை எதிர்க்கிறான். அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மையல்ல என்று மக்கள் நம்பும்படி செய்ய அவன் விரும்புகிறான். “ஆதியாக மத்தில், ஆதியில் அவர்களுக்கு என்ன நேரிட்டது என்று தேவன் கூறினாரோ அதன்படி காரியம் நடக்கவில்லை, சிருஷ்டிப்புக்கு காரணம் தேவனொன்று தான்'' என்று அவன் கூறுகிறான். அந்த விதமாக அவன் அப்புத்தகத்தை எதிர்த்து தாக்குகிறான். வெளிப்படுத்தின விசேஷத்தை விட்டு மக்களை சாத்தான் விலகிப் போகச் செய்கிறான், ஏனெனில் அப்புத்தகம், இயேசுவே தேவன் என்றும், சாத்தான் தான் அந்த பிசாசு, அவன் நாசமடைகிறான் என்றும், தேவனுடைய வாசஸ்தலத்திற்கு போகப்போகும் பரிசுத்தமாக்கப் பட்ட சபையின் மகிமையைப் பற்றியும், கள்ளத் தீர்க்கதரிசிக்கு ஏற்படப் போகும் முடிவைப் பற்றியும், மற்றும் பொய்யையும், தீங்கானவைகளையும் நடப்பிக்கிற அனைவரும் அக்கினிக்கடலில் தள்ளப்படப் போகிறதைப் பற்றியும் வெளிப் படுத்துகிறது. அவர்களை இப்புத்தகத்தைவிட்டு பிசாசானவன் விலக்கியே வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இவ்விரு புத்தகங்களும் பரதீசியிலுள்ள ஜீவவிருட்சத்தைக் குறிப்பிடு கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, ''மரம்'' என்பதைப் பற்றி ஒரு நிமிடம் பார்ப்போம். யோவான் எழுதிய சுவிசேஷம் 6ம் அதிகாரம் - வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். இயேசு, “நானே ஜீவ அப்பம்'' என்று கூறினார். இப்பொழுது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 106இதோ இங்குள்ள இவ்விரு கம்பங்களையும் நமது பாடத் திற்கு அடையாளக் குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்வோம். எனவே, இப்பொழுது முடிக்கும் முன்னர், இங்கே எனது வலது பக்கத்தில் உள்ளது தோட்டத்தில் இருந்த “ஜீவ விருட்சம்'' என்ற மரமாகும். எனது இடது பக்கத்தில் உள்ள மரம், தோட்டத்தில் இருந்த 'அறிவின் விருட்சம்'' என்ற மரமாகும். அங்கே ”ஜீவ விருட்சம்'' என்று ஒரு மரமும், அறிவின் விருட்சம்'' என்று ஒரு மரமும் இருந்ததாக வேதம் கூறுவதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? மனிதனானவன், இந்த ஜீவ விருட்சத்தைக் கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தது; அவன் அறிவின் விருட்சத்தை தொடக்கூட வேண்டாம் என்று சொல்லப்பட்டிருந் தான். அது சரிதானே? அறிவின் விருட்சத்தை முதன் முதலாக தொட்ட அந்த க்ஷணமே அவன் தன்னுடைய சிருஷ்டிகரிட மிருந்து தன்னைத் தானே வேறு பிரித்துக் கொண்டுவிட்டான். அவன் முதன் முதலாக அறிவின் கனியை கடித்த அதே வேளையில் தானே, தேவனோடு தனக்கு இருந்த ஐக்கியத்தை இழந்து விட்டான். அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள். குறிப்புக்களை எழுதி கொண்டிருக்கிறவர்களுக்கு, நீங்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ள தருணம் அளிக்கிறேன், ஏனெனில் நீங்கள் இதை இழந்து போகக்கூடாது என்று நான் விரும்புகிறேன். யோவான் 6ம் அதிகாரத்தில், இயேசு, யூதர்கள் ஒரு கிணற்றி லிருந்து தண்ணீர் குடித்து, தங்கள் கைகளை உயர்த்தி, தங்கள் பிதாக்கள் ஆவிக்குரிய கன்மலையிலிருந்து தண்ணீர் குடித்ததாகக் கூறி, அதை ஒரு பரிகாசமான செயலாக செய்து கொண்டிருந் தனர். இயேசு, “வனாந்தரத்தில் இருந்த அந்தக் கன்மலை நானே'' என்றார். 107அவர்கள் அவரிடம், ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்று சொல்லுகிறாயே, உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லையே, அப்படியிருந்தும், ஆபிரகாமை நீ கண்டதாகக் கூறுகிறாயே? இப்பொழுது நாங்கள், நீ ஒரு பைத்தியம் பிடித்தவன் என்றும், பிசாசென்றும் அறிந்திருக் கிறோம்'' என்று கூறினார்கள். பாருங்கள்? “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' என்றார். இருக்கிறேன் என்பவர் எரிகின்ற முட்செடியில் மோசேக்கு தரிசனமானார். ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னே நான் இருக்கிறேன்'' என்றார். ”இருந்தேன்'' என்று அவர் கூறவில்லை. “இருக்கிறேன்'' அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது என்று கூறு கிறவர்களே, அப்படியென்றால், வேதத்தில் இருந்தவராகிய நான், அந்த மகத்தான இருந்தவராகிய நான்'' என்று வேத வாக்கியத்தை உங்களுக்கென நீங்கள் திருத்தியே வாசித்துக் கொள்ள வேண்டும். “இருந்தேன்'' என்பதாக அல்ல, ”இருப்பேன்'' என்ப தாகவும் அல்ல, “இருக்கிறேன்'' என்ற வார்த்தை நித்தியத்தைக் குறிக்கும். அவர் எல்லாக் காலங்களிலும், எல்லா வேளையிலும், அந்த எல்லா ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலும், ஒவ்வொரு சபைக்காலத்தின் சபையிலும், ஒவ்வொரு ஸ்தலத்திலும், ஒவ்வொரு இருதயத்திலும், ''இருக்கிறேன்'' என்பவராக இருக் கிறார். (”இருந்தேன்'' என்பதாக அல்ல, “இருப்பேன்'' என்ப தாகவும் அல்ல.) ”நான் எப்படி கடந்த காலத்தில் இருக்கிறவராக இருந்தேனோ அதைப் போலவே இப்பொழுதும் இருக்கிறேன்'' என்கிறார். பாருங்கள்? “எக்காலத்திலும் இருக்கிறேன்'' என்ப தாகவே இருக்கிறார். 10865-08-22கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார் 109“எங்கள் பிதாக்கள்... ”நாங்கள் உன்னை அறியோம் நீ ஒரு பிசாசென்று அறிவோம்'' என்று யூதர்கள் கூறினார்கள்... “வனாந் தரத்தில் எங்கள் பிதாக்கள் நாற்பதாண்டுக் காலம், மன்னாவைப் புசித்தார்கள்'' என்று கூறினர். இயேசு 'அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித் தார்கள்'' என்று கூறினார். அவர்கள் யாவரும் மரித்தார்கள். “ஆனால், நானோ... ஓ! நானே பரலோகத்திலுள்ள தேவனிட மிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம். அந்த அப்பத்தை புசிக்கிற வனெவனும் மரிப்பதில்லை'' என்று இயேசு கூறினார். “இந்த மனிதன் தன் சரீரத்தையே புசிக்கக் கொடுப்பானோ? நிச்சயம் இவனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது'' என்று அவர்கள் கூறினார்கள். ஜீவ அப்பமானது, ஜீவ விருட்சத்திலிருந்து உள்ளதாகும். அதிலிருந்து தான் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசிக்க வேண்டுமென்று இருந்தது. அவரே ஜீவ விருட்சமாயிருக்கிறார். ஜீவ விருட்சம் என்பது ஒரு நபராக இருக்கிறதென்றால், அறிவின் விருட்சம் என்பதும் ஒரு நபரைத்தான் குறிக்கிறது. இது இப்படி யிருக்கிறதென்றால், சர்ப்பத்திற்கு ஒரு வித்து இருக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? ஜீவனானது மனிதனால் வருகிறது என்றால், ஸ்திரீயினால் மரணம் வருகிறது. ஆகவே, இவள் தான் மரண விருட்சமாயிருந்தாள். 110சர்ப்பமானது ஸ்திரீயானவளை கெடுத்த பிறகு, அவள், ''சர்ப்பமானது என்னை வஞ்சித்தது'' என்று கூறினாள். அது உண்மை . அவன் தரையில் ஊர்ந்து செல்லும் வெறும் ஒரு பாம் பல்ல. மிருகங்கள் எல்லாவற்றிலும் சர்ப்பமானது மிகவும் தந்திர முள்ளதாயிருந்தது, அவன் மனிதனுக்கும், மனிதக் குரங்குக்கும் நடுவில் இருந்து வந்த ஒரு மிருகம். ஒரு மிருகத்தின் வித்தானது ஒரு ஸ்திரீக்குள் சென்று கருத்தரிக்க முடியாது. ஆனால் இவனுக்கோ முடிந்தது. இவன் மனிதனுக்கு அருகாமையில் இருந்த ஒருவனாயிருந்தான். தேவன் அவன்மேல் ஒரு சாபத்தைப் போட்டு, அவனுடைய வயிற்றினால் ஊர்ந்து செல்லவும், கால்கள் இல்லாமற்போகவும், அவனிலுள்ள எல்லா எலும்புகளையும் அகற்றிவிட்டு, மனிதனைப்போல் தோற்றம் தரும் அவனது தோற் றத்தையெல்லாம் மாற்றிப் போடவும் செய்தார். விஞ்ஞான மானது அதை நிலத்தில் தோண்டியெடுக்க முயன்று கொண்டிருக் கிறது. தேவனுடைய பரதீசின் மத்தியில் உள்ள தேவனுடைய இரகசியங்களில் மறைந்து கிடக்கிற ஒன்றாகும் இது. அங்கே தான் உங்களுடைய வெளிப்படுத்துதல் இருக்கிறது. 111அவள், காயீன் என்ற தனது முதல் மகனை பிறப்பித்தாள். அது சரியா? அவன் சாத்தானின் மகன், சாத்தானின் மகன் அவன். காயீனை சாத்தானின் மகன் அல்லவென்று நீங்கள் கூறினால், அவனில் வெளிப்பட்ட அந்த தீங்கு எங்கிருந்து வந்தது? தேவனுடைய குமாரனாகிய ஆதாமிடத்திலிருந்தா வந்தது? காயீனுடைய தந்தையாகிய சாத்தானிடத்திலிருந்து தான். காயீன் கொலை செய்தான். முதல் கொலைகாரன் பிசாசானவன், பிசாசின் மகன் அதைச் செய்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். காயீனின் வம்ச வரலாற்றைக் கவனித்துப் பாருங்கள். அந்த சந்ததியில் உதித்த ஒவ்வொருவரும் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்கினர். அதைப் பற்றி வேதத்தில் படித்துப் பாருங்கள். அவர்கள் கட்டிடங்களைக் கட்டினார்கள். உலோக வேலை செய்தார்கள். அவர்கள் விஞ்ஞானிகளாக விளங் கினார்கள். ஆனால், சேத்திலிருந்து வந்த அவனது வம்சத்தினரோ, (ஆபேல் மரித்தான், அவன் இயேசுவுக்கு மாதிரியாக இருக்கிறான், இயேசு மரித்தார். ஆபேல் மரித்தான், சேத் அவனது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். மரித்தல், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல்) சேத்திலிருந்து, தாழ்மையான பயிர்த்தொழில் செய்வோர், ஆடு மேய்க்கிறவர்கள் ஆகிய இத்தொழில்களைச் செய்யும் சந்ததியினர் உதித்தனர். 112''உங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள். ஆனால் அவர்கள் யாவரும் மரித்தார்கள். ஆனால் நானோ ஜீவ அப்பமாயிருக்கிறேன்'' என்று இயேசு கூறினார். (ஜீவ அப்பம் - அது என்ன? அது ஏதேனிலிருந்து வந்ததாகும்.) “இந்த அப்பத்தைப் புசிக்கிற எவனும் மரிப்பதில்லை'' ஜீவ விருட்சத்தின் கனியை மனிதன் புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராத படிக்குக் செய்ய, ஜீவவிருட்சத்தை யாரும் தொடாதபடிக்கு, அதற்குப் போகும் வழியை காவல் செய்ய தூதனை தேவன் வைத்தார். அது சரியா? ஏனெனில் அவர்கள் இந்த மரத்தின் பேரிலேயே தொடர வேண்டியிருந்து மரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். இந்த மரத்தின் கனியை புசிக்கிற வரைக்கிலும் அவர்கள் மரித்துக் கொண்டேயிருக்கத்தான் வேண்டும். அறிவின் விருட்சத்திலிருந்து நீங்கள் புசித்துக் கொண்டிருக்கிற வரையிலும், நீங்கள் மரிப்பது நிச்சயமே.... இப்பொழுது நாம் இந்த அறிவின் விருட்சம் என்னவென்று பார்ப்போம். அது என்ன செய்தது என்று பார்ப் போம். அது என்ன செய்கிறது என்று நாம் பார்ப்போம். அது வெடி மருந்தைக் கண்டுபிடித்தது. அது நமது தோழர்களைக் கொன்று குவிக்கிறது. அது உண்மை . ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக இருக்கும் வெடிமருந்தானது, அறிவின் விருட்சத்தின் கனிதான். அடுத்ததாக, அறிவின் விருட்சத்தைக் கொண்டு, மோட்டார் வாகனத்தை கண்டு பிடித்தோம். அது வெடி மருந்தைக் காட்டிலும் கூடுதலாக மனிதரைக் கொல்லுகிறது. ஆம், அப்படித்தான். இப்பொழுது நமக்கு ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளது. தேவன் எதையும் அழிப்பதில்லை. மனிதன் தன்னுடைய அறிவினாலேயே தன்னையே அழித்துக் கொள்ளுகிறான். 113ஆனால் தேவனுக்குச் சொந்தமானவை எவைகளோ, அவற்றையெல்லாம் தேவன் மீண்டும் எழுப்புவார். தேவன் தன்னுடைய தொன்றையும் இழப்பதில்லை. இயேசு அவ்வாறு கூறினார், அது உண்மை . “இந்த அப்பத்தைப் புசிச்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்பு வேன்'' என்று இயேசு கூறினார். அது அவருடைய வாக்குத் தத்தமாயிருக்கிறது. இப்பொழுது தேவன்... அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து புசித்துக் கொண்டு, மிகவும் தொலைவில் இருந்து கொண்டு மரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை விட்டு விட்டு, இந்த ஜீவ விருட்சத்தினிடத்தில் வந்து விட்டால் அவர்கள் என்றென்றும் ஜீவிப்பார்கள். 114எனவே இப்பொழுது, ஒரு தூதனானவன் ஜீவவிருட்சத் தினிடத்தில் யாரும் நெருங்கி வராதபடிக்கு துரத்திக் கொண்டிருந் ததற்குப் பதிலாக, சபைகளின் தூதர்கள், “இது யாவர்க்கும் உரியது'' என்று கூறி, ஜீவவிருட்சத்தினிடம் நெருங்கிப் போகத் தக்கதாக மனிதரை ஜீவவிருட்சத்தை நோக்கி துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அதினால் அவர்களை தேவனுடைய பரதீசின் மத்தியில் நிற்கிற ஜீவ விருட்சமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிடத்தில் திரும்பி வரச் செய்து கொண்டிருக்கிறார்கள். வ்யூ! என்னே! நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சமானது, நீங்கள் அதின் கனியைப்புசித்து, தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகி, என்றென்றும் ஜீவிப்பதற்காக இருக்கிறது. ”என்னுடைய வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தினின்று நீங்கி ஜீவனுக் குட்பட்டிருக்கிறான்.'' சகோதரனே, சகோதரியே, நான் நிச்சயமாக உங்கள் மனதை புண்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான் அவ்விதமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருக்கவில்லை. தேவன் அதை அறிவார். ஆனால் நான் இவ்விதமாகத்தான் இதைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உண்மையாக நீங்கள் கண்டு கொள்ளச் செய்ய அது தான் சரியான வழியாகும். இன்னும் நீண்டகாலம் நாம் தங்கியிருக்க வேண்டியதிருக்கும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்தவரல்லாதவர் என்பதாகச் செய்ய நான் முயற்சிக்கவில்லை. அது அவ்வாறு இல்லை. மக்கள் சூழ்நிலைகளுக்கு பலியான வர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அவர்கள் பெற்றோர் யாவரும் அவர்களை ஒரு ஸ்தாபனத்தில் போய் சேரும்படி செய்து விட்டனர். 115ஆனால் சகோதரனே, நாம் இங்கிருந்து கடந்து செல்லும் முன்னர் இன்னும் ஒரு மேற்கோளை உங்களுக்குத் தருகிறேன். தீர்க்கதரிசி கூறினார்... நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா? வேதமானது தீர்க்கதரிசிகளுக்கு செவிகொடுக்க வேண்டுமென கூறியுள்ளது. “ஒரு நேரமானது வரும், அது பகலுமல்ல, இரவு மல்ல, அது ஒரு விதமான மப்பும் மந்தாரமுமான நாளாக இருக்கும். ஆனால் சாயங்கால வேளையில், சூரியனானது அஸ்தமிக்கிறதற்கு முன்பு, வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசியானவன் கூறியிருக்கிறான். நமக்கு என்ன கிடைத்ததென்று பார்ப்போம். இப்பொழுது, பாருங்கள். பூளோக ரீதியாக சூரியனானது எப்படி, எங்கே எழும்புகிறது? அது கிழக்கில் உதிக்கிறது. அது மேற்கில் போய் மறைகிறது. நாளை இரவு நான் ஒரு பூளோகப்படத்தை கொண்டு வந்து உங்களுக்கு காண்பிப்பேன். எருசலேமில் பரிசுத்த ஆவி விழுந்தபோது, அது தன் ஓடு பாதையில் ஒரு பூரணமான எட்டு எனும் எண் வடிவத்தைப் போட்டது. அங்கிருந்து நேராக அயர்லாந்து தேசத்தின் வழியாகக் கடந்து சென்று, அங்கிருந்து மேற்குக் கடற்கரைக்கு வந்தது. அது மீண்டும் அப்படியே பாதையை திருப்பிக் கொண்டு வருகிறது. பூமி முழுவதிலும் அது சென்ற பாதை எட்டு என்ற எண் வடிவத்தில் போனது. அப்பாதையில் சுவிசேஷ மானது சென்றது. சூரியனுடன் நாகரீகமும் பிரயாணம் செய்து வந்துள்ளது. எத்தனைப் பேர் அதைப் பற்றி அறிவீர்கள்? நீங்கள் அதைக் குறித்து போதிக்கப்பட்டு அதை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். மிகவும் பழமையான நாகரீகம் சீனாவில் இருந்தது, அங்கிருந்து அது கிழக்கத்தி தேசங்களுக்குப் பிரயாணம் செய்தது. பரிசுத்த ஆவியானது இவ்வாறு குமாரனின் ஓடு பாதையில் (SON) சென்றது. சூரியனின் (Sun) ஓடுபாதையில் அல்ல. 116சூரியனானது (Sun) பனி மூட்டத்தினூடாக, பனித்துளிக் கொண்டு இருக்கையில், அதன்வழியாக பிரகாசிக்கையில், வித்தானது எங்கிருந்தாலும் சரி, அது பிழைக்கும். ஏனெனில் அனைத்து தாவர உயிர்களும் சூரியனால் தான் பிழைக்கின்றன. நாம் அதை அறிவோம். நீங்கள் ஒரு புல்லின்மேல் கொஞ்சம் காங்க்ரீட் கலவையை போட்டுவிட்டாலும், அடுத்த வசந்தத்தில் அடர்த்தியாக வளர்ந்துள்ள புற்கள் எங்கே உள்ளன? காங்ரீட்டின் முனையிலிருந்து புற்கள் வெளிக்கிளம்பி வருகிறது. ஏன்? அடியில் அந்த ஜீவனானது இருக்கிறது. உண்மையான ஜீவனை நீங்கள் மறைத்து வைத்து விட முடியாது. அச்சிறிய ஜீவனானது, சூரியன் அங்கே ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடனேயே, அது பாதியளவான நகரத்தின் சதுக்கத்தின் பரப்புக்குள் உள்ள அந்த காங்ரீட்டினூடே நெளிந்து வளர்ந்து பரவி, வெளியே தலையை தூக்கி தேவனை துதிக்கிற அளவுக்கு வளர்ந்து விடுகிறது. உங்களால் ஜீவனை மறைத்து வைக்க முடியாது. அது உண்மை . ஜீவனைப் பற்றிய விஷயம் அப்படித்தான் உள்ளது. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாக ஆகிவிட்டால், உங்களால் அதை மறைத்து வைக்க முடியாது. நீங்கள் ஜீவனைப் பெற்று விட்டால், அப்பொழுது ஏதோ ஒன்று உங்களுக்குள் இருந்து ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. 117இப்பொழுது, இந்த வேளையில் யாவும் மரித்த நிலையில் இருக்கின்றன. விதைகள் வெடித்து வெளிவருகின்றன. உள்ளே யுள்ள சதையெல்லாம் போய்விட்டது, அது மரித்த நிலையில் உள்ளது. ஆயினும் அதனுள் ஜீவன் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது, சூரியன் வசந்த காலத்தில் பிரகாசிக்க ஆரம்பிக்கிற போது, சிறுசிறு பூக்கள் பூக்கின்றன, யாவும் மீண்டும் தலையைத் தூக்கிப் பார்க்கின்றன (மரக்கட்டைகளின் அடியிலிருந்தும், பாறைகளின் அடியிலிருந்தும்). அவைகள் மீண்டும் எழும்பி, ஜீவிக்க ஆரம்பிக்கும். அது சரியா? ஏனெனில் சூரியன் (Sun) பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாளில் குமாரன் (SON) பிரகாசிப்பார். அவரே நித்திய ஜீவனின் ஊற்று. நித்திய ஜீவனுக்காக அவரிடத்தில் முளைப் பிக்கப்பட்டிருக்கிற யாவையும், அவர் “நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்'' என்று சொன்னபடி உயிரோடெழுப்பு வார். நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நித்திய ஜீவனையுடையவர்கள் கடைசி நாளில் எழுப்பப்படுவார்கள். அவர்கள் உங்களை கடலில் புதைத்து விட்டாலும், உங்கள் சரீரத்தை எரித்து சாம்பலாக்கி, அதை பூமியின் நான்கு திசைகளிலும் பறக்கடித்து விட்டாலும், கடைசி நாளில் தேவன் உங்களை எழுப்புவார். பசியோடிருக்கும் ஒரு சிங்கத்தின் வயிற்றை நிரப்பும் ஆகாரமாக நீங்கள் இருக்க வேண்டியதாயிருந்தாலும் அல்லது உங்கள் சரீரத்தில் இருக்கும் பதினாறு வகையான பெட்ரோ இரசாயனங்கள் மற்றும் காஸ்மிக் ஒளி இவையெல்லாம் சரீரத்தினின்று அற்றுப் போக வைக்கும் அக்கினிச் சூளையில் உங்களைப் போட்டுவிட்டாலும், தேவன் உங்களை எழுப்புவார். ”உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது''. ஆமென்! தேவன் அதை எழுப்புவார். இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயினால் மரிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும், ஒரு மனிதனால் பிழைத்திடுவான். அந்தவிதமான ஜீவனில் ஸ்திரீயினிடத்தில் பங்கு பெற்றவன், மரித்திட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. பங்கு பெற்றுக்கொள்வது எந்த அளவுக்கு உங்களுக்கு நிச்சயமாக இருக்குமோ, அந்த அளவுக்கு அதாவது, ஜீவவிருட்சத்தில் நிச்சயமாக நீங்கள் பங்கு பெற்றால், அதின் கனியைப் புசித்தால், நீங்கள் ஜீவனோடிருப்பீர்கள். ஜீவனை அடை வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியேயில்லை. ஆமென்! அது மரணத்தைப் பிறப்பிப்பது எவ்வளவு நிச்சயமானதோ, அதே போல் இது ஜீவனைப் பிறப்பிப்பதும் நிச்சயமானதாகும், நிஜமானதாகும். ஜீவனைப் பெற்றுக் கொள்ள இது ஒன்றே வழியாயிருக்கிறது. 118“சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்க தரிசி கூறினான். இப்பொழுது பாருங்கள். வெளிச்சமின்றி இருளுமின்றி, மந்தாரமான நாளாக அது இருக்கும். இது பகலு மல்ல, இரவுமல்ல, அது தானே ஒரு வகையான மேக மந்தாரமான, பனிமூட்டமுள்ள, குளிர்ந்த நாளாக இருக்கும். ஆயினும், சூரியன் (Sun) ஒளியைத் தந்து கொண்டிருக்கும். பனிமூட்டம், மேகங்கள் இவற்றிற்கு மேலாக குமாரனானவர் ஒளியைத் தந்து கொண்டிருக் கிறார். நடக்கவும், எவ்வாறு நடந்து கொள்வது என்பதை காணவும் அவர் உங்களுக்கு போதுமான ஒளியைத் தந்து கொண்டிருக்கிறார். ஆனால், அந்நாளோ, பிரகாசமான, அழகான நாளல்ல, பாருங்கள்? எந்த ஒன்றும் அந்நாளில் பிழைத்திருக்க முடியாது. சூரியன் தன் ஒளிக்கிரணங்களை பாய்ச்ச முடியாத எந்த இடத்திலும் நீங்கள் எதையும் நட்டு வைக்கலாம். அப்படிச் செய்தால் அதன் வளர்ச்சி குன்றிப்போகும். நான் சொல்லுவது சரியா? விவசாயிகள் அறிவீர்கள். தானிய விதையை நிழலில் எங்காவது விதைத்து விட்டுப் பாருங்கள், அதன் வளர்ச்சி குன்றிப் போகிறது. ஃப்ரெட் அவர்களே! உங்களுடைய கோதுமைப் பயிரிலிருந்து நீங்கள் அதைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். நீங்கள் விதைத்திருக்கிற பொழுது, அது குளிரும் மழையும் கொண்ட மோசமான கோடைகாலமாக இருந்துவிட்டால், பயிரின் வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது. 119இச்சபை சாலங்கள் தோறும் சபையைக் குறித்த காரியமும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சி குன்றிப் போனதாக இருந்தது. ஸ்தாபனங்களினால் சபையின் வளர்ச்சி குன்றிப் போனது. ''உங்கள் பெயரை சபையின் புத்தகத்தில் எழுதிக் கொண்டு விட்டால் போதுமானது, கடவுள் ஒருவர் உண்டு என்பதைப் பற்றி அறிய நமக்கு போதுமான வெளிச்சம் கிடைத்து விட்டது'' என்கிறார்கள். அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 'கிறிஸ்து ஒருவர் இருக்கிறார் என்பதை அறியவும், நியாயத்தீர்ப்பு ஒன்று வருகிறதாயிருக்கிறது என்பதைப் பற்றி அறியவும் நமக்கு போதுமான வெளிச்சம் இருந்தது. எனவே நாம் நமது பெயர்களை புத்தகத்தில் எழுதி, நம்முடைய போதகரோடு கைகளைக் குலுக்கி, இன்னும் ஏனைய காரியங்களையும் செய்துவிட்டோம், அது போதும்'' என்கிறார்கள். சரி, ஆனால் இப்பொழுதோ சாயங்கால வேளையாயிருக்கிறது. நாகரிகமானது கிழக்கிலிருந்து கிளம்பி, மேற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது. நாம் இப்பொழுது மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம். இதற்கு மேல் போக நமக்கு முடியாது. நாம் கடத்தல், மறுபடியும் கிழக்குச் செல்வோம். நாம் மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம். 120''சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்“ என்று வேதம் கூறுகிறது. சாயங்காலத்தில் பிரகாசிக்கும் சூரியன் எத்தகையதா யிருக்கிறது? காலையில் உதிக்கும் சூரியனைவிட அது வேறு பட்டதா? அது அதே சூரியன்தான். நல்லது அப்படியானால், தேவன் என்ன வாக்குத்தத்தம் கொடுத்தார்? நாம் தற்போதைய காலத்தைக் குறித்து பேசுகையில், அதைக் குறித்து பேசப் போகிறோம். அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. 'சாயங்கால நேரத்தில் மேற்குத் திசையில் வெளிச்சம் உண்டாகும்'' என்றும், ''அது நீதியின் சூரியனை தன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு திரும்பக் கொண்டு வரும்'' என்றும், இந்த சபைக்காலங்களைப் பற்றி நாம் படித்துக் கொண்டே வருகையில் நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப் பேன். கிழக்கில் நடைபெற்ற அதே அற்புத அடையாளங்கள் யாவும், கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் இன்னுமொரு ஊற்றப்படுதலோடு மேற்கிலே நடைபெறும். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், அவ்வொளியில் மகிமைக்குப் போகும் பாதையை நிச்சயம் காண்பீர் அந்தத் தண்ணீர் வழியில் இன்று ஒளி உள்ளது வே வாலிபரே வயோதிபரே உம் பாவங்களைவிட்டு மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்படுவீர் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உங்களை நிரப்புவார் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டதால் தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே எனும் உண்மை தெரிந்ததுவே. ஓ, சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்குப் போகும் பாதையை அவ்வொளியில் காண்பீர், இத்தண்ணீரின் வழியில் இன்று ஒளி உள்ளதுவே, வாலிபரே வயோதிபரே மனந்திரும்புவீர் பாவங்களைவிட்டு இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்படுவீர் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உங்களை நிரப்புவார் அச்சாயங்கால ஒளியானது வந்துவிட்டது. இதைத்தான் பேதுருவும், “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்துவு மாக்கினார்'' என்று கூறினான். மேலும், ”நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றும் அவன் கூறினான். நான் உங்களுக்கு சில விஷயங்களை கூறட்டும். டாக்டர் கொடுக்கும் மருந்துச் சீட்டைப் பற்றி அன்றொரு நாளில் நான் குறிப்பிட்டுப் பேசினேன். டாக்டர் கொடுக்கும் மருந்து சீட்டின் படி மருந்து எடுத்துக்கொள்ள மக்கள் விரும்புகிறதில்லை. ஒரு மருத்துவர் உங்களுடைய பிணியிலிருந்து உங்களை சொஸ்த மாக்கத்தக்கதான ஒரு நிவாரணத்தை, ஒரு மருந்தை கொடுத்தால், நீங்கள் அதை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டால், அதினால் நீங்கள் மரித்தால், அதற்கு மருத்துவர் பொறுப்பாளியல்ல. இல்லை ஐயா, டாக்டர் கொடுத்த மருந்தை எடுத்துக் கொள்ளாதது உங்க ளுடைய குற்றம்தான். 121இப்பொழுது, ஒரு மருத்துவர் மருந்துச் சீட்டு ஒன்றைக் கொடுத்தால், நீங்கள் அதை ஒரு போலி மருந்தாளுனரிடம் (மருந்துச் சீட்டைப் பார்த்து கொடுப்பவர்) எடுத்துச் சென்றால், மருத்துவர் எழுதிக் கொடுத்துள்ள மருந்தோடு சேர்க்கக்கூடாத வேறு எதையோ ஒன்றைக் கலக்கி அதோடு அவன் சேர்த்துக் கொடுத்து விடுகிறானென்றால், அது உங்களைக் கொன்று விடும். உங்கள் சரீரத்திலுள்ள கிருமிகளைக் கொல்வதற்கான விஷமுள்ள மருந்துகளைப் பற்றியும், அவ்விஷ மருந்துகளுக்கு மாற்றாக, உங்களைக் கொல்லாமல் தடுக்கிற விஷ முறிவான மருந்துகளைப் பற்றியும், டாக்டர் தன்னுடைய படிப்பின்மூலம், ஆராய்ச்சியின் மூலமும் நன்கு அறிந்திருக்கிறார். அவ்விரண்டும் சமச்சீராகக் கொடுக்கப்பட வேண்டும். அளவுக்கதிகமாக 'ஆண்டிடோட்' என்று கூறப்படும் முறிவான மருந்தை கொடுத்துவிட்டால், அதனால் நோயாளிக்கு பயனேதும் இல்லை. அதிக விஷமுள்ள மருந்தைக் கொடுத்துவிட்டாலும், அது நோயாளியைக் கொன்று போடும். எனவே, சமச்சீரான அளவில் மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும். 'கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ? அங்கே இரண வைத்தியனும் இல்லையோ'' என்று தீர்க்கதரிசி கேள்வி கேட்கி றான். அவன் மேலும், 'அப்படியிருந்தும் ஏன் இன்னும் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?'' என்று கேட்கிறான். சபையின் நிலைமை என்ன? நமக்கு ஏன் அநேகம் வியாதிப்பட்டுள்ள சபைகள் உண்டாயிருக்கின்றன? காரணம் என்ன? ஏனெனில், நமக்கு சில போலியான மருந்தாளுனர்கள் இருந்து கொண்டு தவறான மருந்துச் சீட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது உண்மை . ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று அவர் சொல்லவில்லை. 122டாக்டரின் மருந்துச் சீட்டு என்ன சொல்கிறது? இங்கே பேதுரு இருக்கிறான். அவனிடம் இராஜ்யத்தின் திறவுகோல்கள் இருந்தன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இயேசுவே அவ்வாறு கூறியுள்ளார். அவர் என்ன கூறினார்? அதாவது, மருந்துச் சீட்டு கொடுப்பதற்காக, அதை எழுதுவதற்காக, பேதுருவிடம் நிரப்பிய பேனா இருந்தது. அவர்கள் ஆர்ப்பரித்து, சப்தமிட்டு, அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருக்கையில், இச்சப்தம் மக்களுக்கு கேட்டது. ஜனங்கள் சீஷர்களைப் பார்த்து, ''இவர்கள் மதுபானத்தினால் வெறி கொண்டிருக்கிறார்கள்'' என்று பரிகசித்தார்கள். அதற்கு பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் இது சம்பவிக்கும் என்று தேவன் கூறியுள்ளார். நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங் களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப் படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்'' என்றான். 123மேலும் பேதுரு “கோத்திரப் பிதாவாகிய தாவீதும் இதை முன்பே கண்டு கூறினான். ''அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது; என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்'' என்று தாவீதைக் குறித்து கூறினான். மேலும் பேதுரு, ''சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது'' என்றான். தாவீது தீர்க்கதரிசியாக இருந்தபடியால், கிறிஸ்து உயிர்த்தெழுவதைக் கண்டான். ”நீங்கள் சிலுவையில் அறைந்த அந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினா ரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்'' என்றான். “இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப் பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, சகோதரரே...'' என்றார்கள். ''டாக்டர் சீமோன் பேதுரு அவர்களே, நாங்கள் எவ்வாறு இதைப் பெற முடியும் என்பதை தெரிவித்து, அதற்குரிய சீட்டு எழுதிக்கொடுங்கள். பாவத்தி லிருந்து எங்களுக்கு சுகமடைதல் வேண்டும்'' என்றார்கள். ஓ! 124இப்படி இவர்கள் கேட்டதற்கு பேதுரு என்ன கூறினான் என்பதைப் பாருங்கள். பேதுரு 'சற்றுப் பொறுங்கள், நான் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டு எழுதித்தரப் போகிறேன், அது தானே நித்திய காலமாக விளங்கும் மருந்துச் சீட்டாகும், அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக் கிறது'' என்றான். அவன் என்ன கூறினான்? எவ்வாறு அதை அவன் நிர்ணயித்தான்? கத்தோலிக்கர் பெற்றுள்ளது போல் இருந்ததா அது? பாப்டிஸ்டுகளின் காரியத்தைப் போல் அது இருந்ததா? அவர்கள் ஒவ்வொருவரும் அதனோடே ஒன்றைக் கூட்டினார்கள், அல்லது ஒன்றை அதிலிருந்து எடுத்துப்போட்டார்கள். பெந்தெ கொஸ்தேயினரைப் போல் அது இருந்ததா? அவர்களும் கூட்டினார்கள், இதிலிருந்து எடுத்துப் போட்டார்கள். பேதுரு என்ன கூறுகிறான்? 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்றான். நித்தியமான நிவாரணச் சீட்டு இதுவே. ''அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது, இது ஒவ்வொரு சபைக்காலத்திலும் கொடுக்கத்தக்கதாக இருக்கிறது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதைக் கொடுங்கள்.'' 125ஓ தேவனே, என் கைகளை சுத்தம் செய்யும், என் இருதயத்தை சுத்தம் செய்யும், கர்த்தாவே. என் சிநேகிதர் ஒவ்வொருவரையும் நான் இதன் காரணமாக இழக்க நேரிட்டாலும் அந்தப் பரம வைத்தியர் என்னவிதமாக இந்த நிவாரணச் சீட்டை கொடுக்கச் சொன்னாரோ, அதேவிதமாக நான் இதைக் கொடுக்கட்டும். அநேக சபைகளில், நிறைய முறிவு மருந்துகளை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டும், கொடுக்கப்பட்டுள்ள நிவாரண மருந் தாகிய தேவனுடைய வார்த்தையிலிருந்து அநேகத்தை நீக்கிப் போட்டும் விடுகிறார்கள். அதினால் அந்த மருந்துச் சீட்டினால் எந்தவித பயனும் அற்றுப்போய், எவரையும் குணமடையச் செய்ய வில்லை. கை குலுக்கி சபையில் சேர்ந்து கொள்ளுதல், மற்றும் தெளித்தல் இன்னும் ஏனைய தவறான மருந்தைச் சாப்பிடுதலினால் தான், இன்றைக்கு அநேக சபைகள் செத்தவைகளாக இருந்து வருகின்றன. அவைகளின் உறுப்பினர்கள் கூட மரித்தவர்களாக இருக்கிறார்கள். ஓ, இரக்கம் வேண்டும், அது பாவ வியாதிக்கு நிவாரணத்திற்கான மருந்துச் சீட்டு அல்லவே அல்ல, அது மரண மாயிருக்கிறது. உங்களுக்கு ஜீவன் வேண்டுமானால், பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமானால், தேவன் கூறியவைகளைப் பின்பற்றுங்கள். அதனோடு ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். இங்கே தானே, வெளிப்படுத்தலின் புஸ்தகத்தில், “இதனோடே ஒன்றை எவராவது கூட்டினாலோ குறைத்தாலோ, ஜீவ புத்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப் படும்'' என்று சொல்லப்பட்டுள்ளது. ஓ, இதைக் கூறியவர் பிரதான வைத்தியராவார். நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? 126ஓ அந்த மகத்தான எபேசு சபைக்காலத்தில், இந்த வேதப் புரட்டு, ஸ்தாபனங்களை உண்டாக்க உள்ளே மெதுவாக நுழைய ஆரம்பித்த போது, சபைக்கு தேவன் ஏற்படுத்திய மேய்ப் பர்களுக்கு பதிலாக, கார்டினல்கள், பிஷப்புகள், போப்புகள், ஓவர்சீயர் சபைக்கு நியமிக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியைக் குறித்து அவர்கள் சபையாரிடம், “நீங்கள் அதை இனிமேல் இங்கே கொண்டிருக்க முடியாது'' என்றார்கள். யார் தலைவர் சபைக்கு. “இயேசுவின் நாமத்தில் இனிமேல் நீ பிரசங்கிக்கக் கூடாது'' என்று ஒரு தடவை பேதுருவுக்குக் கூறப்பட்டது. 'நீ பிரசங்கிக்கிற தாயிருந்தால் பிரசங்கிக்கலாம், ஆனால் இயேசுவின் நாமத்தினால் அதைச் செய்யக்கூடாது'' என்றார்கள். ஓ, பிசாசு அந்த நாமத்தை வெறுக்கிறான். பேதுரு முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் இருந்தான் என்று (ஸ்தாபனத்தினால் நிறைந்திருந்தானா?) வேதம் கூறுகிறது. அவன் “பொறுங்கள், நான் போய் ஜெனரல் ஓவர்சீர் அவர்களைப் பார்த்து, இந்தப் பரிசுத்த ஆவியைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கிறேன்'' என்று கூறினானா? 127நான் உங்களுக்கு ஒரு விஷயம் கூறுவேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் என்ற சபையில், எந்த ஒரு மனிதனையும் மிஷனரியாக அனுப்புவதற்கு முன்னால், அவர் மிஷனரியாக இருப்பதற்கு மனோநிலை ரீதியாக அவரது தகுதி போதுமானதுதானா என்பதை சோதித்தறிய அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கொண்டு செல்லுகிறார்கள். அம்மனோதத்துவ நிபுணர் அவரை சோதித்து அவர் தகுதியுள்ளவர்தானா என்பதை நிதானிக்க வேண்டுமாம். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? பெந்தெகொஸ்தே அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்வாறு நடக்கிறது. அதைப் பற்றி எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. மிஷனரியை சோதித்து, அவரைத் தேர்ந்தெடுக்க நீதிபதியாக இருப்பது யார்? மனோதத்துவ நிபுணரா அல்லது பரிசுத்த ஆவியா? மனித ஆளுகைக்குள் சபையை வைத்திருக்கையில், அப்படிப்பட்ட காரியம் தான் நடக்கும். மனிதன் உண்டாக்கிய கொள்கைள், மனி தனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்கள் இருப்பதைப் பாருங்கள். பெந்தெகொஸ்தேயின் காலத்திற்குள் நாம் வரும் வரை காத்திருந்து அதில் நடப்பதைப் பாருங்கள்! தேவன் உலகத்தை அக்கினிக்கிரை யாக்குவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அதையும் சுட்டெரிப்பார். ஆம், ஐயா. நிச்சயம் அப்படித்தான். காலம் முழுவதிலும் அந்த அக்கினி பற்றியெரிகிறதை நீங்கள் பார்ப்பீர்கள். மிகவும் சரியாக நீங்கள் அதைக் காணலாம். 128ஆனால், மகிமை பொருந்திய ஓர் நாளில் அவர் வருவார். நினைவில் வைத்து கவனியுங்கள். ஏழு சபைக்காலங்கள் உள்ளன. மணவாளனை எதிர்கொள்ள அவர்கள் புறப்பட்டுப் போனபோது, சிலர் முதலாம் ஜாமத்தில் நித்திரையடைந்தனர். (அது சரியா?) சிலர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமங்கள் மட்டும் நித்திரையடைந்தார்கள். கவனியுங்கள், (அவர்கள் மரிக்க வில்லை, நித்திரையாயிருந்தார்கள்). ஏழாம் ஜாமத்தில் “இதோ மணவாளன் வருகிறார், அவரை எதிர்கொள்ள புறப்பட்டுப் போங்கள்'' என்ற ஒரு சப்தம் உண்டாயிற்று. நித்திரையாயிருந்த கன்னியர் யாவரும் விழித்தெழுந்தனர்! பிரகாசமான மந்தாரமில்லாத அக்காலையில் கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழும்பொழுது, (மேகமில்லாத சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கும்) பிரகாசமுள்ள, அழகான காலைப்பொழுது நித்தியத்திற்குள் விடியும் வானங்களுக்கப்பால் உள்ள தங்கள் வீடுகளுக்கு பூமியிலுள்ள இரட்சிக்கப்பட்டோர் கூடிச் சேருவர் அத்தேசத்தில் பெயர்ப்பட்டியல் வாசிக்கும் போது நான் அங்கிருப்பேன். புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில், புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள் பெயர்கள் வாசிக்கையில், நான் அங்கிருப்பேன் காலை முதல் மாலை வரை நமது எஜமானுக்காய் உழைப்போம் அவரது அற்புதமான நேசத்தையும், பராமரிப்பையும் குறித்து பேசுவோம். வாழ்வெல்லாம் முடிந்து, பூமியில் நம் கிரியை முடிவு பெறுகையில், தூர தேசத்தில் பெயர் வாசிக்கப்படுகையில் 129ஒவ்வொரு தேவ பிள்ளையும் இப்பொழுது தன் கரங்களை உயர்த்துவோமாக. தொலைதூர தேசத்தில் பெயர் கூப்பிட்டு அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், தொலைதூர தேசத்தில் பெயர் சொல்லி அழைக்கையில், நானும் அங்கிருப்பேன். இனிமையான அந்த வரப்போகும் நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் நாளில், அவ்வழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் சபையின் இப்பழங்கால பாடலை நீங்கள் நேசிக்கிறீர்களா? சம்பூர்ணரான நம் பரம பிதாவுக்கு நம் துதியின் காணிக்கையைச் செலுத்துவோம் அவரது அன்பின் மகிமையான ஈவுக்காகவும், நம்நாளை பரிசுத்தமாக்கும் அவர்தம் ஆசிகளுக்காகவும், இனிமையான வரப்போகும் அந்நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம். இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில், (''சகோதரனே, நான் உன்னை சந்திப்பேன்'' என்று சொல்லுங்கள்). அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் அந்த மனங்குளிர வைக்கும் பாடலைப் பாடுவோம் (யாவரும் பாடுங்கள் இப்பொழுது) நமது ஆவி இனி துக்கமாயிராது பெருமூச்செறிவதில்லை, ஏனெனில் இளைப்பாறுதலின் ஆசிகள் உண்டெமக்கே ஒவ்வொருவரும் கரங்களை உயர்த்தியவாறே இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் ஓ நாம் அந்த அழகான அக்கரைத்தேசத்தில் சந்திப்போம், இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் நாம் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் சந்திப்போம். 130நம்முடைய தலைகளைத் தாழ்த்தியவாறே இப்பொழுது நாம் இதைச் சொல்லுவோம் (சகோ.பிரன்ஹாம் அவர்கள் சொல்லச் சொல்ல சபையார் சொற்றொடர்களை திரும்பச் சொல்லுகிறார்கள்) “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன். என் பாவத்தைப் போக்க மாம்சத்தில் தோன்றிய தேவனே அவர். என்னுடைய தகுதிகளின் பேரில் நான் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. என்னில் ஒன்றுமில்லை. ஆனால் நான் பயபக்தியுடன், என்னுடைய இரட்சகரும், என்னுடைய தேவனும், இராஜாவுமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் தகுதிகளின் பேரிலேயே விசுவாசம் கொண்டுள்ளேன். நான் அவரை நேசிக்கிறேன். ஆமென். 131நாளை இரவு 7 மணிக்கு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் சிமிர்னா சபையின் காலத்தைக் குறித்துப் பார்ப்போம். இனிமையான அந்த வரப்போகும் நன்னாளில் (நம்முடைய தலைகள் கவிழ்ந்திருக்கட்டும் இப்பொழுது) அந்த அழகான அக்கரைத் தேசத்தில் நாம் சந்திப்போம் இனிமையான அந்த வரப்போகும் அந்நாளில் நாம் அந்த அழகான அக்கரைத் தேசத்தில் சந்திப்போம். இப்பொழுது ஒவ்வொருவரும், மெதுவாக, இனிமையாகப் பாடுவோம். ஒ, சம்பூர்ணரான நம் பரம பிதாவுக்கு அவரது மகிமை பொருந்திய அன்பின் ஈவுக்காக அவருக்கு நமது துதியின் காணிக்கையைச் செலுத்துவோம் (சகோ. பிரன்ஹாம் அவர்கள், சபையோர் பல்லவியை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கையில் புறப்பட்டுச் செல்லுகிறார் - ஆசி).